உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜ்நாத் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
31 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்நிர்மலா சீதாராமன்
உள்துறை அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்சுஷில் குமார் ஷிண்டே
பின்னவர்அமித் சா
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்
பதவியில்
23 ஜனவரி 2013 – 26 மே 2014
முன்னையவர்நிதின் கட்காரி
பின்னவர்அமித் சா
பதவியில்
24 திசம்பர் 2005 – 24 திசம்பர் 2009
முன்னையவர்எல். கே. அத்வானி
பின்னவர்நிதின் கட்காரி
உத்திர பிரதேச முதலமைச்சர்
பதவியில்
28 அக்டோபர் 2000 – 8 மார்ச் 2002
ஆளுநர்சுராஜ் பன்,
விஷ்னு காந்த் சாஷ்திரி
முன்னையவர்இராம் பிரகாசு குப்தா
பின்னவர்மாயாவதி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சூலை 1951 (1951-07-10) (அகவை 73)
உத்திரப் பிரதேசம், இந்தியாஇந்தியா
அரசியல் கட்சிபாரதீய ஜனதா கட்சி
துணைவர்சாவித்ரி சிங்
பிள்ளைகள்2 மகன்கள்
1 மகள்
முன்னாள் கல்லூரிதீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம்
இணையத்தளம்Official website

ராஜ்நாத் சிங் (பிறப்பு: சூலை 10, 1951, வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா) முன்னணி இந்திய அரசியல்வாதியும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள்[1] தலைவரும் இந்தியாவின் இராணுவ அமைச்சரும் ஆவார். இவர் பாஜகவின் இளைஞர் அணித் தலைவராகவும், பின் அவரது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் தலைவராகவும் இருந்துள்ளார். அவர் துவக்கத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்தார். இவர் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின் தனது நீண்ட காலத் தொடர்புகளைப் பயன்படுத்தி ஜனதா கட்சியில் ஈடுபட்டார். அதனால் அவர் உத்தரப் பிரதேசத்தில் எண்ணற்ற பதவிகளைப் பெறுவது எளிதானது.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ராஜ்நாத் சிங் இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தின் சாந்தோலி மாவட்டத்திலுள்ள பாபோரா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ராம் பதன் சிங் மற்றும் தாயார் குஜராத்தி தேவி என்பவரும் ஆவர்.[2] விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்று தேர்ச்சி பெற்று இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2] ராஜ்நாத் சிங் 1964 ஆம் ஆண்டு முதல் தனது 13 ஆம் வயதிலிருந்து ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் தொடர்புகொண்டிருந்தார், மிர்சாபூரில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்த போதும் அந்த நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்தார்.[2] 1974 ஆம் ஆண்டில் ஒரு ஹிந்துத்வ அடிப்படை அரசியல் கட்சியான பாரதீய ஜன சங்கின் மிர்சாபூர் பிரிவின் செயலராக நியமிக்கப்பட்டார்.[2]

ஆரம்ப அரசியல் தொழில் வாழ்க்கை

[தொகு]

1975 ஆம் ஆண்டில், 24 வயதான ராஜ்நாத் சிங் ஜன சங்கின் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2] 1977 ஆம் ஆண்டில் மிர்சாபூர் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அவரது இளம் வயதிலான வேகமான வளர்ச்சி பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியின் தலைவராக ஆவதற்கும் வழிவகுத்தது.[2] 1984 ஆம் ஆண்டில் அவர் இளைஞர் அணியின் மாநிலத் தலைவராக ஆனார், 1986 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் அணியின் செயலராக நியமிக்கப்பட்டார்.[2] 1988 ஆம் ஆண்டில் அவர் இறுதியாக பாஜகவின் இளைஞர் தேசியத் தலைவராக உயர்ந்தார், மேலும் உத்தரப் பிரதேச மேலவையின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[2]

1991 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் பாஜக அரசில் கல்வி மந்திரியாக ஆனார். வரலாற்றுப் புத்தகங்களை மீண்டும் எழுதச் செய்ததும் வேத கணிதத்தை பாடத் திட்டத்தில் சேர்த்ததும் அவர் கல்வி மந்திரியாக இருந்த காலத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளாகும்.[2] 1994 ஆம் ஆண்டு ஏப்ரலில் மாநிலங்களவைக்கு (இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை) தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் தொழிற் துறையின் ஆலோசனைக் குழுவில் (1994-96) ஈடுபட்டிருந்தார், வேளாண் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவிலும், அலுவல் ஆலோசனைக் குழுவிலும், அவைக் குழுவிலும், மனித வள மேம்பாட்டுத் துறைக் குழுவிலும், பணியாற்றினார்.[2]

1997 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று உத்தரப் பிரதேச பாஜகவின் தலைவராக ஆனார். மேலும் 1999 ஆம் ஆண்டில் மைய தரை வழிப் போக்குவரத்தின் கேபினட் அமைச்சரானார்.[2] அடல் பிஹாரி வாஜ்பாயின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் ராஜ்நாத் சிங் வேளாண் துறை அமைச்சராக பொறுப்பேற்றார், மேலும் இந்தியப் பொருளாதாரத்தின் மிக மாறுதலுக்குள்ளாகும் பகுதியை நிலைநிறுத்தும் கடினமான பணியினை எதிர்கொண்டார்.[3]

2005 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று லால் கிருஷ்ண அத்வானியின் பதவி விலகலைத் தொடர்ந்து, பாஜக மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இணைந்து அவரை கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் மீண்டும் 2006 ஆம் ஆண்டு நவம்பரில் அவரது வேட்பு மனுவுக்கு போட்டியின்றியும், குழுவின் 15 பரிந்துரைகளுடனும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

பா.ஜ.க தலைவராக

[தொகு]

அடல் பிஹாரி வாட்ச்பாய் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் பதவியிழந்ததால் பாஜக எதிர்கட்சியாக அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, பாஜக பல சிக்கல்களுடனிருந்த அந்த நிலையில் ராஜ்நாத் சிங் அக்கட்சியில் நுழைந்தார். முன்னணி நபரான லால் கிருஷ்ண அத்வானியின் பதவி விலகலுக்குப் பிறகும், தந்திரோபாய பிரமோத் மகாஜனின் கொலைக்குப் பிறகும், அவர் கட்சியை மிக அடித்தளமான ஹிந்துத்வா கருத்தாக்கங்களின்படி கவனம் குவித்து மறுபடியும் வளர்க்கக் கருதினார்.[5] அவர் அயோத்தியாவின் ராமர் கோயில் கட்டுவதுடனான தொடர்பில் "சமரசமற்ற" தனது நிலைப்பாட்டினை அறிவித்தார்.[5] பிரதம மந்திரியாக வாஜ்பாயின் ஆட்சியை பாராட்டி, இந்தியாவின் சாமான்ய மக்களுக்கு தேசிய ஜனநாயக் கூட்டணியால் செய்யப்பட்ட அனைத்து வளர்ச்சிகளையும் சுட்டிக்காட்டினார்.

அவரது தலைமையானது கட்சிக்கு ஐந்து மாநிலத் தேர்தல்களில் 2006 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஏமாற்றத்தைப் பெற்றாலும் அவ்வருடத்தின் பிற்பகுதியில் பாஜக நகர்மன்ற தேர்தல்களின் வெற்றியினால் புத்துணர்ச்சியைத் தந்தது, மேலும் 2007 இன் துவக்கத்தில் பாஜகவின் வெற்றியை உத்தராகண்ட் மற்றும் பஞ்சாப்பில் அவரது மேற்பார்வையில் கண்டது, அதே போல டெல்லி, சண்டிகர் மற்றும் மகாராஷ்டிரா முழுதும் வெற்றியினைக் கண்டது.

ராஜ்நாத் சிங் பாஜகவில் தலைவர்களாக இருந்தவர்களிலேயே மோசமானவர் என அழைக்கப்படுகிறார். [சான்று தேவை] அவரது நான்காண்டு பதவிக் காலத்தில், பாஜக முக்கியமாக 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வி கண்டது, பாஜக அவரது சொந்த மாநிலத்தில் விளிம்பிற்குத் தள்ளப்பட்டது, ராஜஸ்தானில் கருத்து வேறுபாட்டினை கையாண்டவிதம் மற்றும் குழுவாதத்தை ஊக்குவித்தது ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தது.

உள்துறை அமைச்சர்

[தொகு]

டில்லி ஜனாதிபதி மாளிகையில் மே 26,2014 அன்று ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் பிரதமர் நரேந்திர மோதியின் மத்திய அமைச்சர்களில் ஒருவராவார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஊரில் இல்லாத நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியது இருந்தால், அது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை அணுகுமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் [6].

பொறுப்பு பிரதமர்

[தொகு]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணத்தின் போது இவர் பொறுப்பு பிரதமாராக இருந்தார். அதன்படி 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் அக்டோபர் 1 ஆம் திகதி வரை பொறுப்பு பிரதமராக இருந்தபோது மகராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரை செய்தார்.[7]

காலக் குறிப்புகள்

[தொகு]
அரசியல் பதவிகள்
முன்னர்
ராம் பிரகாஷ் குப்தா

{{s-ttl|title = உத்தரபிரதேச முதல்வர்|years = 28 October 2000 – 08 March 2002

பின்னர்
கவர்னர் ஆட்சி

மேற்குறிப்புகள்

[தொகு]
  1. பெயர் பெற்றவர் அமித் ஷா
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 "Rajnath Singh: Profile". Zee News. http://www.zeenews.com/znnew/articles.asp?rep=2&aid=264537&sid=ARC. 
  3. "Courage, Mr Rajnath Singh". The Hindu. http://www.thehindubusinessline.com/2003/06/11/stories/2003061100100800.htm. 
  4. ராஜ்நாத் சிங் பி.ஜே.பி.யின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் Sify - நவம்பர் 26, 2006
  5. 5.0 5.1 "It's basic instinct for Rajnath Singh". The Times of India. http://timesofindia.indiatimes.com/Its_basic_instinct_for_Rajnath_Singh/articleshow/911268.cms. 
  6. http://tamil.thehindu.com/india/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6450011.ece?homepage=true மோடி அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்குக்கு இரண்டாம் இடம்
  7. நாள் ‘பொறுப்பு பிரதமர்’ பதவி வகித்த சுஷ்மா: மோடி வெளிநாட்டுப் பயணத்தால் வாய்ப்பு தி இந்து தமிழ் 26 நவம்பர் 2015

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்நாத்_சிங்&oldid=4000589" இலிருந்து மீள்விக்கப்பட்டது