நடிகர்களின் பங்கினை தேர்ந்தெடுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடிகர்களின் பங்கினை தேர்ந்தெடுத்தல் அல்லது நடிகர்களின் வேடங்களைத் தேர்வு செய்தல் (Casting) என்பது அரங்கம், திரைப்படம் அல்லது தொலைக்காட்சி போன்ற நிகழ்த்து கலையில் நடிப்பதற்காக குறிப்பிட்ட வகை நடிகர், நடனக் கலைஞர், பாடகர் அல்லது ஒரு குறிப்பிட்ட கதாப்பாத்திரத்திற்காக ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு முன் தயாரிப்பு செயல்முறையாகும்.

இந்த செயல்முறை பொதுவாக ஒரு திரைப்படத்துறை,[1] தொலைக்காட்சித்துறை, ஆவணப்படம், இசை காணொளி, நாடகம் அல்லது தொலைக்காட்சி விளம்பரம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் நேர்முறை தேர்வு மூலம் நடிகர்களின் பங்கினை தேர்ந்தெடுக்கப்படுகின்றது.

நடிகர்களின் பங்கினை தேர்ந்தெடுக்கும் முறை[தொகு]

நடிகர்கள் பல்வேறு வகையான வேடங்களில் நடிக்க தேர்வு செய்யப்படுகிறார்கள். முக்கிய நடிகர்களின் தேர்வை நட்சத்திர வேடங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இது திரைப்படம், நாடகம் அல்லது தொலைக்காட்சியில் தோற்றமளிக்கும் பல நடிகர்களைக் கொண்டுள்ளது. கதாநாயகனாக அல்லது கதாநாயகியாக நடிக்கும் மிகப்பெரிய கதாப்பாத்திரம் ஒரு முன்னணி நடிகர் என்று அழைக்கப்படுகிறது.[2] ஒருவர் முன்னணி நடிகர் இல்லாதபோது, முக்கிய கதாபாத்திரங்களை குழும நடிகர்கள் என்று அழைக்கப்படுகின்றன, இதில் பல முக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]