ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த்
Harkishen Singh Surjeet
பொதுச் செயலர், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
பதவியில்
1992–2005
முன்னவர் எ. ம. ச. நம்பூதிரிபாத்
பின்வந்தவர் பிரகாஷ் காரத்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 23, 1916(1916-03-23)
ஜலந்தர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு ஆகத்து 1, 2008(2008-08-01) (அகவை 92)
நொய்டா, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
வாழ்க்கை துணைவர்(கள்) பிரித்தம் கவூர்
பிள்ளைகள் 2 மகன்கள், 2 மகள்கள்
சமயம் எதுவுமில்லை

ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த் (Harkishan Singh Surjeet, மார்ச் 23, 1916 - ஆகஸ்ட் 1, 2008) இந்தியாவின் கம்யூனிசத் தலைவர்களில் ஒருவர். மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியின் பொதுச் செயலாளராக 1992 முதல் 2005 வரை பதவியில் இருந்தார். 1964 ஆம் ஆண்டில் இருந்து கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார்[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஜல‌ந்த‌ரி‌ல் உ‌ள்ள ப‌ந்தலா ‌கிராம‌த்‌தி‌ல் ‌பிற‌ந்தார் . சு‌‌ர்‌ஜீத்‌தி‌ன் மனை‌வி ‌பி‌ரீ‌த்த‌ம் கெள‌ர். இவ‌ர்களு‌க்கு இர‌ண்டு மக‌ன்களு‌ம் ஒரு மகளு‌ம் உ‌ள்ளன‌ர்.

பொது வாழ்க்கை[தொகு]

சுதந்திரப் போராட்ட வீரர் , விவசாயிகளை அணிதிரட்டுவதில் மகத்தான பங்கு ,இந்தியாவில் கூட்டணி அரசியல் சகாப்தத்தை உருவாக்கிய சிற்பி , மதச்சார்பின்மை உயர்த்திப் பிடித்தவர் , பொதுவுடமைவாதி , எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டது இவரது பொது வாழ்வு .[2]

சுதந்திரப் போராட்டத்தில்[தொகு]

பஞ்சாப் மாநிலத்தில் 1916-ம் ஆண்டு விடுதலைப் போராட்ட பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த அவர், இளம்வயதிலேயே நாட்டின் விடுதலைப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் போராடத் துவங்கினார்.காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிய அவர், பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார் .பதினான்கு வயதில் போலீசாரின் துப்பாக்கிக் குண்டை எதிர்கொண்டு ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் மூவர்ணக் கொடி ஏற்றிய தீரர்.பகத்சிங் அமைத்த நவஜவான் பாரத் சபா அமைப்பில் பணியாற்றியவர்.[2]

பொதுவுடமை இயக்கத்தில்[தொகு]

இந்தியப் பொதுவுடமைக் கட்சியி‌ல் 1936 இ‌ல் இணை‌ந்தா‌ர்.ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3-வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றபோது, கட்சியின் அரசியல் தலைமைக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார்.பி‌ன்ன‌ர் 28 ஆ‌ண்டுக‌ளு‌க்கு ‌பிறகு இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி இர‌ண்டாகப் பிளவடைந்த போது, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியில் சேர்ந்தார்.13 ஆ‌ண்டுக‌‌ள் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலராக‌ப் ப‌ணியா‌ற்‌றிய சு‌ர்‌ஜீ‌த், ‌தீ‌விர அர‌‌சிய‌லி‌ல் இரு‌ந்து ஓ‌ய்வு பெ‌ற்றா‌ர்.1978 முத‌ல் 1984 வரை மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் பத‌வி வ‌கி‌த்த சு‌ர்ஜீ‌த், இர‌ண்டு முறை பஞ்சாப் ச‌ட்ட‌ப் பேரவை உறு‌ப்‌பினராகவு‌ம் இரு‌ந்து‌ள்ளா‌ர் (1953- 57 ம‌ற்று‌ம் 1967- 69).கா‌ஷ்‌மீ‌ர் ‌பிர‌ச்சனை உ‌ள்‌ளி‌ட்ட‌ப் ப‌‌ல்வேறு ‌விவகார‌ங்க‌ள் தொட‌ர்பாக நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பு‌த்தக‌ங்களையு‌ம் அவ‌ர் எழு‌தியு‌ள்ளா‌ர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nine to none, founders’ era ends in CPM" பரணிடப்பட்டது 2018-07-03 at the வந்தவழி இயந்திரம், The Telegraph (Calcutta), April 3, 2008.
  2. 2.0 2.1 "இன்று தோழர் சுர்ஜித் நினைவு நாள்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 1 ஆகத்து 2013. pp. 1. http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=39095. பார்த்த நாள்: 1 ஆகத்து 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]