இளங்கலை கல்வியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இளங்கலை கல்வியியல் (Bachelor of Education) என்பது பள்ளிகளில் ஆசிரியர் பணிக்காக ஆசிரிய மாணவர்களைத் தயார் செய்யும் இளங்கலை தொழில்முறை பட்டம் ஆகும். இளங்கலை கல்வியியல் பயின்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்க முழுமையாக தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இந்தியா[தொகு]

இந்தியாவில் இளங்கலை கல்வியியல் கல்வியியல் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது.[1]

  • இளநிலைப் பட்டத்துடன் இளங்கலை கல்வியியல் பயின்றவர்கள் உயர் நிலை வகுப்புகளுக்கு (9 மற்றும் 10 வகுப்புகள்) கற்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
  • முதுநிலைப் பட்டத்துடன் இளங்கலை கல்வியியல் பயின்றவர்கள் மேல் நிலை வகுப்புகளுக்கு (11 மற்றும் 12 வகுப்புகள்) கற்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

படிப்புக் காலம்[தொகு]

இந்தியா முழுவதும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைப்பான தேசிய ஆசிரியர் கல்வி மையம் (என்.சி.டி.இ.) இளங்கலை கல்வியியல் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து 2015-2016 ஆம் கல்வி ஆண்டு முதல் அனைத்து கல்வியியல் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.[2]

பல்கலைக்கழகம்[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கல்லூரி ஆண்டு விழா". தினதந்தி. 16 சனவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகள் ஆகிறது: என்சிடிஇ உத்தரவை அமல்படுத்த தமிழக அரசு முடிவு". தமிழ் இந்து. 20 சூன் 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்கலை_கல்வியியல்&oldid=3407488" இருந்து மீள்விக்கப்பட்டது