மதன் லால் குரானா
மதன் லால் குரானா | |
---|---|
2005 இல் குரானா | |
இராசசுத்தான் ஆளுநர் | |
பதவியில் 14 சனவரி 2004 – 1 நவம்பர் 2004 | |
முன்னையவர் | கைலாசுபதி மிசுரா (கூடுதல் பொறுப்பு) |
பின்னவர் | டி. வி. இராசேசுவர் (கூடுதல் பொறுப்பு) |
3வது தில்லி முதல்வர் | |
பதவியில் 2 திசம்பர் 1993 – 26 பெப்ரவரி 1996 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி* |
பின்னவர் | சாகிப் சிங் வர்மா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பைசலாபாத், பஞ்சாப் (இன்றைய பைசலாபாத், பாக்கித்தான்) இந்தியா | 15 அக்டோபர் 1936
இறப்பு | அக்டோபர் 27, 2018 புது தில்லி,இந்தியா | (அகவை 82)
தேசியம் | இந்தியாn |
வாழிடம் | புது தில்லி |
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம் |
| |
மதன் லால் குரானா (Madan Lal Khurana, 15 அக்டோபர் 1936 - 27 அக்டோபர் 2018)[1] சுயம்சேவாக் சங்கத்தின் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் ஆவார். தில்லி மாநிலத்தின் முதலமைச்சராக 1993 முதல் 1996 முடிய பதவியில் இருந்தவர். மேலும் இராஜஸ்தான் மாநில ஆளுநர் பதவியில் சனவரி 2004 முதல் நவம்பர் 2004 முடியப் பதவி வகித்தவர். இந்தியப் பிரிவினையின் போது தற்கால பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் தலைநகரமான தில்லி மாநகரத்தின் கீர்த்தி நகரில் குடும்பத்துடன் அகதியாக குடியேறியவர்.[2] மதன்லால் குரானா தனது பட்டப்படிப்பை தில்லியின் கிரோரி மால் கல்லூரியில் முடித்தவர்.[3]
ஜன சங்கம்
[தொகு]அரசியல் களத்திற்கு வருவதற்கு முன்பு விஜய் குமார் மல்ஹோத்திராவுடன் மாலைநேரக் கல்லூரி ஆசிரியராக பணிபுரிந்தவர்.[2][4] பின்னர் தில்லி ஜன சங்கத்தின் பொதுச்செயலராக 1965 முதல் 1967 முடிய செயல்பட்டார்.
பாரதிய ஜனதா கட்சி
[தொகு]பாரதிய ஜனதா கட்சியின் தில்லி மாநில முதலமைச்சராக 1993 முதல் 1996 முடிய இருந்தவர்.
அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அமைச்சராக செயல்பட்டவர். பின்னர் இராஜஸ்தான் மாநில ஆளுநராக 14 சனவரி 2004 முதல் 28 அக்டோபர் 2004 முடிய பதவி வகித்தவர். 9, 10, 12 மற்றும் 13வது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Former Delhi CM Madan Lal Khurana passes away at 82" (in en). Newsd www.newsd.in. https://newsd.in/former-delhi-cm-madan-lal-khurana-passes-away-at-82/.
- ↑ 2.0 2.1 The Lion in Winter – Lok Sabha Election news 2009 – Rediff.com
- ↑ http://www1.timesofindia.indiatimes.com/articleshow/496455.cms[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Good Read: India – Delhi's next CM?