தேவேந்திர பத்னாவிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவேந்திர கங்காதர பட்னவீஸ்
Devendra Fadnavis Official Photo.jpg
18வது மகாராட்டிர முதலமைச்சர்
பதவியில்
23 நவம்பர் 2019 – 26 நவம்பர் 2019
ஆளுநர் பகத்சிங் கோசியாரி
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் உத்தவ் தாக்கரே
பதவியில்
31 அக்டோபர் 2014 – 12 நவம்பர் 2019
ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ் பகத்சிங் கோசியாரி
முன்னவர் பிரித்திவிராசு சவான்
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
நாக்பூர் தென்மேற்கு தொகுதியின்
Member of the மகாராட்டிர சட்டப்பேரவை Assembly
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2009
நாக்பூர் மேற்கு தொகுதியின்
Member of the மகாராட்டிர சட்டப்பேரவை Assembly
பதவியில்
1999–2002
முன்னவர் வினோத் குடாதெ-பாட்டீல்
பின்வந்தவர் சுதாகர் தேஷ்முக்
தனிநபர் தகவல்
பிறப்பு 22 சூலை 1970
நாக்பூர்
தேசியம்  இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அம்ருதா பட்னவீஸ்
பிள்ளைகள் திவிஜா பட்னவீஸ் (மகள்)
சமயம் இந்து
இணையம் www.devendrafadnavis.in

தேவேந்திர கங்காதர பட்னவீஸ் (Devendra Gangadhar Fadnavis, , பிறப்பு 22 சூலை 1970) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் மகாராட்டிர மாநிலத் தலைவராகவும் நாக்பூர் சட்ட மன்ற உறுப்பினராகவும் உள்ளார். நாக்பூர் நகர மேயராகவும் பணியாற்றி உள்ளார். முன்னாள் மகாராட்டிர முதலமைச்சர் ஆவார்.[1]

1990களில் இவரது அரசியல் வாழ்க்கைத் துவங்கியது; பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவா மோர்ச்சாவின் மகாராட்டிரக் கிளையில் வார்டுத் தலைவராக துவங்கினார். தமது 21வது அகவையிலேயே நாக்பூர் நகராட்சி மன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992இலும் 1997இலும் தொடர்ந்து வெற்றி பெற்றி நகரமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தார்.[2]

1997இல் தமது 27வது அகவையில் நாக்பூர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராட்டிர சட்டப் பேரவையில் 1999 முதல் நாக்பூரிலிருந்து சட்ட மன் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]

இளமை வாழ்க்கை[தொகு]

பத்னாவிசு நாக்பூரில் 1970இல் பிறந்தார். இவரது தந்தை, கங்காதர பத்னாவிசும் நாக்பூரிலிருந்து மகாராட்டிர சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தவர் ஆவார். 1987இல் புற்றுநோயால் பத்னாவிசின் தந்தை உயிரிழந்தார். இவரது தாயார் சரிதா பத்னாவிசு அமராவதியின் கலோட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர். விதர்பா வீட்டுக் கடன் சங்கத்தில் இயக்குநராகப் பணியாற்றினார். தந்தையின் காலடியைப் பின்பற்றி பத்னாவிசு இளம் வயதிலேயே இராட்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்தார்.

1986-87இல் தர்மபீத் கல்லூரியிலும் பின்னர் ஐந்தாண்டுகள் நாக்பூர் சட்டக் க்கலூரியிலும் கல்வி பெற்றார். 1986 முதல் 89 வரை அகில பாரத மாணவர் சங்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக விளங்கினார். பெர்லினின் செருமன் பன்னாட்டு மேம்பாட்டிற்கான நிறுவனத்தில் (D. S. E.) வணிக மேலாண்மையில் பட்டமேற்படிப்பு பட்டமும் திட்ட மேலாண்மையில் பட்டயமும் பெற்றார்.[4]

குடும்ப வாழ்க்கை[தொகு]

தேவேந்திர பத்னாவிசு மத்தியதர பழைமைவாத இந்துக் குடும்பத்தில் பிறந்தவர். 2006இல் அரசியல் பின்னணியில்லாத குடும்பத்தின் அம்ருதா இராணடேயை திருமணம் புரிந்தார். அம்ருதா நாக்பூரிலுள்ள ஆக்சிசு வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் திவிஜா என்ற மகள் பிறந்தார்.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவேந்திர_பத்னாவிசு&oldid=2859389" இருந்து மீள்விக்கப்பட்டது