ஆனந்திபென் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்திபென் படேல்
Chief Minister of Gujarat Anandiben Patel.jpg
28வது உத்திரப் பிரதேச ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
29 ஜூலை 2019
முதல்வர் யோகி ஆதித்யநாத்
முன்னவர் ராம் நாயக்
மத்திய பிரதேசத்தின் ஆளுநர்
பதவியில்
23 சனவரி 2018 – 28 ஜூலை 2019
முன்னவர் ஓம் பிரகாஷ் கோலி
பின்வந்தவர் லால்ஜி டாண்டன்
சத்தீஸ்கரின் ஆளுநர்
(கூடுதல் பொறுப்பு)
பதவியில்
15 ஆகஸ்ட் 2018 – 28 ஜூலை 2019
முன்னவர் பல்ராம் தாஸ் டன்டன்
பின்வந்தவர் அனுசுயா யுகே
குஜராத்தின் 15வது முதலமைச்சர்
பதவியில்
22 மே 2014 – 7 ஆகஸ்ட் 2016
ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி
முன்னவர் நரேந்திர மோடி
பின்வந்தவர் விஜய் ருபானி
தொகுதி கட்லோடியா
குஜராத் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2002–2017
தொகுதி கட்லோடியா
குஜராத் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1998–2002
தொகுதி மண்டல்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1994–1998
தொகுதி குஜராத்
தனிநபர் தகவல்
பிறப்பு 21 நவம்பர் 1941 (1941-11-21) (அகவை 81)
காரோத், குஜராத்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மஃபத்லால் படேல் (பிரிவு)
பிள்ளைகள் 2
இருப்பிடம் ராஜ் பவன், போபால்
பணி அரசியல்வாதி, ஆசிரியர்
பொருப்புகள் கல்வி அமைச்சர், உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி, மகளிர் மற்றும் சிறார் நலவாழ்வு, விளையாட்டு, இளைஞர் மற்றும் பண்பாடு அமைச்சகம் (1998-2007)

வருவாய்த்துறை அமைச்சர், பேரிடர் மேலாண்மை, சாலைகள் & கட்டிடங்கள் மூலதனத் திட்டம், மகளிர் மற்றும் சிறார் நலவாழ்வு (2007-2014)

ஆனந்திபென் படேல் (பிறப்பு: 21 நவம்பர் 1941)[1] என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது உத்தரப் பிரதேசம் மாநில ஆளுநராக பதவியில் உள்ளார். இவர் முன்னாள் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் ஆளுநராக பதவியில் இருந்தார். இவர் குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவர் 1987 முதல் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்தில் மெஹ்சானா என்ற மாவட்டத்தில் கரோட் என்ற கிராமத்தில் பிறந்தவர். 1970ஆம் ஆண்டு மோனிபாபா வித்தியாலயாவில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்து படிப்படியாகத் தலைமை ஆசிரியராக உயர்ந்தார்.

அரசியல்[தொகு]

1987ம் ஆண்டு நர்மதா நதியில் தவறிவிழுந்தவர்களைக் காப்பாற்றியதால் இந்திய ஜனாதிபதியால் வீரதீர விருது பெற்றார். அதன் பின் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து 1994ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அப்பதவியை 1988ம் ஆண்டு ராஜினாமா செய்தார். கேசுபாய் பட்டேல் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகத் தேர்வாகி லோக்தர்பார் என்ற அமைப்பை உருவாக்கி 40,000 ஆசிரியர்களை வேலையில் சேர்த்தார். மற்றும் இக்காலகட்டத்தில் அங்கு 80,000 பள்ளிகள் துவங்கப்பட்டது.[2]

குஜராத் சட்டமன்றத்தில் நெடுநாட்களாக அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் ஒருவராக இருந்த ஆனந்திபென் 1994இல் மாநிலங்களவை உறுப்பினராகத் தம் அரசியல் வாழ்வைத் துவக்கினார். 1998இல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களின்போது மாநில அரசியலில் பங்கேற்றார். குஜராத்தில் தொடர்ந்து நான்குமுறை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண்மணியாக ஆனந்திபென் விளங்குகிறார்.

நரேந்திர மோதி இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின் குஜராத் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து பதவி விலகினார். இதையடுத்து மே 22, 2014 அன்று முதல் 7 ஆகத்து 2016 வரை ஆனந்திபென் படேல் முதலமைச்சராக பதவி வகித்தார். குஜராத் மாநிலத்தில் இப்பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.[3][4] முன்னதாக 2007 முதல் 2014 வரை குஜராத் மாநில அமைச்சரவையில் வருவாய்,சாலைகள் மற்றும் கட்டிடங்கள், ஊரக வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை, மூலதனத் திட்டங்கள் துறைகளின் அமைச்சராகப் பொறுப்பாற்றி உள்ளார்.[5]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Profile". 2014-08-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-16 அன்று பார்க்கப்பட்டது.
  2. அர்ப்பணிப்பால் உயர்ந்த ஆனந்திபென்
  3. "குஜராத் முதல்வராகிறார் ஆனந்திபென்: மாநிலத்தின் முதல் பெண் முதல்வர்". தி இந்து. 21 மே 2014. 22 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Narendra Modi resigns, Anandiben Patel elected new Chief Minister of Gujarat unopposed". Desh Gujarat. 21 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-22 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்திபென்_படேல்&oldid=3677129" இருந்து மீள்விக்கப்பட்டது