கல்யாண் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்யாண் சிங்
இராஜஸ்தான் மாநில ஆளுநர்
பதவியில்
4 செப்டம்பர் 2014 – 8 செப்டம்பர் 2019
முன்னவர் மார்கரட் அல்வா
பின்வந்தவர் கல்ராஜ் மிஸ்ரா
இமாச்சலப் பிரதேச ஆளுநர்
பதவியில்
28 சனவரி 2015 – 12 ஆகஸ்டு 2015
முன்னவர் ஊர்மிளா சிங்
பின்வந்தவர் ஆச்சாரிய தேவ விரதன்
நாடாளுமன்ற மக்களவை/மாநிலங்களை உறுப்பினர்
ஏடா மக்களவைத் தொகுதி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
முன்னவர் தேவேந்திர சிங் யாதவ்
பின்வந்தவர் ராஜ்வீர் சிங்
உத்தரப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
24 சூன் 1991 – 6 டிசம்பர் 1992
முன்னவர் முலாயம் சிங் யாதவ்
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
21 செப்டம்பர் 1997 – 12 நவம்பர் 1999
முன்னவர் மாயாவதி
பின்வந்தவர் ராம்பிரகாஷ் குப்தா
தனிநபர் தகவல்
பிறப்பு 5 சனவரி 1932 (1932-01-05) (அகவை 91)
அத்ரௌலி, அலிகார் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ராமாவதி
பிள்ளைகள் 1 மகன் 1 மகள்
இருப்பிடம் ராஜ் பவன், இராஜஸ்தான்
சமயம் இந்து சமயம்
As of 20 சனவரி, 2009
Source: [1]

கல்யாண் சிங் (Kalyan Singh) (பிறப்பு:1932) (இறப்பு 2021) இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருமுறை பணியாற்றியவர். இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2009 - 2014 ஆண்டுகளில் செயல்பட்டவர். பின்னர் 4 செப்டம்பர் 2014 முதல் 8 செப்டம்பர் 2019 முடிய இராஜஸ்தான் மாநில ஆளுநராக செயல்பட்டார்.[1][2] கல்யாண் சிங், உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த காலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது

அரசியல்[தொகு]

முதலமைச்சர் பதவியில்[தொகு]

சூன் 1991 அன்று முதன் முறையாக உத்தரப் பிரதேச மாநில முதலைமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பாபர் மசூதி இடிப்பு அன்றே தனது முதலமைச்சர் பதவியை துறந்தார். பின்னர் 1997 முதல் 1999 முடிய இரண்டாம் முறையாக மீண்டும் பிரதேச மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

மக்களவை உறுப்பினர் பதவியில்[தொகு]

ஏடா மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்று, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2009 முதல் ஏப்ரல் 2014 முடிய செயல்பட்டவர்.

ஆளுநர் பதவியில்[தொகு]

கல்யாண் சிங் 4 செப்டம்பர் 2014 முதல் 8 செப்டம்பர் 2019 முடிய இராஜஸ்தான் மாநில ஆளுநராக செயல்பட்டவர்.

மறைவு[தொகு]

21 ஆகஸ்டு 2021 அன்று தமது 89வது அகவையில் கல்யாண் சிங் உடல்நலக் குறைவால் லக்னோவில் மறைந்தார். [4][5]

விருது[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_சிங்&oldid=3407513" இருந்து மீள்விக்கப்பட்டது