ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா
Himanta Biswa Sarma,.jpg
15-வது அசாம் முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
10 மே 2021
ஆளுநர் ஜெகதீஷ் முகி
முன்னவர் சர்பானந்த சோனாவால்
தொகுதி ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதி
அமைச்சர், அசாம் அரசு
பதவியில்
24 மே 2016 – 9 மே 2021
முதலமைச்சர் சர்பானந்த சோனாவால்
துறைகள் நிதி, திட்டம் & மேம்பாடு, சுகாதாரம் மற்றும் குடும்பநலம், கல்வி & பொதுப்பணித் துறை
பதவியில்
2011–2014
முதலமைச்சர் தருண் கோகய்
துறைகள் நிதி, சுகாதாரம் & நல்வாழ்வுத் துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுத் துறை
பதவியில்
2006–2011
முதலமைச்சர் தருண் கோகய்
துறைகள் சுகாதாரம் மற்றும் குடுமப நலத் துறை
இணை அமைச்சர்
பதவியில்
1 செப்டம்பர் 2004 – சூன் 2006
முதலமைச்சர் தருண் கோகய்
துறைகள் நிதி மற்றும் திட்டம் & மேம்பாட்டுத் துறை
பதவியில்
7 சூன் 2002 – 31 ஆகஸ்டு 2004
Chief Minister தருண் கோகய்
துறைகள் வேளாண்மை மற்று திட்டம் & மேம்பாட்டுத் துறை
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2001
முன்னவர் பிருகு குமார் புகான்
தொகுதி ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 1 பெப்ரவரி 1969 (1969-02-01) (அகவை 52)
ஜோர்ஹாட், அசாம், இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
சார்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (1996–2015)
வாழ்க்கை துணைவர்(கள்) ரினிகி பூயான் சர்மா (திருமணம் 7 சூன் 2001)
பிள்ளைகள் 2
இருப்பிடம் குவகாத்தி
படித்த கல்வி நிறுவனங்கள் காட்டன் கல்லூரி
பிஆர்எம் அரசுச் சட்டக் கல்லூரி
குவகாத்தி பல்கலைக்கழகம்
இணையம் Himanta Biswa Sarma

ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா (Himanta Biswa Sarma) (பிறப்பு:1 பிப்ரவரி 1969) பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியான இவர் அசாம் அரசின் 15வது முதலமைச்சராக 10 மே 2021 அன்று பதவியேற்க உள்ளார்.[1]. இவர் அசாம் சட்ட மன்றத்திற்கு ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011ஆம் ஆண்டு முதல் 2015 வரை இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகவும், பின் மே 2016 முதல் 2021 வரை பாரதிய ஜனதா கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி 23 ஆகஸ்டு 2015 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[3]

24 மே 2016 அன்று பாரதிய ஜனதா கட்சி ஆளும் அசாம் அரசின் மூத்த அமைச்சராக பதவியேற்றார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் கைலாஷ் நாத் சர்மா - மிருணாளினி தேவி தம்பதியருக்கு 1 பிப்ரவரி 1969 அன்று ஜோர்ஹாட் நகரத்தில் பிறந்தார்.[5]இவர் கவுகாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை அரசியல் படிப்பை முடித்தார். பின்னர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். 1996 முதல் 2001 முடிய வழக்கறிஞராக பணியாற்றினார். 7 சூன் 2001 அன்று ரினிகி பூயான் என்ற பெண்மணியை திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு நந்தில் பிஸ்வாஸ் சர்மா மகன் உள்ளது.[6]

அரசியல் வாழ்க்கை[தொகு]

சர்மா இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2001 மற்றும் 2006 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ந்து மூன்று முறை அசாம் சட்டமன்றத்திற்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] சர்மா 2002 முதல் 2014 முடிய அசாம் அரசில் வேளாண்மை, திட்டம் & மேம்பாட்டுத் துறை, நிதி, சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் அமைச்சராக பதவி வகித்தார்.[7][8]

21 ஏப்ரல் 2014 அன்று இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகிய சர்மா, 23 ஆகஸ்டு 2015-இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வென்ற பாரதிய ஜனதா கட்சி அரசின் நிதி, திட்டம் & மேம்பாடு, சுகாதாரம் மற்றும் குடும்பநலம், கல்வி & பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார் சர்மா. 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலில் சர்மா மீண்டும் ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்காவது முறையாக வென்று, சர்பானந்த சோனாவால் தலைமையிலான அமைச்சரவையில் மூத்த அமைச்சராக பதவி வகித்தார்.

2021 அசாம் சட்டமன்றத் தேர்தலில் சர்மா ஐந்தாம் முறையாக ஜலுக்பாரி தொகுதியிலிருந்து வென்று அசாம் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

அசாம் முதலமைச்சராக[தொகு]

ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா 2021 அசாம் சட்டமன்றத் தேர்தலில் ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஐந்தாம் முறையாக வென்று அசாம் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 10 மே 2021 அன்று சர்மா 15-வது அசாம் முதலமைச்சராக பதவியேற்றார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]