மாணிக் சாகா
மாணிக் சாகா | |
---|---|
11வது திரிபுரா முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 15 மே 2022 | |
ஆளுநர் | சத்யதேவ் நாராயன் ஆர்யா |
முன்னையவர் | பிப்லப் குமார் தேவ் |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 03 ஏப்ரல் 2022 – 14 மே 2022 | |
முன்னையவர் | ஜார்னா தாஸ் |
பின்னவர் | பிப்லப் குமார் தேவ் |
தொகுதி | திரிபுரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 சனவரி 1953 |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2016-முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (2016க்கு முன்பு) |
துணைவர் | சுவப்ன சாகா |
முன்னாள் கல்லூரி | பாட்னா பல் மருத்துவக் கல்லூரி (B.D.S) கிங் ஜோர்ஜ் மருத்துவக் கல்லூரி, இலக்னோ (M.D.S.) |
மாணிக் சாகா (பிறப்பு 8 ஜனவரி 1953) பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திரிபுரா முதல்வராக உள்ளவர். 15 மே 2022 அன்று திரிபுராவின் 12வது முதலமைச்சராக பதவியேற்றார்.[1][2] இவர் பாரதிய ஜனதா கட்சியின் திரிபுரா மாநிலத் தலைவராகப் பதவி வகித்தார்.[3] [4] மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடம் உள்ள நிலையில், 14 மே 2022 அன்று, பிப்லப் குமார் தேவ் பதவியை விலகியதை தொடர்ந்து மாணிக் சாகா முதல்வராகப் பதவி ஏற்கின்றார்.[5] அவசரமாக அழைக்கப்பட்ட பா.ஜ.க. சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, தேவ், சாகாவின் பெயரைத் தன்னை தொடர்ந்து முதல்வராக அறிவித்து, புதிய முதலமைச்சருக்கு ஒத்துழைப்பதாகக் கூறினார். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]மக்கான் லால் சகா மற்றும் பிரியா பாலா சாகா ஆகியோருக்கு மகனாக 8 சனவரி 1953-ல் சகா பிறந்தார்.[6] இவர் தனது பல் மருத்துவ பட்டப்படிப்பினையும் முதுநிலைப் படிப்பினையும் முறையே பாட்னா பல் மருத்துவக் கல்லூரி, பீகார் மற்றும் கிங் ஜார்ஜஸ் மருத்துவக் கல்லூரி, இலக்னோவில் முடித்தார் . சாகா திருமதி சுவப்னாவினை மணந்தார்.[6] இவர் திரிபுரா துடுப்பாட்ட சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு, கபானியாவில் உள்ள திரிபுரா மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக மருத்துவம் கற்பித்து வந்தார்.[2]
இரண்டாம் முறை முதலமைச்சராக
[தொகு]2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மாணிக் சாகா, இரண்டாவது முறையாக திரிபுரா முதலமைச்சராக 8 மார்ச் 2023 அன்று பதவி ஏற்க உள்ளார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Who Is Manik Saha, The New Chief Minister Of Tripura
- ↑ 2.0 2.1 "Who is Manik Saha, the new chief minister of Tripura". The Times of India. 14 May 2022. https://timesofindia.indiatimes.com/india/who-is-manik-saha-new-chief-minister-of-tripura/articleshow/91564514.cms. பார்த்த நாள்: 14 May 2022.
- ↑ "State president Manik Saha keeps his job as BJP reshuffles Tripura leadership". Debraj Deb. The Indian Express. 6 March 2022. பார்க்கப்பட்ட நாள் 23 March 2022.
- ↑ "Tripura BJP president Manik Saha is party candidate for Rajya Sabha polls". The Print. 18 March 2022. பார்க்கப்பட்ட நாள் 23 March 2022.
- ↑ Staff, Scroll. "Tripura CM Biplab Kumar Deb claims ducks increase oxygen levels in water bodies, draws criticism". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-14.
- ↑ 6.0 6.1 "Shri Manik Saha| National Portal of India". www.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 14 May 2022.
- ↑ Tripura election update: Manik Saha likely to take oath as Tripura CM on March 8