மாணிக் சர்க்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாணிக் சர்க்கார்
Manik Sarkar.jpg
9 ஆவது முதலமைச்சர், திரிபுரா
பதவியில்
11 மார்ச் 1998 – 03 மார்ச்சு 2018
ஆளுநர் தேவானந்த் கோன்வர்
முன்னவர் தசரத் தேவ்
பின்வந்தவர் பிப்லப் குமார் தேவ்
தொகுதி தான்பூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 22 சனவரி 1949 (1949-01-22) (அகவை 74)
ராதாகிசோர்பூர், திரிபுரா, இந்தியா
அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழ்க்கை துணைவர்(கள்) பாஞ்சாலி பட்டாச்சார்யா
பிள்ளைகள் இல்லை
பெற்றோர் அமுல்யா சர்க்கார்,
அஞ்சலி சர்க்கார்
இருப்பிடம் அகர்தலா, திரிபுரா, இந்தியா
சமயம் நாத்திகர்

மாணிக் சர்க்கார் (Manik Sarkar,வங்காளம்:মানিক সরকার ;பிறப்பு 1949) ஓர் இந்திய மார்க்சிய அரசியல்வாதியும் திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.[1]

வாழ்க்கை வரலாறு‍[தொகு]

1980 இல் 31 வயதில், திரிபுராவின் அகர்தலா சட்டமன்றத் தேர்தலில் வென்றதன் மூலம், அவருடைய அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 1983 தேர்தலிலும் இவர் வென்றார். 1998 முதல் கடந்த 20 வருடங்களாக திரிபுராவின் முதல்வராக இருக்கும் மாணிக் சர்க்கார், நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்து வரும் இந்திய மாநில முதல்வர்களுள் ஒருவர் ஆவார்.[2] மார்க்சிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அரசியல் மற்றும் கொள்கை வகுக்கும் குழுவான பொலிட்பீரோவின் உறுப்பினர் ஆவார்.[3][4]

இந்திய மாணவர் சங்கம் (SFI) தலைவராக பங்காற்றியுள்ளார். திரிபுராவில் சமசிந்தனை உள்ள நட்புக் கட்சிகளுடன் இடது முன்னணிக் கூட்டணி ஆட்சிக்கு தலைமை வகிக்கிறார்.[5]

06 மார்ச்சு, 2013 அன்று ஆறாவது இடது முன்னணி ஆட்சிக்கு தலைமையேற்று முதல்வராக பொறுப்பேற்றார்.[6] இந்திய முதல்வர்களிலேயே மிகவும் ஏழையான முதல்வர் என்பது‍ இவரது‍ மற்றொரு‍ சிறப்பம்சம், 59 வயதான மாணிக் சர்க்காருக்கு‍ முதல்வர் என்ற முறையில் மாத ஊதியமாக 9,200 ரூபாயும் அலவன்சாக 1,200 ரூபாயும் கிடைக்கிறது. அதை அப்படியே கட்சிக்குத் தந்து‍விடுகிறார். கட்சி தரும் 5,000 ரூபாயில் வாழ்க்கையை நடத்துகிறார். இவருக்கென்று‍ சொந்தமாக வீடோ, நிலமோ கிடையாது. இவரது‍ மனைவி பாஞ்சலி பட்டாச்சார்ஜி மத்திய சமூக நலத்துறையில் பணியாற்றுகிறார்.

தோல்வி[தொகு]

பெப்ரவரி 18, 2018 ஆம் ஆண்டு திரிபுராவில் 59 தொகுதிக்கான சட்டசபைத் தேர்தலில் முதல்வர் பதவிற்கு போட்டியிட்டார். அத்தேர்தலில் இவரது கட்சி 16 தொகுதிகளை மற்றும் கைப்பற்றியதால் முதல்வர் பதவியை இழந்தார், இருப்பினும் இவர் நின்ற தான்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றார். இவரது 20 வருட முதல்வர் வாழ்க்கையானது 2018ஆம் ஆண்டில் முடிவிற்கு வந்தது. பின்னர் முதல்வர் பதவியை இழந்ததால் அரசு குடியிருப்பு பகுதியில் இருந்து காலிச் செய்து, இவரும் இவரது மனைவியும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் குடியேறினர்.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-10-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-06 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.tamizhulagam.com/index.php?option=com_k2&view=item&id=3234:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&Itemid=[தொடர்பிழந்த இணைப்பு]
  3. பொலிட்பீரோ உறுப்பினர் பட்டியல் பரணிடப்பட்டது 2008-10-07 at the வந்தவழி இயந்திரம் 7வது (1964)காங்கிரசு முதல் 18வது (2005)வரை
  4. பொலிட்பீரோ உறுப்பினர்கள் மற்றும் நடுவண் குழு உறுப்பினர்களின் பட்டியல் பரணிடப்பட்டது 2008-07-29 at the வந்தவழி இயந்திரம் 19வது காங்கிரசில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
  5. "சிபிஎம் அரசுகள்". 2009-06-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-12-09 அன்று பார்க்கப்பட்டது.
  6. "7 வது இடதுமுன்னணி அரசு பொறுப்பேற்றது". 2011-09-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-12-09 அன்று பார்க்கப்பட்டது.
  7. "திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்கார் ராஜினாமா".
  8. "விடை பெறுகிறார் 'எளிமையான முதல்வர்' மாணிக் சர்க்கார்".

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிக்_சர்க்கார்&oldid=3629415" இருந்து மீள்விக்கப்பட்டது