பண்பியல் மாதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்பியல் மாதிரி (abstract model) என்பது, கோட்பாட்டு அடிப்படையிலான ஒரு அமைப்புரு (construct) ஆகும். இது ஒரு குறிப்பிட்ட தொகுதி மாறிகளையும், அவற்றுக்கு இடையிலான ஒரு தொகுதி தருக்க அடிப்படையிலான தொடர்புகளையும் கொண்டிருக்கும். இந்த அடிப்படையில் மாதிரிகள், இலட்சிய நிலையில், தருக்கமுறை அமைப்பினுள், விளக்கங்களைக் கொடுக்க வகை செய்வதுடன், அறிவியல் கோட்பாடுகளின் முக்கிய உறுப்புக்களாகவும் அமைகின்றன. இங்கே, இலட்சிய நிலை என்று குறிப்பிட்டதன் மூலம், மாதிரியானது, பிழை அல்லது சில விபரங்களில் முழுமையற்றது என அறியப்பட்டவற்றை எடுகோள்களாகக் கொண்டிருக்கக் கூடும் என்பது குறிப்பிடப்படுகிறது. மாதிரியை எளிமையாக்குகின்ற வேளையில், ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வுகளையும் கொடுக்கும் என்ற வகையில் இத்தகைய எடுகோள்கள், போதுமானவையாகக் கொள்ளப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பியல்_மாதிரி&oldid=3094447" இலிருந்து மீள்விக்கப்பட்டது