உள்ளடக்கத்துக்குச் செல்

அனில் அந்தோணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனில் அந்தோனி, இந்தியாவின் கேரள மாநில இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவரான ஏ. கே. ஆண்டனியின் மகனும், கேரள பிரதேச அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தவர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் பற்றிய தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்த பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து சனவரி 2023ல் விலகினார். 6 ஏப்ரல் 2023 அன்று தலைநகர் தில்லியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் வி. முரளிதரன் முன்னிலையில் அனில் அந்தோனி இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[1][2][3]

கல்வி & பணி

[தொகு]

அனில் அந்தோணி 2007ல் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் தொழிலக பொறியலில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் கலிபோர்னியாவில் உள்ள இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் பொறியல் மேலாண்மைப் படிப்பில் பட்டமேற்படிப்பை முடித்தார்.

அனில் அந்தோணி சிஸ்கோ, டார்க், காஸ்பர் லேப்ஸ் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். கோவிட்19க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு உதவக்கூடிய புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை அடையாளம் காணவும், மேம்படுத்தவும், வரிசைப்படுத்தவும், இணைந்து செயல்படும் கண்டுபிடிப்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுகாதார கொள்கை வகுப்பாளர்களின் செயல் குழுவை நிறுவினார்.[4]

தேசியச் செய்தித் தொடர்பாளராக

[தொகு]

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக, அனில் ஆன்டனியை தேசியத் தலைவர் ஜே. பி. நட்டாவால் 29 ஆகஸ்டு 2023 அன்று நியமிக்ப்பட்டார். [5] [6]

[7]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_அந்தோணி&oldid=3783476" இலிருந்து மீள்விக்கப்பட்டது