உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடைகலன் வடிவமைப்பாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடைகலன் வடிவமைப்பாளர் இராபர்ட்டு எட்மண்டு ஜோன்சு (1887-1954) இடுப்பளவு உயர மேசை ஒன்றில் வரைந்து கொண்டிருக்கிறார். (c. 1920).

ஆடைகலன் வடிவமைப்பாளர் (costume designer) எனப்படுபவர் திரைப்படம் அல்லது நாடகம் ஒன்றுக்காக உடைகளையும் பிற அணிகலன்களையும் வடிவமைப்பவராவார். இவரது செயற்பாட்டால் கதைமாந்தர்களின் பண்பு வெளிப்படுத்தப்படுவதுடன் காட்சிகளும் சரியான இழையமைப்பு, வண்ணக்கலவை போன்றவற்றால் சமனப்படுத்தப்படும்.[1] ஆடைகலன் வடிவமைப்பாளர் இயக்குநர், காட்சி அமைப்பு, ஒளியமைப்பு, ஒலியமைப்பு போன்ற மற்ற வடிவாக்க கலைஞர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறார். மேலும் சிகை அலங்காரம், செயற்கை சிகை வடிவமைப்பாளர், ஒப்பனையாளர்களுடன் ஒருங்கிணைந்து பணி புரிகிறார்.

வடிவமைப்பாளர்கள் பொதுவாக கதைமாந்தர்களின் ஆளுமையை செழுமைப்படுத்துமளவில் சிந்திக்கின்றனர். சமூகத்தில் அவர்களது நிலை, வாழும் காலம் போன்றவற்றை அவர்களது ஆடைகள் மற்றும் பிற அணிகலன்கள் மூலமாக வெளிக் கொணருகின்றனர். நடிகரின் உடலையும் இயக்குனரின் பார்வைக்கேற்ப மாற்றுகின்றனர். நடிக்கும்போது இந்த உடைகள் சேதமுறா வண்ணம் இவை வடிவமைக்கப்பட வேண்டும். மேலும் நீண்டநாள் தயாரிப்பில் இந்த உடைகள் துவைக்கக் கூடியனவாகவும் நைந்து போகாதும் இருக்க வேண்டும். ஆடைகலன் வடிவமைப்பாளர் சிறந்த புனைதிறனும் கலைத் திறனும் உடையவராக இருத்தல் வேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Landis, Deborah Nadoolman (3/16/2012). Filmcraft: Costume Design: Costume Design. Elsevier Science. pp. Introduction. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780240818672. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடைகலன்_வடிவமைப்பாளர்&oldid=3098423" இலிருந்து மீள்விக்கப்பட்டது