பாட்னா பல் மருத்துவக் கல்லூரி
Appearance
சுகாதாரம், மருத்துவக் கல்வி பீகார் அரசு | |
---|---|
அமைவிடம் | அசோக் ராஜ்பாத், பாட்னா, பீகார், இந்தியா |
ஆள்கூறுகள் | 25°36′28.77″N 85°10′03.06″E / 25.6079917°N 85.1675167°E |
மருத்துவப்பணி | பொது |
வகை | பொது, கல்வி |
இணைப்புப் பல்கலைக்கழகம் | பாட்னா பல்கலைக்கழகம் |
அவசரப் பிரிவு | ஆம் |
நிறுவல் | 1960 |
வலைத்தளம் | Official பாட்னா பல் மருத்துவக் கல்லூரி |
பட்டியல்கள் | Hospitals in India |
வேறு இணைப்புகள் | https://en.wikipedia.org/wiki/Patna_Dental_College |
பாட்னா பல் மருத்துவக் கல்லூரி (Patna Dental College) பல் மருத்துவத்திற்கான ஒரு நிறுவனம் ஆகும். இது இந்தியாவில் பீகார் மாநிலத்தில், பாட்னா நகரில், பாட்னா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனமாகும்.[1]
வரலாறு
[தொகு]பாட்னா பல் மருத்துவக் கல்லூரி பீகார் அரசால், மருத்துவர் ஆர். பி. லால் முயற்சியால், செப்டம்பர் 9, 1960 அன்று, பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட்டது.
இடம்
[தொகு]தற்போது இந்தக் கல்லூரி, பாட்னா நகரின் மையப்பகுதியில், அசோக் ராஜ்பாத்தில் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகில், கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
துறைகள்
[தொகு]- வாய்வழி, மருத்துவம் & பல் கதிரியக்கவியல்
- புரோஸ்டோடோன்டிக்சு
- பாதுகாப்பு பல் மருத்துவம் & பல் உள் மருத்துவம்
- ஆர்த்தடான்டிக்ஸ்
- பல்புறத்திசு மருத்துவம்
- குழந்தை பல் மருத்துவம்
- வாய்வழி நோயியல்
- வாய்வழி அறுவை சிகிச்சை
- சமூக பல் மருத்துவம்
படிப்புகள்
[தொகு]- இளநிலை பல் அறுவை சிகிச்சை (BDS)
- முதுநிலை பல் அறுவை சிகிச்சை (MDS)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated College of Patna University". Archived from the original on 2016-08-09. பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.