பிரமோத் சாவந்த்
பிரமோத் சாவந்த் | |
---|---|
13ஆவது கோவா முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 மார்ச் 2019 | |
ஆளுநர் | மிருதுளா சின்கா |
முன்னையவர் | மனோகர் பாரிக்கர் |
கோவா சட்டப் பேரவைத் தலைவர் | |
பதவியில் 22 மார்ச் 2017 – 18 மார்ச் 2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 ஏப்ரல் 1973 கோவா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சுலக்சனா சவான்ட் |
பிரமோத் சாவந்த் (Pramod Sawant)(பிறப்பு: 24 ஏப்ரல் 1973) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், கோவா மாநிலத்தின் 13ஆவது (தற்போதைய) முதலமைச்சரும் ஆவார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.[2]
இளமைக் காலம்
[தொகு]இவர் ஏப்ரல் 24, 1973 ஆண்டு பாண்டுரங் - பத்மினி சாவந்த் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[3][4] இவர் கோலாப்பூரில் உள்ள கங்கா ஆயுர்வேதி மருத்துவக் கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை துறையில் பட்டம் பெற்றார். பின்னர் புனேவில் உள்ள திலக் மகாராட்டிரா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார்.
இவரது மனைவி சுலக்சனா சவான்ட் ஆவார்.[5] இவர் பிக்கோலிம் நகரில் உள்ள ஶ்ரீ சாந்ததுர்கா மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக உள்ளார்.[6]
அரசியல் வாழ்க்கை
[தொகு]சாவந்த் கோவா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள சான்கியூலிம் தொகுதியிலிருந்து கோவ சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் இருந்துள்ளார்.
கோவா முதலமைச்சராக
[தொகு]- கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்குப் பிறகு, கோவா முதல்வர் பதவிக்கு, பிரமோத் சாவந்த் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கோவாவின் 13வது முதலமைச்சராக 19 மார்ச் 2019 அன்று பதவியேற்றார்.[7][8][9]
- 2022 கோவா சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக, 20 தொகுதிகளில் வென்ற பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக பிரமோத் சாவந்த் மீண்டும் இரண்டாம் முறையாக 21 மார்ச் 2022 அன்று தேர்வு செய்யப்பட்டார்.[10][11][12]28 மார்ச் 2022 அன்று கோவா முதலமைச்சராக பதவி ஏற்றார்.[13][14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Murari Shetye. "Goa speaker Pramod Sawant succeeds Parrikar as CM" The Times of India. 19 March 2019.
- ↑ "Pramod Pandurang Sawant(Bharatiya Janata Party(BJP)):Constituency- SANQUELIM(NORTH GOA) - Affidavit Information of Candidate:". myneta.info.
- ↑ Times, Navhind. "CM to lay corner stone for Sankhali bus stand today - The Navhind Times".
- ↑ http://www.goavidhansabha.gov.in/uploads/members/148_profile_PSawant-12.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.goanews.com/news_disp.php?newsid=6904&catid=197
- ↑ "Pramod Sawant: 9 Interesting facts about Speaker of Goa Legislative Assembly".
- ↑ "From Ayurveda practioner [sic] to Goa CM: All you need to know about Pramod Sawant". India Today. March 19, 2019. https://www.indiatoday.in/india/story/all-you-need-to-know-about-goa-cm-pramod-sawant-1481382-2019-03-19.
- ↑ "जानिए गोवा के नए CM प्रमोद सावंत के बारे में 5 बड़ी बातें". Economic Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
- ↑ "प्रमोद सावंत बने गोवा के नए CM, दो उप-मुख्यमंत्रियों ने भी ली शपथ". Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
- ↑ கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு
- ↑ BJP goes with tried and tested CMs — Dhami in Uttarakhand, Sawant in Goa
- ↑ கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு
- ↑ Pramod Sawant takes oath as Goa CM for second term
- ↑ Pramod Sawant takes oath as Goa CM