சம்பித் பத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம்பித் பத்ரா (பிறப்பு:13 டிசம்பர் 1974), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2014 முதல் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளரும், அறுவை சிகிச்சை மருத்தவரும் ஆவார்.[1]சம்பித் பத்ரா 2010ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் தில்லி செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டபோது அரசியலுக்கு வந்தார். 2014ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.

சம்பித் பத்ரா, போகாரோ மாவட்டம், பொகாரோவில் உள்ள சின்மயா வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் ஒடிசாவின் சம்பல்பூர் மாநகரத்தில் உள்ள வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை மருத்துவம் படித்தார். பின்னர் உத்கல் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ ராமச்சந்திர பஞ் மருத்துவக் கல்லூரியில் பொது அறுவை சிகிச்சையில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 2003ல் இந்து ராவ் மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அரசியல்[தொகு]

2011ல் சம்பித் பத்ரா தில்லி மாநகராட்சி தேர்தலில் காஷ்மீர் கேட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2014ல் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் சம்பித் பத்ரா புரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு பிஜு ஜனதா தளம் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பித்_பத்ரா&oldid=3782889" இலிருந்து மீள்விக்கப்பட்டது