புஷ்கர் சிங் தாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புஷ்கர் சிங் தாமி
புஷ்கர் சிங் தாமி
10-வது [[உத்தராகண்ட் முதலமைச்சர்]]
பதவியில்
4 சூலை 2021 – தற்போது வரை
ஆளுநர் பேபி ராணி மௌரியா
முன்னவர் தீரத் சிங் ராவத்
உத்தராகண்ட் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2012–2022
தொகுதி கதிமா சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 16 செப்டம்பர் 1975 (1975-09-16) (அகவை 46)
பிதௌரகட், உத்தராகண்ட், இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கீதா தாமி
பிள்ளைகள் 2 மகன்கள்
இருப்பிடம் காதிமா, உதம்சிங் நகர் மாவட்டம்
கல்வி முதுநிலை சட்டப் படிப்பு
படித்த கல்வி நிறுவனங்கள் லக்னோ பல்கலைக்கழகம்
இணையம் www.pushkarsinghdhami.in

புஷ்கர் சிங் தாமி (Pushkar Singh Dhami, பிறப்பு: 16 செப்டம்பர் 1975) இந்தியாவின் உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் 4 சூலை 2021 அன்று 10-வது உத்தராகண்ட் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.[1] 2017-இல் புஷ்கர் சிங் தாமி உதம்சிங் மாவட்டத்தில் உள்ள கதிமா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். [2][3] இவர் இளம் வயதில் 45வது அகவையில் உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டவர்.

2022 உத்தரகண்ட் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், புஷ்கர் சிங் தாமியை இரண்டாம் முறையாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டு, 23 மார்ச் 2022 அன்று பதவியேற்றார்.[4][5]

பின்னணி[தொகு]

2017-இல் நடைபெற்ற உத்தரகண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பலம் பெற்று, முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். உட்கடசி பூசல்களால் 10 மார்ச் 2021 அன்று திரிவேந்திர ராவத் முதலமைச்சர் பதவி துறந்தார். பின்னர் மக்களவை உறுப்பினராக உள்ள தீரத் சிங் ராவத் 10 மார்ச் 2021 அன்று முதலமைச்சராக பதவியேற்றார். சட்டமன்ற உறுப்பினராக இல்லாத தீரத் சிங் ராவத், வரும் செப்டம்பருக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வேண்டிய சூழல் இருந்தது. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தற்போது தயாராக இல்லை. எனவே, தீரத் சிங் ராவத் செப்டம்பருக்குள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் எழுந்தது. உத்தரகண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சியிலும் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அடுத்தாண்டு, உத்தரகண்டில் சட்டமன்ற தேர்தலும் நடக்கவுள்ளது. இந்நிலையில் உத்தராகண்ட் சட்டமன்ற உறுப்பினரான புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[6][7][8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்கர்_சிங்_தாமி&oldid=3412249" இருந்து மீள்விக்கப்பட்டது