சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)
Jump to navigation
Jump to search
சட்ட மன்ற உறுப்பினர் (ச.ம.உ) (Member of Legislative Assembly = MLA) என்பவர் இந்தியாவில் ஒரு தொகுதியின் வாக்காளர்களால் சட்ட மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதியாவார். இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட சட்ட மன்றங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொறு மாநிலத்தின் எதிர்காலம் மற்றும் மாநில நிர்வாகத்திற்கு அம்மாநிலத்தின் சட்டமன்றமே முதன்மைக் காரணியாக உள்ளன. அவற்றின் உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
தகுதி[தொகு]
நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு உரிய தகுதி விதிகள், இதற்கும் உரியதாகும். அதன்படி இந்திய குடியுரிமை உள்ள எவரும், சட்டமன்ற தேர்தலில் பங்கு கொண்டு வெற்றி பெற வேண்டும். அவருக்கு வயது இருபத்தைந்துக்கு மேல் இருக்க வேண்டும்.[1]