மனோகர் பாரிக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனோகர் பாரிக்கர்
Manohar Parrikar (cropped).jpg
முதலமைச்சர், கோவா
முன்னவர் லட்சுமிகாந்த் பர்சேகர்
முதலமைச்சர், கோவா
பதவியில்
மார்ச் 9, 2012 – நவம்பர் 8, 2014
ஆளுநர் கே. சங்கரநாராயணன்
பாரத் வீர் வான்ச்சூ
மார்கரட் ஆல்வா
ஓம் பிரகாஷ் கோலி
மிருதுளா சின்ஹா
முன்னவர் திகம்பர் காமத்
பின்வந்தவர் லட்சுமிகாந்த் பர்சேகர்
பதவியில்
அக்டோபர் 24, 2000 – பிப்ரவரி 2, 2005
ஆளுநர் மொஹமது பாசல்
கிதார்நாத் சகானி
மொஹமது பாசல்
எஸ். சி. ஜாமீர்
முன்னவர் பிரான்சிஸ்கோ சர்டின்கா
பின்வந்தவர் பிரதாப்சிங் ரானே
தனிநபர் தகவல்
பிறப்பு மனோகர் கோபாலகிருஷ்ண பிரபு பாரிக்கர்
13 திசம்பர் 1955 (1955-12-13) (அகவை 63)
மபுசா, போர்த்துக்கீசிய இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மேதா பாரிக்கர்
பிள்ளைகள் 2
படித்த கல்வி நிறுவனங்கள் இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை
சமயம் இந்து

மனோகர் கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர் (பிறப்பு: திசம்பர் 13, 1955 ) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2017 மார்ச்சு 14 திகதி முதல் கோவா மாநில முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். [1][2] ஏற்கனவே 2000 ஆண்டு முதல் 2005 வரையிலும் பின்னர் 2012 முதல் 2014 வரை கோவா முதலமைச்சராக இருந்தார்.

2017 கோவா சட்டமன்றத் தேர்தலில் குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, மனோகர் பாரிக்கர் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கோவாவில் ஆட்சி அமைத்தார்.[3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பாரிக்கர் கோவா மாநிலத்தின் மபுசாவில் பிறந்தவர். அவர் மார்கோவாவில் உள்ள லயோலா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். மராத்தியில் தனது இடைநிலை கல்வியை நிறைவு செய்தவர் 1978ல் பம்பாயிலுள்ள ஐஐடி யில் உலோகவியலில் பொறியியல் படித்தார். இந்திய வரலாற்றிலேயே ஐஐடி'யில் படித்த முதல் மாநில முதல்வர் இவர் தான். மனோகர் பாரிக்கரும் நந்தன் நிலெக்கணியும் 1978 ஆம் ஆண்டில் ஐஐடியில் இருந்து ஒன்றாக பட்டம் பெற்றவர்கள்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரான பாரிக்கர் அக்கட்சியின் முதல் கோவா முதல்வர் ஆவார். பாரிக்கர் முதலில் 1994 ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஜூன் 1999 முதல் நவம்பர் 1999 வரை எதிர்க்கட்சி தலைவராக பதவிவகித்தார். பாரிக்கர் அக்டோபர் 24 , 2000ல் முதல் முறையாக கோவாவின் முதல்வர் ஆனார், ஆனால் அவரது பதவிக்காலம் பிப்ரவரி 27, 2002 வரை மட்டுமே நீடித்தது. ஜூன் 5, 2002ல் அவர் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 29 ஜனவரி 2005ல், நான்கு பா.ஜ.க உறுப்பினர்கள் பதவி விலகியதன் காரணமாக இவரது அரசாங்கம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. எனினும் பிப்ரவரி 2005ல் பெரும்பான்மையை நிரூபித்தார். 2007 ஆம் ஆண்டில், பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.க அரசை, திகம்பர் காமத் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கோவா மாநில தேர்தலில் தோற்கடித்தது. மீண்டும் பா.ஜ.க மார்ச் 2012 ல் நடைபெற்ற கோவா சட்டசபை தேர்தலில் 24 இடங்களை வென்று மீண்டும் வெற்றி பெற்றது.

2014 ஆம் ஆண்டின் இந்தியப் பொதுத் தேர்தலில் கோவாவின் இரு மக்களவைத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றது. பாரிக்கர், உத்திரப் பிரதேசத்திலிருந்து ராஜ்ய சபை உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மோதியின் அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தின் போது பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றார்[4].

மார்சு 2017-இல் மீண்டும் கோவா மாநில முதலமைச்சராக இரண்டாம் முறையாக பதவி ஏற்றார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோகர்_பாரிக்கர்&oldid=2495313" இருந்து மீள்விக்கப்பட்டது