2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திரிபுரா சட்டப்பேரவையில் 60 இடங்கள் அதிகபட்சமாக 31 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 89.95% 1.43pp[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்தலுக்குப் பிந்தைய திரிபுரா சட்டமன்றம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல் (2023 Tripura Legislative Assembly election) 60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைப்பெற்றது.தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாணிக் சாகா தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கான வாக்குகள் 2 மார்ச் 2023 அன்று எண்ணப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி 32 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
பின்னணி
[தொகு]திரிபுரா சட்டமன்றத்தின் பதவிக் காலம் 22 மார்ச் 2023 அன்று முடிவடைய உள்ளது.[2] 2018 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வென்ற பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுவின் தலைவர் பிப்லப் குமார் தேவ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்தது.[3]
14 மே 2022 அன்று பிப்லப் குமார் தேவ் முதலமைச்சார் பதவியிலிருந்து விலகினார்.[4]மாணிக் சாகா புதிய முதலமைச்சராக பதவியேற்றார்.[5]
தற்போதைய அரசியல் நிலை
[தொகு]2022ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள 7 சட்டமன்ற உறுப்பினர்களில் பாரதிய ஜனதா கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்களும், திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியின் 3 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலகினர். அதில் நால்வர் திரிபுரா பூர்வகுடிகள் முன்னேற்ற மண்டலக் கூட்டணியிலும் (Tipraha Indigenous Progressive Regional Alliance); இருவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலும்; ஒருவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியிலும் இணைந்தனர்.[6][7]
8 மார்ச் 2023 அன்று தற்போதைய முதலமைச்சர் மாணிக் சாகா திரிபுரா மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.[8]
தேர்தல் அட்டவணை
[தொகு]தேர்தல் நிகழ்வு | அட்டவணை |
---|---|
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள் | 30 சனவரி 2023 |
வேட்பு மனு பரிசீலனை | 31 சனவரி 2023 |
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதிநாள் | 2 பிப்ரவரி 2023 |
தேர்தல் நாள் | 16 பிப்ரவரி 2023 |
வாக்கு எண்ணிக்கை நாள் | 2 மார்ச் 2023 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]60 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மார்ச் 2023 அன்று நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் அளவிற்கு 32 தொகுதிகளையும், அதன் கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி 1 தொகுதியையும் வென்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியில் மார்க்சிஸ் கட்சி 11 தொகுதிகளையும், [[இந்திய தேசிய காங்கிரசு 3 தொகுதிகளை வென்றுள்ளது. தனித்து களம் கண்ட புதிய கட்சியான திரிபுரா பூர்வகுடிகள் முன்னேற்ற மண்டலக் கூட்டணி 13 தொகுதிகளைக் கைப்பற்றியது.[9]
8 மார்ச் 2023 அன்று தற்போதைய முதலமைச்சர் மாணிக் சாகா திரிபுரா மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.[10]
கூட்டணி | கட்சி | வாக்குகள் % | தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | ± கூடுதல்/குறைவு | போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் | +/− | ||||
தேசிய ஜனநாயக கூட்டணி | பாரதிய ஜனதா கட்சி | 9,85,797 | 38.97 | வீழ்ச்சி 4.62 | 54 | 32 | வீழ்ச்சி 4 | ||
திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி | 31,838 | 1.26 | வீழ்ச்சி 6.12 | 6 | 1 | வீழ்ச்சி 7 | |||
மொத்தம் | 10,17,635 | 40.23 | வீழ்ச்சி 10.78 | 60[a] | 33 | வீழ்ச்சி 11 | |||
மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி | மார்க்சிஸ்ட் கட்சி | 6,22,829 | 24.62 | வீழ்ச்சி 17.6 | 43 | 11 | வீழ்ச்சி 5 | ||
இந்திய தேசிய காங்கிரசு | 2,16,637 | 8.56 | எழுச்சி 6.77 | 13 | 3 | எழுச்சி 3 | |||
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | 26,138 | 1.03 | எழுச்சி 0.47 | 1 | 0 | மாற்றமில்லை | |||
புரட்சிகர சோசலிசக் கட்சி | 17,007 | 0.67 | வீழ்ச்சி 0.08 | 1 | 0 | மாற்றமில்லை | |||
சுயேச்சைகள் | 16,558 | 0.65 | N/A | 1 | 0 | N/A | |||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி | 12,063 | 0.48 | வீழ்ச்சி 0.34 | 1 | 0 | மாற்றமில்லை | |||
மொத்தம் | 9,11,232 | 36.06 | வீழ்ச்சி 10.08 | 60 | 14 | வீழ்ச்சி 2 | |||
கூட்டணி இல்லை | திப்ரா மோதா கட்சி | TBD | TBD | TBD | 42 | 13 | எழுச்சி 13 | ||
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | 22,316 | TBD | TBD | 28 | 0 | மாற்றமில்லை | |||
சுயேச்சைகள் | TBD | TBD | TBD | 0 | மாற்றமில்லை | ||||
பிறர் | TBD | TBD | TBD | 0 | மாற்றமில்லை | ||||
நோட்டா | 34,449 | TBD | TBD | ||||||
மொத்தம் | 100% | ||||||||
செல்லாத வாக்குகள் | |||||||||
செல்லாத வாக்குகள் | |||||||||
மொத்த வாக்குகள் | |||||||||
Abstentions | |||||||||
பதிவான வாக்குகள் |
இதனையும் காண்க
[தொகு]- திரிபுரா சட்டமன்றம்
- திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018
- வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி
- 2023 இந்தியப் பொதுத்தேர்தல்கள்
- திரிபுரா முதலமைச்சர்களின் பட்டியல்
- திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura registered 89.95% polling amid six minor incidents". Deccan Herald (in ஆங்கிலம்). 2023-02-16. பார்க்கப்பட்ட நாள் 2023-02-18.
- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
- ↑ "Biplab Kumar Deb sworn in as Tripura CM" (in en-IN). The Hindu. 2018-03-09. https://www.thehindu.com/news/national/biplab-kumar-deb-to-be-sworn-in-as-tripura-cm/article22993657.ece.
- ↑ "Tripura Chief Minister Biplab Kumar Deb resigns". mint (in ஆங்கிலம்). 2022-05-14. பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.
- ↑ "Manik Saha takes oath as Tripura chief minister". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-05-15. பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.
- ↑ "Former MLA Ashish Das quits TMC, says party wants to use Tripura leaders as 'puppets'". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
- ↑ "Another BJP MLA Resigns In Tripura, 7th From Ruling Coalition To Quit". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
- ↑ Tripura election update: Manik Saha likely to take oath as Tripura CM on March 8
- ↑ GENERAL ELECTION TO THIRIPURA VIDHAN SABHA RESULT MARCH-2023
- ↑ Tripura election update: Manik Saha likely to take oath as Tripura CM on March 8