அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ் अखिलेश यादव | |
---|---|
![]() | |
அகிலேஷ் யாதவ் | |
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 01 ஜனவரி 2017 | |
முன்னவர் | முலாயம் சிங் யாதவ் |
21வது உத்தரப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் 15 மார்ச் 2012 – 19 மார்ச் 2017 | |
முன்னவர் | மாயாவதி |
பின்வந்தவர் | யோகி ஆதித்தியநாத் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1 சூலை 1973 சைஃபை, எடவா, உத்தரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | டிம்பிள் யாதவ் |
பிள்ளைகள் | அதிதி யாதவ், டீனா யாதவ், அருச்சுன் யாதவ் |
இருப்பிடம் | சைஃபை, எடவா, உத்தரப் பிரதேசம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மைசூர்ப் பல்கலைக்கழகம் சிட்னி பல்கலைக்கழகம் |
சமயம் | இந்து |
இணையம் | www.akhileshyadav.com |
அகிலேஷ் யாதவ் (Akhilesh Yadav, இந்தி: अखिलेश यादव) (பிறப்பு 1 சூலை 1973), ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்திரப் பிரதேசத்தின் கன்னவ்ஜ் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகனுமாவார்.
2000ஆம் ஆண்டில் முதன்முறையாக கன்னவ்ஜ் மக்களவைத்தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே தொகுதியில் மீண்டும் 2004ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் போட்டியிட்டு மூன்று முறை இத்தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ளார்.[1].
2012ஆம் ஆண்டில் நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் கட்சிப் பரப்புரைகளில் முன்னணியில் இருந்து தனது கட்சி ஆட்சியைப் பற்றிட துணை புரிந்துள்ளார்.[2].
மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளநிலைப் பட்டத்தையும் சூழலியல் பொறியியலில் சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.[3][4]
2012 உ.பி சட்டப்பேரவை தேர்தல்கள்[தொகு]
2012ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத் தேர்தல்களில் இவரது பரப்புரை தனித்தன்மையுடையதாக இருந்தது. ஈராழி மிதிவண்டியில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதும் தனது குழுவில் தகவல்தொடர்பு தொழில்முறை வல்லுனரையும் வானொலித் தொகுப்பாளரையும் கொண்டிருந்ததும் இவரது ஆளுமையும் சமாஜ்வாடி கட்சி சட்டப்பேரவையின் 403 இடங்களில் 224 இடங்களைப் பிடிக்கக் காரணமாக அமைந்தது. தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கக் காரணமாக அமைந்ததால் அகிலேஷ் தனது 38ஆவது அகவையில் உத்தரப் பிரதேசத்தின் மிக இளமையான முதலமைச்சராக பொறுப்பேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5]
நீக்கம்[தொகு]
இவரை 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் இவரின் அப்பாவுமான முலாயம் சிங் கட்சியின்ன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கினார்.[6] இதன் எதிரொலியாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் பதவியை தானே எடுத்துக்கொண்டதாக மாநாடு நடத்தி அறிவித்து, முலாயம் சிங் இனிமேல் கட்சி ஆலோசகராக இருப்பர் என்று தெரிவித்தார்.[7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://india.gov.in/govt/loksabhampdetail.php?mpcode=564
- ↑ http://ibnlive.in.com/news/up-sp-decimates-bsp-congress-finishes-fourth/236762-37-170.html
- ↑ "ஸ்ரீ அகிலேஷ் யாதவ்: அறிமுகம்". இந்திய அரசு. பார்த்த நாள் 7 மார்ச்சு 2010.
- ↑ [1]
- ↑ http://business-standard.com/india/news/akhilesh-yadav-is-next-cmuttar-pradesh/160005/on
- ↑ [2]
- ↑ சிவபால் யாதவ் பதவி பறிப்பு: சமாஜ்வாதி தலைவராக அகிலேஷ் தேர்வு- தேர்தல் ஆணையத்துக்கு முலாயம் அவசர கடிதம் 2016 2 ஜனவரி தி இந்து தமிழ்
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |