பாபுலால் மராண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபுலால் மராண்டி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
கோடர்மா மக்களவைத் தொகுதி
பதவியில்
2004 -2014
முன்னவர் திலக்தாரி சிங்
பின்வந்தவர் ரவீந்திர குமார் ராய்
ஜார்கண்ட் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சர்
பதவியில்
15 நவம்பர் 2000 – 17 மார்ச் 2003
முன்னவர் புதுப் பதவி
பின்வந்தவர் அருச்சுன் முண்டா
தனிநபர் தகவல்
பிறப்பு 11 சனவரி 1958 (1958-01-11) (அகவை 65)
கிரிதிக், ஜார்கண்ட்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
சார்புகள்
சார்க்கண்டு விகாசு மோர்சா (பிரசாதந்திரிக்)
வாழ்க்கை துணைவர்(கள்) சாந்தி தேவி
பிள்ளைகள் 2 மகன்கள்
இருப்பிடம் கிரிதிக்
சமயம் இந்து சமயம்
As of 9 நவம்பர், 2006
Source: [1]

பாபுலால் மராண்டி (Babu Lal Marandi) (பிறப்பு: 11 சனவரி 1958), ஜார்கண்ட் மாநிலத்தின் முதலாவது முதல் அமைச்சர் ஆவார்.[1] பாரதிய ஜனதா கட்சி யின் முக்கியத் தலைவரும் ஆவார். 2009 மற்றும் 2014ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு கோடர்மா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2]அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான இந்திய நடுவண் அரசில் காடுகள், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின், இராசாங்க அமைச்சராக பணியாற்றியவர்.

அரசியல்[தொகு]

1991-இல் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தும்கா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டவர். 1996 ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் சிபு சோரனிடம் 5,000 வாக்குகள் குறைவாகப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். 1996-இல் பாரதிய ஜனதா கட்சியின் ஜார்கண்ட் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1]

1998 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தின் 14 நாடாளுமன்ற தொகுதிகளில் 12 தொகுதிகளை கைப்பற்றி சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை கலங்கச் செய்தவர் பாபுலால் மராண்டி. பாபுலால் மராண்டி சந்தாலி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.[1]

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி[தொகு]

2000-ஆம் ஆண்டில் பிகார் மாநிலத்திலிருந்து ஜார்கண்ட் மாநிலத்தை பிரித்த போது, 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, ஜார்கண்ட் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக பாபுலால் மராண்டி பதவி ஏற்றார்.

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் கட்டாயத்தின் பேரில், பாபுலால் மராண்டி 2003-இல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதால், அருச்சுன் முண்டா முதல்வரானார்.

சார்க்கண்டு விகாசு மோர்சா (பிரசாதந்திரிக்) (JVM)[தொகு]

2006-இல் பாபுலால் மராண்டி பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி, சார்க்கண்டு விகாசு மோர்சா (பிரசாதந்திரிக்) எனும் மாநிலக் கட்சியை நிறுவினார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபுலால்_மராண்டி&oldid=3642968" இருந்து மீள்விக்கப்பட்டது