முலாயம் சிங் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைவர் சமாஜ்வாதி கட்சி
பதவியில்
1992–2017
முன்னவர் பதவி உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் அகிலேஷ் யாதவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
23 மே 2019 - 10 அக்டோபர் 2022
முன்னவர் தேஜ் பிரதாப் சிங் யாதவ்
தொகுதி மைன்புரி
பதவியில்
2014–2019
முன்னவர் ராமகாந்த் யாதவ்
பின்வந்தவர் அகிலேஷ் யாதவ்
தொகுதி அசாம்கார்
பதவியில்
2009–2014
தொகுதி மைன்புரி
பதவியில்
2004–2004
தொகுதி மைன்புரி
பதவியில்
1998–2004
முன்னவர் டி பி. யாதவ்
பின்வந்தவர் இராம் கோபால் யாதவ்
தொகுதி சம்பல்
பதவியில்
1996–1998
தொகுதி மைன்புரி
15வது முதலமைச்சர் உத்திரப்பிரதேசம்
பதவியில்
29 ஆகத்து 2003 – 13 மே 2007
முன்னவர் மாயாவதி
பின்வந்தவர் மாயாவதி
பதவியில்
5 திசம்பர் 1993 – 3 சூன் 1995
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் மாயாவாதி
பதவியில்
5 திசம்பர் 1989 – 24 சூன் 1991
முன்னவர் நா. த. திவாரி
பின்வந்தவர் கல்யாண் சிங்
பாதுகாப்புத் துறை அமைச்சர்
பதவியில்
1 சூன் 1996 – 19 மார்ச் 1998
பிரதமர் தேவ கௌடா, ஐ. கே. குஜரால்
முன்னவர் பிரமோத் மகாஜன்
பின்வந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்
சட்டமன்ற உறுப்பினர் உ.பி.
பதவியில்
1967–1969
முன்னவர் நாது சிங்
பின்வந்தவர் பிசாம்பார் சிங் யாதவ்
தொகுதி ஜஸ்வந்தநகர்
பதவியில்
1974–1980
முன்னவர் பிசம்பார் சிங் யாதவ்
பின்வந்தவர் பல்ராம் சிங் யாதவ்
தொகுதி ஜஸ்வந்தநகர்
பதவியில்
1985–1996
முன்னவர் பல்ராம் சிங் யாதவ்
பின்வந்தவர் சிவபால் சிங் யாதவ்
தனிநபர் தகவல்
பிறப்பு 22 நவம்பர் 1939 (1939-11-22) (அகவை 83)
சைபை, ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 10 அக்டோபர் 2022(2022-10-10) (அகவை 82)
குருகிராம், அரியானா
அரசியல் கட்சி சமாஜ்வாதி கட்சி (1992–முதல்)
பிற அரசியல்
சார்புகள்
* சோசலிச கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) (1) மாலதி தேவி (2) சாதன குப்தா
பிள்ளைகள் அகிலேஷ் யாதவ்

Prateek Yadav (step-son)[1]

இருப்பிடம் சைபா, இட்டாவா மாவட்டம், உத்திரப் பிரதேசம்
கல்வி முதுநிலை, (அரசியல் அறிவியல்), (ஆங்கில இலக்கியம்), இளங்கலை கல்வியியல்
படித்த கல்வி நிறுவனங்கள் கரம் சேத்திரா முதுகலை கல்லூரி, எடாவா
ஏ. கே. கல்லூரி, சிக்கோகபாத்
பி. ஆர். கல்லூரி
ஆக்ரா பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி
தொழில் விவசாயம், முன்னாள் ஆசிரியர்

முலாயம் சிங் யாதவ் (நவம்பர் 22, 1939- அக்டோபர் 10 , 2022 ) உத்திரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் ஆவார். இவர் உத்திரப்பிரதேசத்தின் எடாவா (Etawah) மாவட்டத்திலுள்ள சைபை (Saifai) கிராமத்தில் பிறந்தார்[2]. இவர் பயிற்சி பெற்ற ஆசிரியரும் மல்யுத்த வீரரும் ஆவார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மாலதி தேவி 2003-இல் இறந்துவிட்டார், இவர்களுக்குப் பிறந்த மகன் அகிலேஷ் யாதவ் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இரண்டாவது மனைவி சாதனா அதிகம் அறியப்படாதவர். இவர்களுக்கு 5 வயதில் பிரதிக் என்ற மகன் உள்ளார்[3][4].

இவர் மூன்று முறை உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். ஒரு முறை இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.

இளமையும் கல்வியும்[தொகு]

முலாயம் சிங் யாதவ், மூர்த்தி தேவி மற்றும் சுகர் சிங் யாதவ் ஆகியோருக்கு மகனாக 22 நவம்பர் 1939 அன்று, இந்தியாவின் உத்தரப் பிரதேசம், மாநிலத்தின் இட்டாவா மாவட்டத்தில் உள்ள சைபை கிராமத்தில் பிறந்தார்.[3] யாதவ் அரசியல் அறிவியலில் மூன்று பட்டங்களை பெற்றுள்ளார். இளங்கலைப் பட்டத்தினை இட்டாவாவில் உள்ள கர்ம் சேத்தராவிலும் பி. டி. பட்டத்தினை சிகோகபாத்தில் உள்ள ஏ. கே. கல்லூரியிலிருந்தும், ஆக்ரா பல்கலைக்கழகத்தின் பி. ஆர். கல்லூரியில் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றார்.[2]

தொடக்ககால அரசியல்[தொகு]

இராம் மனோகர் லோஹியா மற்றும் இராஜ் நரேன் போன்ற தலைவர்களால் வளர்க்கப்பட்ட யாதவ், 1967-இல் உத்தரப்பிரதேசத்தின் சட்டமன்றத்தில் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். யாதவ் எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார்.[5] 1975-ஆம் ஆண்டில், இந்திரா காந்தியின் அவசரநிலைச் சட்டத்தின் போது, ​​யாதவ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார்.[6] இவர் முதலில் 1977-இல் மாநில அமைச்சரானார். பின்னர், 1980-இல், உத்தரபிரதேசத்தில் லோக் தளம் (மக்கள் கட்சி) தலைவராக ஆனார். பின்னர் ஜனதா தளத்தின் (மக்கள் கட்சி) ஒரு பகுதியாக இக்கட்சி மாறியது. 1982-இல், இவர் உத்தரப் பிரதேச சட்ட சபையில் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1985 வரை இந்தப் பதவியில் இருந்தார். லோக்தளம் கட்சி பிளவுபட்டபோது, ​​யாதவ் கிராந்திகாரி மோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கினார்.[7]

முதலமைச்சராக[தொகு]

முதலாவது ஆட்சி[தொகு]

யாதவ் முதன்முதலில் 1989-இல் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சரானார்.[8] நவம்பர் 1990-இல் வி. பி. சிங் தேசிய அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பிறகு, யாதவ் சந்திரசேகரின் ஜனதா தளம் (சோசலிஸ்ட்) கட்சியில் சேர்ந்தார். இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவுடன் முதலமைச்சராக பதவியில் தொடர்ந்தார். ஏப்ரல் 1991-இல் இந்தியத் தேசிய காங்கிரசு தனது ஆதரவை திரும்பப் பெற்றபோது இவரது அரசாங்கம் வீழ்ந்தது. 1991-ஆம் ஆண்டின் மத்தியில் உத்தரப் பிரதேச சட்டசபைக்கு இடைக்காலத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதில் முலாயம் சிங்கின் கட்சி பாஜகவிடம் ஆட்சியை இழந்தது.[9]

இரண்டாம் முறையாக[தொகு]

1992-இல், யாதவ் சமாஜ்வாதி கட்சியை நிறுவினார். 1993-ஆம் ஆண்டு, நவம்பர் 1993-இல் நடைபெறவிருந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத்திற்கான தேர்தலுக்காக இவர் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இடையேயான கூட்டணி, மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுத்தது.[10] காங்கிரசு மற்றும் ஜனதா தளம் ஆதரவுடன் யாதவ் உத்தரபிரதேச முதல்வரானார். 1990ஜஇல் அயோத்தி நிலைப்பாடு குறித்த இவரது நிலைப்பாடு எவ்வளவு சர்ச்சையை ஏற்படுத்தியதோ, அதேபோன்று உத்தரகாண்ட் மாநிலத்துக்கு தனி மாநில உரிமை கோரும் இயக்கத்தின் மீதான இவரது நிலைப்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியது. 1994-ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று முசாபர்நகரில் உத்தராகண்டம் ஆர்வலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. இதற்கு உத்தரகாண்டம் ஆர்வலர்கள் இவரைப் பொறுப்பேற்க வலியுறுத்தினர். சூன் 1995-இல் இவர் இந்தப் பதவியில் தொடர்ந்தார்.[11]

வகித்த பதவிகள்[தொகு]

முலாயம் சிங் யாதவ் 10 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 7 முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[12][13][14]

# முதல் வரை பதவி கட்சி
1. 1967 1969 சட்டமன்ற உறுப்பினர் முதல் முறை, ஜஸ்வந்த்நகர் (4-ஆவது சட்டமன்றம்) சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி
2. 1974 1977 சட்டமன்ற உறுப்பினர் இரண்டாவது முறை, ஜஸ்வந்த்நகர் பாரதிய கிராந்தி தளம்
3. 1977 1980 சட்டமன்ற உறுப்பினர் மூன்றாவது முறை, ஜஸ்வந்த்நகர் பாரதிய லோக் தளம்
4. 1982 1985 சட்டமேலவை உறுப்பினர்
5. 1985 1989 சட்டமன்ற உறுப்பினர் நான்காவது முறை, ஜஸ்வந்த்நகர் லோக் தளம்
6. 1989 1991 * சட்டமன்ற உறுப்பினர் ஐந்தாவது முறை, ஜஸ்வந்த்நகர்
* உத்தரப் பிரதேச முதல்வராக (முதல்முறை)
ஜனதா தளம்
7. 1991 1993 சட்டமன்ற உறுப்பினர் ஆறாவது முறை, ஜஸ்வந்த்நகர், நித்காலி காலன், திகார் (இடைத் தேர்தல்) ஜனதா தளம்
8. 1993 1996 * சட்டமன்ற உறுப்பினர் ஏழாவது முறை, ஜஸ்வந்த்நகர், சிக்காகோபாத்
* உத்தரப் பிரதேச முதல்வர் (இரண்டாவது முறை-1993-1995)
சமாஜ்வாதி கட்சி
9. 1996 1996 சட்டமன்ற உறுப்பினர் எட்டாவது முறை, சகாசுவான் (பதவி விலகல் 1996) சமாஜ்வாதி கட்சி
10. 1996 1998 * நாடாளுமன்ற உறுப்பினர் (1 முதல் முறை), மைன்புரி, 11-ஆவது நாடாளுமன்றம், பாதுகாப்புத் துறை அமைச்சர் சமாஜ்வாதி கட்சி
11. 1998 1999 நாடாளுமன்ற உறுப்பினர் (2-ஆம் முறை) சம்பல், 12-ஆவது நாடாளுமன்றம் சமாஜ்வாதி கட்சி
12. 1999 2004 நாடாளுமன்ற உறுப்பினர் (3-ஆம் முறை) சம்பல் & கனுஜ், 12-ஆவது நாடாளுமன்றம் (பதவி விலகல் 2000) சமாஜ்வாதி கட்சி
13. 2003 2007 * உத்தரப் பிரதேச முதல்வர் (மூன்றாவது முறை)
* சட்டமன்ற உறுப்பினர் (9-வது முறை) குன்னாவூர் இடைத்தேர்தல் (2004-2007)
சமாஜ்வாதி கட்சி
14. 2004 2004 நாடாளுமன்ற உறுப்பினர் (4-ஆம் முறை) சம்பல் & கனுஜ், 14-ஆவது நாடாளுமன்றம், மைபுரி, (பதவி விலகல் 2004) சமாஜ்வாதி கட்சி
15. 2007 2009 சட்டமன்ற உறுப்பினர் (9-வது முறை) குன்னாவூர் & பாரதானா (பதவி விலகல் 2009) சமாஜ்வாதி கட்சி
16. 2009 2014 நாடாளுமன்ற உறுப்பினர் (5-ஆம் முறை) மைன்பூர் சமாஜ்வாதி கட்சி
17. 2014 2019 நாடாளுமன்ற உறுப்பினர் (6-ஆம் முறை) அசாம்கார் & மைன்புரி (பதவி விலகல் மைன்புரி 2014) சமாஜ்வாதி கட்சி
18. 2019 2022 நாடாளுமன்ற உறுப்பினர் (6-ஆம் முறை) மைன்புரி (இறப்பு அக்டோபர் 2022) சமாஜ்வாதி கட்சி

குடும்ப வாழ்க்கை[தொகு]

யாதவ் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் மனைவி, மால்தி தேவி, 1974 முதல், மே 2003-இல் இறக்கும் வரை, தனது ஒரே குழந்தையான அகிலேஷ் யாதவைப் பெற்றெடுக்கும் போது ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து, மந்த நிலையிலிருந்தார். அகிலேஷ் யாதவ் முலாயம் சிங் யாதவின் முதல் மனைவி மால்தி தேவிக்கு பிறந்த ஒரே குழந்தை. அகிலேஷ் 2012 முதல் 2017 வரை உத்தரபிரதேச முதல்வராக இருந்தார்.[3][4] முலாயம் சாதனா குப்தாவுடன் 1990களில் மால்தி தேவியை திருமணம் செய்துகொண்ட போதே உறவுகொண்டிருந்தார்.[15][16] பிப்ரவரி 2007 வரை குப்தா நன்கு அறியப்பட்டவர் அல்ல. இவர்களது உறவு இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.[17] சாதனா குப்தாவின் முதல் திருமணத்தின் மூலம் பிரதீக் யாதவ் (பிறப்பு 1988) என்ற மகன் உள்ளார்.[18] சந்திர பிரகாஷ் குப்தா மற்றும் சாதனா குப்தா (முலாயமின் 2-ஆவது மனைவி) ஆகியோரின் மகன் பிரதீக் யாதவ் ஆவார்.[19] பிரதீக்கின் மனைவி அபர்ணா பிஷ்த் யாதவ் (பிறப்பு 1990) 2022-இல் பாஜகவில் சேர்ந்தார். சாதனா குப்தா 2022 சூலையில் சிறிது காலம் நோய்வாய்ப்பட்ட நிலையில் இறந்தார்.[20]

மறைவு[தொகு]

உடல்நலக் குறைவால் முலாயம் சிங் யாதவ் தமது 82 அகவையில் மருத்துவமனையில் உயிர்துறந்தார்.[21]

பத்ம விபூசண் விருது[தொகு]

2023ஆம் ஆண்டில், முலயாம் சிங் யாதவின் மரணத்திற்குப் பின் இவருடைய சமூகப் பணிக்காக இந்திய அரசாங்கத்தால் இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது.[22]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://hindi.oneindia.com/news/india/prateek-yadav-is-not-mulayam-singh-yadav-s-son-revealing-cbi-state-388667.html
  2. 2.0 2.1 "Detailed Profile: Shri Mulayam Singh Yadav". Government of India. 4 அக்டோபர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 Yadav, Shyamlal (7 March 2012). "The Samajwadi Parivar". Indian Express. http://www.indianexpress.com/news/the-samajwadi-parivar/921192/0. 
  4. 4.0 4.1 "Tributes paid to Mulayam's wife". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://articles.timesofindia.indiatimes.com/2003-05-27/lucknow/27270264_1_tributes-saifai-village-mulayam-singh. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. Singh, Ram; Yadav, Anshuman (1998). Mulayam Singh: A Political Biography. Konark Publishers. பக். 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-220-0530-1. https://books.google.com/books?id=AMCLQgAACAAJ. 
  6. Dixit, Neha. "Akhilesh Yadav in the family business". The Caravan. 22 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  7. Business Standard Political Profiles of Cabals and Kings. Business Standard Books. 2009. பக். 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-905735-4-2. https://books.google.com/books?id=qT7QvviGoJsC&pg=PA47. 
  8. "Mulayam Singh Yadav Biography in Hindi: About Family, Political life, Age, Photos, Videos". Patrika News (இந்தி). 18 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  9. Singh, Ram; Yadav, Anshuman (1998). Mulayam Singh: A Political Biography. Konark Publishers. பக். 34–39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-220-0530-1. https://books.google.com/books?id=AMCLQgAACAAJ. 
  10. (in hi) Mulayam Singh Yadav Aur Samajvad. Rajpal & Sons. பக். 56–57. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7028-712-4. https://books.google.com/books?id=JyyWqZHUWiYC. 
  11. "Mulayam Singh Yadav Biography – About family, political life, awards won, history". Elections in India. 28 நவம்பர் 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Member Profile". Lok Sabha. 29 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
  13. "Results of Uttar Pradesh Assembly Elections". eci.gov.in. Election Commission of India. 10 October 2022 அன்று பார்க்கப்பட்டது.
  14. "Mulayam Singh Yadav shifted to critical care unit of Gurugram's Medanta Hospital". Hindustan Times. 3 October 2022.
  15. "Warring Yadavs star in Kalyug's Ramayan". Times of India Blog. 26 October 2016.
  16. "What befalls a hubby who forgets a Kaikeyisque boon". www.telegraphindia.com.
  17. Bhatt, Sheela (6 March 2007). "Will this man bring down Mulayam?". rediff.com. http://www.rediff.com/news/2007/mar/06spec.htm. 
  18. "मुलायम के अकेले वारिस हैं अखिलेश, प्रतीक नहीं हैं बेटे!". आज तक (இந்தி). 2016-10-26. 2022-08-03 அன்று பார்க்கப்பட்டது.
  19. "मुलायम के अकेले वारिस हैं अखिलेश, प्रतीक नहीं हैं बेटे!". 26 October 2016.
  20. "Mulayam Singh Yadav's wife Sadhana Gupta cremated in Lucknow | Lucknow News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  21. Mulayam Singh Yadav Death Live Updates: Last rites of MSY to be performed in Saifai tomorrow; 3-day state mourning in UP
  22. "Mulayam Singh Yadav conferred with Padma Vibhushan". NDTV. 26 January 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முலாயம்_சிங்_யாதவ்&oldid=3777764" இருந்து மீள்விக்கப்பட்டது