பங்காரு லட்சுமண்
தோற்றம்
பங்காரு லட்சுமண் | |
|---|---|
| மத்திய இராஜாங்க அமைச்சர், இரயில்வே துறை | |
| பதவியில் 1999–2000 | |
| தேசியத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி | |
| பதவியில் 2000–2001 | |
| முன்னையவர் | குஷபாவு தாக்கரே |
| பின்னவர் | ஜனா கிருஷ்ணமூர்த்தி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 17 மார்ச்சு 1939 ஆந்திரப் பிரதேசம்இந்தியா |
| இறப்பு | 1 மார்ச்சு 2014 (அகவை 74) |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | சுசீலா |
| பிள்ளைகள் | 3 மகன்களும் ஒரு மகளும் |
| சமயம் | இந்து |
பங்காரு லட்சுமண் (மார்ச் 17, 1939 – மார்ச் 1, 2014[1]) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒர் இந்திய அரசியல் பிரமுகர். இவர் இந்திய அரசின் இரயில்வே துறை அமைச்சராக 1999-2000 ஆண்டுகளில் இருந்துள்ளார். அதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான இவருக்கு, தெகல்கா ஊழல் வழக்கின் காரணமாக நான்காண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.[2]
தனி வாழ்க்கை
[தொகு]இவர் ஆந்திராவின் மடிகா தலித் இனத்தவர், ஐதராபாத்தில் இளங்கலையும் சட்டமும் பயின்றவர். இவருடைய துணைவியாரான சுசீலா பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலூர் தொகுதியிலிருந்து 14-வது மக்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BJP leader Bangaru Laxman passes away". டி.என்.ஏ. 1 மார்ச் 2014 மாலை 6 மணி. Retrieved 1 மார்ச் 2014.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ "Bangaru Laxman sent to 4 years in jail". டி.என்.ஏ. 29 ஏப்ரல் 2012. Retrieved 1 மார்ச் 2014.