பெமா காண்டு
பெமா காண்டு Pema Khandu | |
---|---|
![]() | |
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 17 சூலை 2016 | |
முன்னவர் | நபம் துக்கி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கயாங்கர் கிராமம், தவாங் மாவட்டம் | 21 ஆகத்து 1979
தேசியம் | இந்தியர் |
பிற அரசியல் சார்புகள் |
இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | 3 (2 மகன்கள் 1 மகள்) |
இருப்பிடம் | தவாங் மற்றும் இட்டாநகர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்து கல்லூரி, (தில்லி பல்கலைக்கழகம்) |
பணி | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
பெமா காண்டு என்பவர் அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு உயிரிழந்த, முன்னாள் முதல்வர் டோர்ஜீ காண்டுவின் முதல் மகன் ஆவார். இவர்தான் இந்தியாவின் மிகவும் இளம் வயது முதல்வராவார். தந்தையின் மறைவைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் சட்டமன்றத்துக்குப் போட்டியிட்டு, 2011 இல் முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். பின் 2014ல் நடந்த தேர்தலில், முக்தோ தொகுதியில் இருந்து போட்டியின்றி வென்றார். இவர் தில்லி பல்கலைக் கழகத்தின் இந்துக் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றவர். இதற்கு முன் நபம் துக்கி அமைச்சரவையில் மாநில நீர்வளம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1] நுபம் துகி அரசுக்கு எதிராக கலிகோ புல் தலைமையில் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சியைக் கவிழ்த்தபோது, தனது அமைச்சர் பதவியைவிட்டு விலகினார். இதற்கிடையில் நுபம் துகி தொடர்ந்த வழக்கில் ஆளுநர் ஆட்சியைக் கலைத்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து. நபம் துக்கி மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். சட்டமன்றம் கூடியபோது நபம் துக்கியும், சட்ட மன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக, பெமா காண்டுவை புதிய முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "அருணாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக பெமா காண்டு பதவி ஏற்றார்!". தமிழ் மித்ரன். http://www.tamilmithran.com/article-source/Nzg0NjQ3/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%af%86%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d!#.V5DcmxIxH5c. பார்த்த நாள்: 21 சூலை 2016.
- ↑ "அருணாச்சல் முதல்வராக பெமா காண்டு அமைச்சரவை குறித்து விரைவில் முடிவு". தினமலர். 17 சூலை 2016. http://www.dinamalar.com/news_detail.asp?id=1565827. பார்த்த நாள்: 21 சூலை 2016.