சாந்தகுமார்
சாந்தகுமார் | |
---|---|
முன்னாள் முதலமைச்சர், இமாச்சலப் பிரதேசம் | |
முதலமைச்சர், இமாச்சலப் பிரதேசம் | |
பதவியில் 22 சூன் 1977 – 14 பிப்ரவரி 1980 | |
முன்னவர் | தாக்கூர் ராம் லால் |
பின்வந்தவர் | தாக்கூர் ராம் லால் |
பதவியில் 5 மார்ச் 1990 – 15 டிசம்பர் 1992 | |
முன்னவர் | வீரபத்ர சிங் |
பின்வந்தவர் | வீரபத்ர சிங் |
இந்திய நடுவண் அரசின் உணவு மற்றும் பொதுவிநியோகம் மற்றும் நுகர்வோர் அமைச்சர் | |
பதவியில் 13 அக்டோபர் 1999 – 30 சூன் 2002 | |
இந்திய நடுவண் அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் | |
பதவியில் 1 சூலை 2002 – 6 ஏப்ரல் 2003 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 12 செப்டம்பர் 1934 கர்ஜமுலா, காங்ரா மாவட்டம், பஞ்சாப் பிரித்தானிய இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | சந்தோஷ் ஷைலஜா |
இருப்பிடம் | பாலம்பூர், காங்ரா மாவட்டம், இமாச்சலப் பிரதேசம் |
சாந்தகுமார் (Shanta Kumar) (பிறப்பு: 12 செப்டம்பர் 1934) இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்திய நடுவண் அரசின் அமைச்சராகவும் இருந்தவர். சாந்தகுமார் பாரதிய ஜனதா கட்சியின் இமாச்சலப் பிரதேச மாநிலத் தலைவர்களில் ஒருவரும் ஆவார். 1989, 1998 மற்றும் 1999-ஆம் ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேசத்தின் காங்கிரா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு மூன்று முறை தேர்ந்தேடுக்கப்பட்டவர்.
பிறப்பு[தொகு]
ஜெகன்நாத் சர்மா – கௌசல்யா தேவி இணையருக்கு 12 செப்டம்பர் 1934-இல் பிரித்தானிய இந்தியாவின் காங்ரா மாவட்டத்தில், கர்ஜாமுலா எனும் ஊரில் பிறந்தவர் சாந்தகுமார்.[1]
அரசியல்[தொகு]
1963-இல் அரசியல் பணி துவக்கிய சாந்தகுமார் முதலில் கர்ஜமூலா கிராமப் பஞ்சாயத்தின் தலைவராகப் பதவி ஏற்றார். பின்னர் பவர்னா பஞ்சாயத்து ஒன்றியத்தின் தலைவராகவும், காங்கிரா மாவட்ட பஞ்சாயத்து குழுவின் தலைவராகவும் (1965 - 1970) பதவி வகித்தார்.[2]
சாந்தகுமார் 1972 முதல் 1985 முடிய இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பதவி வகித்தவர். பின்னர் மீண்டும்1992 – 1992 முடிய இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சாந்தகுமார் இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக 1977 முதல் 1980 முடியவும், பின்னர் 1990 முதல் 1992 முடிய இரண்டு முறை பதவி வகித்தவர்.[3] 1980 முதல் 1985 முடிய இமாச்சலப் பிரதேச சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக பணியாற்றியவர்.[4]
சாந்தகுமார் காங்கிரா மக்களவைத் தொகுதியிலிருந்து 1989, 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் 1999 முதல் 2004 முடிய ஊரக வளர்ச்சித் துறையில் மூத்த அமைச்சராகவும் பணியாற்றியவர்.[4]
சாந்தகுமார் 2008-இல் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தேடுக்கப்பட்டார்.[5] 2014-இல் 16வது மக்களவை உறுப்பினராக காங்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Biographical Sketch: Member of Parliament: 13th Lok Sabha". parliamentofindia.nic.in. 2013-02-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-02-05 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "National Portal of India". india.gov.in. 2013-02-05 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Shanta Kumar : Niti Central". www.niticentral.com. 2013-04-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-02-05 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 4.0 4.1 "13th Lok Sabha Member Profile". Government of India. 2014-06-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Members Page". 2011-05-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kangra(Himachal Pradesh) Lok Sabha Election Results 2014 with ..."
- 1934 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்கள்
- மாநிலங்களவை உறுப்பினர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்