அருச்சுன் முண்டா
அர்ஜூன் முண்டா | |
---|---|
![]() அர்ஜுன் முண்டா | |
மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் | |
பதவியில் 7 டிசம்பர் 2023[1] – 11 ஜூன் 2024 | |
பிரதமர் | நரேந்திர மோடி |
முன்னையவர் | நரேந்திர சிங் தோமர் |
பின்னவர் | சிவராஜ் சிங் சௌகான் |
மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் | |
பதவியில் 30 மே 2019 – 11 ஜூன் 2024 | |
பிரதமர் | நரேந்திர மோடி |
முன்னையவர் | ஜூவல் ஓரம் |
பின்னவர் | ஜூவல் ஓரம் |
2வது ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் | |
பதவியில் 11 செப்டம்பர் 2010 – 8 சனவரி 2013 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பதவியில் 12 மார்ச் 2005 – 14 செப்டம்பர் 2006 | |
முன்னையவர் | சிபு சோரன் |
பின்னவர் | மது கோடா |
பதவியில் 18 மார்ச் 2003 – 2 மார்ச் 2005 | |
முன்னையவர் | பாபுலால் மராண்டி |
பின்னவர் | சிபு சோரன் |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 23 மே 2019 – 5 ஜூன் 2024 | |
முன்னையவர் | கரிய முண்டா |
பின்னவர் | காளி சரண் முண்டா |
தொகுதி | கூண்டி |
கர்சாவான் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், ஜார்கண்ட் , பீகார் (1995-2000) | |
பதவியில் 2010 - 2014 | |
முன்னையவர் | மங்கள் சிங் சோய் |
பின்னவர் | தஷ்ரத் காக்ரை |
பதவியில் 2000 - 2009 | |
முன்னையவர் | முன்னர் பீகார் சட்டமன்ற உறுப்பினர் |
பின்னவர் | மங்கள் சிங் சோய் |
பதவியில் 1995 - 2000 | |
பின்னவர் | பின்னர் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற உறுப்பினர் |
தொகுதி | கர்சாவான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 மே 1968 ஜம்சேத்பூர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | ஜம்சேத்பூர் , புது டெல்லி |
சமயம் | இந்து சமயம் |
அருச்சுன் முண்டா (Arjun Munda) (பிறப்பு சனவரி 5, 1968) இந்திய மாநிலம் சார்க்கண்டின் முன்னாள் முதலமைச்சரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவரும் ஆவார்.
அரசியல் வாழ்வு
[தொகு]முண்டாவின் அரசியல் பிரவேசம் 1980களில் பீகாரின் தென்பகுதியில் அமைந்திருந்த மலைவாழ் மக்கள் மிகுந்த சார்க்கண்ட்டை தனி மாநிலமாக பிரிக்கக் கோரி நடந்த (சார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) "சார்க்கண்ட் விடுதலைப் போராட்டத்தில்" நிகழ்ந்தது. பழங்குடியினர் மற்றும் பிற பிற்பட்ட மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட முண்டாவின் செல்வாக்கு படிப்படியாக வளர்ந்தது.1995ஆம் ஆண்டு பீகாரின் சட்டப்பேரவைக்கு கார்சுவான் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதியிலிருந்து தொடர்ந்து 2000 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடத் துவங்கினார்.
சார்க்கண்ட் 2000ஆம் ஆண்டு உருவானது. முதல் அரசின் முதல்வராக பாஜகவின் பாபுலால் மராண்டி பதவி ஏற்றார்.அவருடைய அமைச்சரவையில் சமூகநல அமைச்சராக முண்டா பணியாற்றினார். 2003ஆம் ஆண்டு அரசுக்கு ஆதரவு அளித்த பாஜக அல்லாத உறுப்பினர்கள் மராண்டியின் நீக்கத்தைக் கோரியதால், கட்சித் தலைமை பழங்குடியினரிடம் செல்வாக்கு மிகுந்த அருச்சுன் முண்டாவை முதலமைச்சராக்க பரிந்துரைத்தது. அதன்படி மார்ச்சு 18, 2003 அன்று சார்க்கண்ட் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆயினும் சட்டப்பேரவையில் சரியான பெரும்பான்மை அமையாததாலும் ஆளுநர் சயித் சிப்தே ராசியின் தலையீட்டாலும் மார்ச்சு 2,2005 அன்று முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
பத்து நாட்கள் கழித்து, மார்ச்சு 12, 2005அன்று மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று மார்ச்சு 15,2005 அன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கைப் பெற்றார்.இம்முறை அவரது அரசு பல சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவில் நிலையற்று இருந்தது.இறுதியில் செப்டம்பர் 14,2006 அன்று அரசியல் காரணங்களுக்காக மீண்டும் பதவி விலகினார்.
தற்போது மத்திய அமைச்சராக 2019 முதல் உள்ளார்.
வெளியிணைப்புகள்
[தொகு]- Arjun Munda sworn in Jharkhand Chief Minister (The Hindu, 3/13/05) பரணிடப்பட்டது 2007-03-13 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Arjun Munda to become Union Agriculture Minister after Narendra Tomar's resignation". India Today (in ஆங்கிலம்). 7 December 2023. Retrieved 2023-12-07.