சுரேஷ் மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேஷ் மேத்தா
குஜராத் மாநிலத்தின் 11வது முதலமைச்சர்
பதவியில்
21 அக்டோபர் 1995 – 19 செப்டம்பர் 1996
முன்னவர் கேசுபாய் படேல்
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
தனிநபர் தகவல்
பிறப்பு 18 ஆகஸ்டு 1947
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி (till 2007)
குஜராத் பரிவர்த்தன் கட்சி(2007-2014)
சமயம் இந்து சமயம்

சுரேஷ் மேத்தா (Suresh Mehta) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், குஜராத் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக 1995 முதல் 1996 முடிய செயல்பட்டவர்.

அரசியல்[தொகு]

குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மேத்தா பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். 1995-இல் குஜராத் மாநில முதலமைச்சர் கேசுபாய் படேலின் அமைச்சரவையில் பதவி வகித்தவர் சுரேஷ் மேத்தா. அக்டோபர் 1995-இல் சங்கர்சிங் வகேலாவின் எதிர்ப்பால், கேசுபாய் படேல் முதல்வர் பதவியிலிருந்து விலகியதன் பின்னர் சுரேஷ் மேத்தா, குஜராத்தின் 11வது முதலமைச்சராக அக்டோபர் 1995 முதல் செப்டம்பர் 1996 முடிய பதவி வகித்தவர்.

சங்கர்சிங் வகேலா பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி இராஷ்டிரிய ஜனதா கட்சியை துவக்கிய போது, சுரேஷ் மேத்தாவின் ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்பட்டது. மீண்டும் , 1998-இல் குஜராத் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கேசுபாய் படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசில், சுரேஷ் மேத்தா தொழில் துறை அமைச்சராக 2002 முடிய பதவி வகித்தார்.[1] 2007 குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், 8 டிசம்பர் 2007-இல் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதியின் தலைமையை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி கேசுபாய் படேல் துவக்கிய இராஷ்டிரிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_மேத்தா&oldid=3245546" இருந்து மீள்விக்கப்பட்டது