முரளி மனோகர் ஜோஷி
முரளி மனோகர் ஜோஷி | |
---|---|
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் | |
பதவியில் 1998–2004 | |
பின்வந்தவர் | அர்ஜூன் சிங் |
தொகுதி | ராஜ்ய சபா |
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் | |
பதவியில் 1999–2004 | |
பின்வந்தவர் | கபில் சிபல் |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2009 | |
முன்னவர் | முனைவர் ராஜேஷ்குமார் மிஸ்ரா |
தொகுதி | வாரணாசி |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1977–1980 | |
முன்னவர் | நரேந்திர சிங் பிஷ்ட் |
பின்வந்தவர் | ஹரிஷ் ராவத் |
தொகுதி | அல்மோரா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 5 சனவரி 1934 புது தில்லி, ஆங்கிலேய இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
சமயம் | இந்து |
கையொப்பம் | ![]() |
முரளி மனோகர் ஜோஷி ஒர் இந்திய அரசியல் பிரமுகர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இவர் 1991 முதல் 1993 வரை அக்கட்சியன் தேசியத் தலைவராகவும் இருந்திருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இவர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். இவரின் இந்திய அரசியல்-சமூகப் பார்வைக்காகவும், ஆர்எஸ்எஸ்(RSS) உடனான இவரின் தொடர்புக்காகவும் சிறப்பாக அறியப்படுகிறார்.
பொருளடக்கம்
தனி வாழ்க்கை[தொகு]
முரளி மனோகர் ஜோஷி 1934 ஜனவரி 5-ம் நாள் தற்போதைய உத்ராகண்ட் மாநிலத்தின் குமோன் மலைப்பகுதியில் (Kumaon Hills) நைனிடாலில் பிறந்தார். இயற்பியலில் நிறமாலையியலில்(Spectroscopy) முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் அதன் பிறகு, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆசானாகப் பணிபுரிந்தார்[சான்று தேவை]. ஆர்எஸ்எஸ் உடன் ஏற்பட்டத் தொடர்பின் காரணமாக பின்னாளில் அரசியலுக்கு வந்தார்[சான்று தேவை].
கல்வி[தொகு]
ஜோஷி தனது தொடக்கக் கால கல்வியை சாந்த்பூர், பிஜ்னோர் மற்றும் அல்மோரா ஆகிய இடங்களில் கற்றார். இளம் அறிவியல்/அறிஞர் (B. Sc) பட்டத்தை மீரட் கல்லூரியிலும், முதுகலை அறிவியல்/அறிஞர் பட்டத்தை அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். தனது முனைவர் பட்டத்தையும் அலகாபாத் பல்கலைக்கழகத்திலேயே நிறமாலையியலில் முடித்தார். மேலும், ஒர் இயற்பியல் ஆய்வுக் கட்டுரையை இந்தியில் எழுதி வெளியிட்டுள்ளார்[1].
அரசியல் வாழ்க்கை[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
![]() |
விக்கிமீடியா பொதுவகத்தில் முரளி மனோகர் ஜோஷி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- ↑ "ஆய்வுக் கட்டுரை". பார்த்த நாள் ஏப்ரல் 15, 2013.
- இந்திய அரசியல்வாதிகள்
- 1934 பிறப்புகள்
- மாநிலங்களவை உறுப்பினர்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 15வது மக்களவை உறுப்பினர்கள்
- 6வது மக்களவை உறுப்பினர்கள்
- பாரதிய ஜனதா கட்சித் தேசியத் தலைவர்கள்
- வாழும் நபர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்