உள்ளடக்கத்துக்குச் செல்

இயக்குநர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இயக்குனர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்த் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா

திரைப்பட இயக்குநர் (Film director), அல்லது இயக்குநர் என்பவர் ஓர் திரைப்படம் உருவாக்கப்படுவதைச் செயல்படுத்துபவர் மற்றும் திரைப்படத் தயாரிப்பை வழிகாட்டுபவர்.

ஓர் இயக்குநர் திரைக்கதையை மன ஓவியமாக தீட்டி, திரைப்படத்தின் கலை மற்றும் நாடகத்தன்மையின் அங்கங்களை கட்டுப்படுத்தித் தொழில்நுட்பக் கலைஞர்களையும் நடிகர்களையும் வழிகாட்டி தனது மன ஓவியத்தினை வெளிக்கொணரும் கலைஞராவார். சில நேரங்களில் திரைப்பட இயக்குநர்களுக்கு முழு சுதந்திரம் இருக்காது. ஓர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அப்படத்திற்கான இயக்குநரை தேர்வு செய்வார். இத்தகைய நேரங்களில் தயாரிப்பாளர் இயக்குநரை கட்டுப்படுத்தும் போக்குக் காணப்படலாம்.

ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடரின் தனிக்காட்சியை இயக்கும்போது இயக்குநரின் பங்கு ஓரளவு குறைந்திருக்கும். நிகழ்ச்சித் தயாரிப்பாளரே தொடரின் காட்சியமைப்பையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் பார்வையாளர் பின்னூட்டத்திற்கொப்ப வரையறுத்திருப்பார்.[1]

திரைப்பட இயக்குநராக வருவதற்கு முன்பு சில திரைப்பட இயக்குநர்கள் திரைக்கதை எழுத்தாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட ஆசிரியர்கள் அல்லது நடிகர்களாக இருந்துள்ளனர். அதே போன்று சிலர் திரைப்படப் பள்ளியில் பயின்றனர் அல்லது இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணி புரிந்துள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Karl French (2006-08-27). "Seeing the director’s point of view". Financial Times. http://www.ft.com/cms/s/50cfb916-35e9-11db-b249-0000779e2340.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்குநர்_(திரைப்படம்)&oldid=3370956" இலிருந்து மீள்விக்கப்பட்டது