சிறீதர் வேம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dr
ஸ்ரீதர் வேம்பு
Sridhar Vembu
பிறப்பு1968
தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (முனைவர்)
பணிநிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர், சோகோ கார்ப்பரேஷன் (Zoho Corporation)[1]
சொத்து மதிப்பு$2.51 அமெரிக்க பில்லியன் (டிசம்பர் 2020)
வாழ்க்கைத்
துணை
பிரமிளா சீனிவாசன்
உறவினர்கள்இராதா வேம்பு

ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) (பிறப்பு: 1968) இந்தியக் கோடீஸ்வர தொழிலதிபரும், பன்னாட்டு நிறுவனமான சோகோ நிறுவனத்தின் நிறுவனத் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியும் ஆவார்.[2] 2020-இல் இந்தியப் பணக்காரர்களில் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை கொண்ட 55வது நபர் என ஸ்ரீதர் வேம்புவை போர்ப்ஸ் இதழ் அறிவித்துள்ளது.[3]குடிமக்களுக்கு இந்திய அரசு வழகும் நான்காவது உயரிய பத்மசிறீ விருதை 2021-ஆம் ஆண்டில் பெற்றவர்.[4][5]

ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வேளாண்மைக் குடும்பத்தில் 1968-ஆம் ஆண்டில் பிறந்தவர்.[6][7] இவர் 1989-இல் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் இளநிலை தொழில்நுட்ப அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் மற்றும் (முனைவர்) பட்டம் பெற்றார்.[6]சேல்ஸ்போர்ஸ் நிறுவனம், ஸோஹோ நிறுவனத்தை தன்னகப்படுத்த முயன்று அணுகியபோது மறுத்த காரணத்தால் மிகவும் பரவலாக அறியப்பட்டார்.[8]

2009-இல் நுகர்வோர் தொடர்பு மேலான்மைக்கான சோஹோ மென்பொருள் நிறுவனத்தை நிறுவினார்.[6][2]போர்ஸ் இதழின் 2020-ஆம் ஆண்டின் கணக்குப்படி, ஸ்ரீதர் வேம்பு, சோஹோ நிறுவனத்தில் 2.44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 88% பங்குகளை வைத்திருந்தார்.[2][9]2021-இல் ஸ்ரீதர் வேம்பு இந்திய தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[10]

முறையான பல்கலைக்கழக கல்விக்கு மாற்றாக கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்சார் மென்பொருள் மேம்பாட்டு கல்வியை வழங்க 2004-ஆம் ஆண்டில் ஸ்ரீதர் வேம்பு சோஹோ பள்ளிகளை நிறுவினார்.[11]இவருடைய சோஹோ மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 15 முதல் 20% கல்லூரிகளில் பட்டம் பெறாத பள்ளி மாணவர்கள் ஆவார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Waters, Cara (19 April 2019). "Barefoot billionaire: Sridhar Vembu built a tech giant you've never heard of". The Sydney Morning Herald.
  2. 2.0 2.1 2.2 Waters, Cara (2019-04-19). "Barefoot Billionaire: Sridhar Vembu Built a Tech Giant You've Never Heard Of". The Sydney Morning Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
  3. "Forbes India Rich List 2020 - Forbes India Magazine". Forbes India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-28.>
  4. "PIB Press Release: This Year's Padma Awards announced". Pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
  5. "Shinzo Abe, Tarun Gogoi, Ram Vilas Paswan among Padma Award winners: Complete list". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 January 2021. https://timesofindia.indiatimes.com/india/shinzo-abe-tarun-gogoi-ram-vilas-paswan-among-padma-award-winners-complete-list/articleshow/80453596.cms. 
  6. 6.0 6.1 6.2 6.3 "Cover Story: Sridhar Vembu's Vision From The Village". Forbes India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
  7. Rajasimhan, T. E. "Made in India, Taking on the World". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
  8. "The Smartest Unknown Indian Entrepreneur". Forbes:Sramana Mitra of Forbes queries Sridhar Vembu on its Unique Hiring Practices and Track record of Boot Strapping Businesses.. 22 February 2008. http://www.forbes.com/2008/02/22/mitra-zoho-india-tech-inter-cx_sm_0222mitra.html. 
  9. "Sridhar Vembu & Siblings". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
  10. "Zoho's Sridhar Vembu appointed to Doval-led National Security Advisory Board". The Economic Times. https://economictimes.indiatimes.com/tech/tech-bytes/zohos-sridhar-vembu-appointed-to-doval-led-national-security-advisory-board/articleshow/80668164.cms. 
  11. "For Zoho founder Sridhar Vembu, community and company go hand-in-hand". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-02-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீதர்_வேம்பு&oldid=3906015" இலிருந்து மீள்விக்கப்பட்டது