ஜார்ஜ் பெர்னாண்டஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜ் பெர்னாண்டஸ்
George Fernandes.jpg
தொகுதி முசாப்பர்பூர் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 3 சூன் 1930 (1930-06-03) (அகவை 87)
மங்களூர்,
அரசியல் கட்சி ஐக்கிய ஜனதா தளம்
வாழ்க்கை துணைவர்(கள்) லீலாகபீர்
பிள்ளைகள் ஒரு மகன்
இருப்பிடம் பெங்களூரு, இந்தியா
சமயம் கிறித்தவம்
கையொப்பம்
As of செப்டம்பர் 26, 2006
Source: =

ஜார்ஜ் பெர்னாண்டஸ் (George Fernandes), ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் இந்திய அரசியல்வாதியும் ஆவார். [1]

இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்[தொகு]

ஜார்ஜ் பெர்னாண்டஸ், 1967 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற நான்காவது மக்களவைத் தேர்தலில் முதன் முறையாகத் தேர்வானார். அதன் பிறகு, 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வென்று மொத்தம் ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார்.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்[தொகு]

  • 2009 ஆம் ஆண்டிலிருந்து பீகார் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.

அமைச்சர் பணி[தொகு]

  • 1977 ஆம் ஆண்டில் மார்ச் முதல் சூலை வரை இந்தியத் தகவல் தொடர்புத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
  • 1977 முதல் 1979 வரை இந்தியத் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
  • 1989 முதல் 1990 வரை இந்தியத் தொடர்வண்டித்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
  • 1990 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே வரை இந்தியக் காஷ்மீர் மாநில விவகாரங்களுக்கான அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்துள்ளார்.
  • 1998 முதல் 1999 ஆம் ஆண்டு வரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
  • 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 13 முதல் 2001 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி வரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
  • 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 15 முதல் 2004 ஆம் ஆண்டு மே மாதம் வரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

ஆல்சைமர் நோய்[தொகு]

தற்போது இவர் ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. குரல் அற்றவர்களின் குரல் ஜார்ஜ் பெர்னாண்டஸ்
  2. Health of former defence minister George Fernandes deteriorating: Brother
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_பெர்னாண்டஸ்&oldid=2339785" இருந்து மீள்விக்கப்பட்டது