இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொடி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (Democratic Youth Federation of India) இந்தியாவின் மிகப் பெரிய வாலிபர் அமைப்பாக கருதப்படுகிறது. இது நவப்மர் 3 1980ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உருவாகப்பட்ட அமைப்பாகும்.[1] இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைப்புகளை கொண்டு உள்ளது. அதில் அங்கமாக இயங்குவதுதான் இந்திய ஐனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி பிரதேச அமைப்பு.

அமைப்பு[தொகு]

அகில இந்திய தலைவர்: எம்.பி.ராஜேஸ் எம்.பி(கேரளா)


உறுப்பினர்கள்[தொகு]

2013 ஆண்டு நிலவரப்படி இந்திய அளவில் 1.32 கோடி உறுப்பினர்களும், புதுச்சேரியில் 10535 உறுப்பினர்கள் உள்ளனர். தெரு பிரச்சனை முதல் தேசப் பிரச்சனை வரை அனைத்திலும் தலையிடக் கூடிய அமைப்பாக செயல்பட்டு வருகிறது. சாதி, மத மோதலுக்கு எதிராக செயல்படுகிறது. தேசிய ஒருமைப்பாடு - ஒற்றுமையை வளர்க்கும் வேலையில் ஈடுப்பட்டு வருகிறது. எல்லோர்க்கும் இலவச கல்வி, எல்லோர்க்கும் சமூக பாதுகாப்பான வேலை என்ற கோஷத்தை முன்வைத்து இயங்கி வருகிறது. 15 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் உறுப்பினராக சேர்ந்து கொள்ள தகுதி உள்ளது. ஆண்-பெண், ஏழை பணக்காரன் சாதி மதம் எதுவும் உறுப்பினராக சேர தடைகிடையாது.[2]

வெளியிடுகள்[தொகு]

தமிழ்நாட்டில் இளைஞர் முழக்கம் என்ற மாதாந்திர இதழ் வெளியிடப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]