பாரதிய லோக் தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரதிய லோக் தளம் (Bharatiya Lok Dal| BLD) (இந்தி: भारतीय लोक दल, ("இந்திய மக்கள் கட்சி") 1974 ஆண்டின் இறுதியில் இந்திரா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு கட்சியை அனைத்திந்திய அளவில் வீழ்த்துவதற்காக 1974-இல் சுதந்திரா கட்சி, ஒடிசாவின் உத்கல் காங்கிரஸ், பாரதிய கிரந்தி தளம், சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி போன்ற ஏழு பெரிய வலதுசாரி அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து உருவாக்கப்பட்டது. பாரதிய லோக் தள கட்சியின் தலைவராக சரண் சிங் நியமிக்கப்பட்டார்.

1975-1977 வரையிலான காலங்களில் காங்கிரசில், இந்திரா காந்தியின் அரசு கொண்டு வந்த எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் தலைமையில் 1977-இல் பாரதிய ஜனசங்கம் மற்றும் நிறுவன காங்கிரசு கட்சிகள் பாரதிய லோக் தளத்துடன் இணைந்து ஜனதா கட்சியை துவக்கினர்.

1977 இந்தியப் பொதுத் தேர்தலை சந்தித்த ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, காங்கிரஸ் கட்சி அல்லாத இந்திய மத்திய அரசின் ஆட்சியை மொரார்ஜி தேசாய் தலைமையில் நிறுவப்பட்டது.

இந்திய சுதந்திரத்திற்கு பின் 30 வருடங்களாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்திய முதல் கட்சி என்ற பெருமை ஜனதா கட்சிக்கு உண்டு.

சரண் சிங்கின் மறைவிற்குப் பின்னர் பாரதிய லோக் தள கட்சியை அவரது அஜித் சிங், ராஷ்டிரிய லோக் தளம் என்று பெயர் மாற்றி கட்சியை நடத்தினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://timesofindia.indiatimes.com/city/lucknow/Lok-Dal-jumps-into-poll-fray-as-Chaudharys-heir/articleshow/11560154.cms
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதிய_லோக்_தளம்&oldid=3086324" இருந்து மீள்விக்கப்பட்டது