பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாதுகாப்புப் படைகள் தலைமைப் படைத்தலைவர்
Seal of Chief of Defence Staff (India).png
தலைமைப் படைத்தலைவரின் முத்திரை
Flag of Chief of Defence Staff (India).svg
தலைமைப் படைத்தலைவரின் கொடி
தற்போது
காலிப்பணியிடம்

8 டிசம்பர் 2021 முதல்
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத்தலைவர்
Typeதலைமைப் பாதுகாப்பு படைத்தலைவர்
பதவிஆயுதப் படைகளின் மிக மூத்த தலைவர்
சுருக்கம்CDS
உறுப்பினர்முப்படைத் தலைவர்களின் குழு
தேசிய பாதுகாப்பு மன்றம்
பாதுகாப்புச் சாதனங்கள் கொள்முதல் குழு
பாதுகாப்பு திட்டக் குழு
அணுஆயுத கட்டளை அதிகார அமைப்பு
அறிக்கைகள்பாதுகாப்பு அமைச்சகம்
வாழுமிடம்புது தில்லி, இந்தியா
Seatஒருகிணைந்த பாதுகாப்பு தலைமையிடம், மத்திய தலைமைச் செயலகம்
நியமிப்பவர்நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு
பதவிக் காலம்
மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது முடியும் வரை; இதில் எது முன்னதோ அது வரை.[1]
உருவாக்கம்24 திசம்பர் 2019; 2 ஆண்டுகள் முன்னர் (2019-12-24)
முதலாமவர்ஜெனரல் பிபின் இராவத்
PVSM, UYSM, AVSM, YSM, VSM
துணை தலைமைப் படைத்தலைவர்முப்படைத் தலைவர்கள் குழுவின் சேர்மன்
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்


பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் (Chief of Defence Staff-CDS), இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள முப்படை தளபதிகள் குழுவுக்கு (Chief of Staff Committee) இந்தியப் பாதுகாப்புப் படைகளின் தலைவர்களாக உள்ளவர்களில் ஒருவர் தலைவராக இருப்பதற்கு பதிலாக, இனி பாதுகாப்புப் படைத்தலைவர்களில் ஒருவரை, தலைமைப் பாதுகாப்புத் தலைவராக நியமிக்கப்படுபவர். அவரே முப்படை தளபதிகளின் குழுவுக்கும் தலைவராகவும் செய்படுவார் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது.[2][3] நியமனத்திற்கான அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை பேரில் இந்தியக் குடியரசுத் தலைவர்31 டிசம்பர் 2019 அன்று ஓய்வு பெறும் ஜெனரல் பிபின் இராவத்தை முதலாவது பாதுகாப்புப் படைகளின் தலைமைப் படைத்தலைவராக நியமித்துள்ளார்.[4][5][6]

பணிகள்[தொகு]

முப்படைகளின் தலைமை தளபதி (சிடிஎஸ்) பதவிக்கு நியமிக்கப்படுபவர் நான்கு நட்சத்திரத் தகுதியுடன் புதிய பணியைத் தொடருவார். மேலும் பாதுகாப்பு விவகாரங்கள் துறைக்கான தலைவராகவும் செயல்படுவார்.[7]

பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான அனைத்து ஆயுதங்கள் கொள்முதல், முப்படைகளின் கூட்டு நடவடிக்கை, பயிற்சி உத்திகள், கேந்திர நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும், அரசை நடத்தும் ஆட்சியாளர்களுக்கு முப்படை சேவை குறித்த ஆலோசனைகளை வழங்குவது, முக்கிய ஒப்புதல்களை பெற்றுத்தருவது போன்ற பணிகளை ஒருங்கிணைக்கும் இராணுவ ஆலோசகர் பணியையும் புதிய தலைமைப் படைத்தலைவர் ஆற்றுவார்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் புதிய தலைமைப் படைத்தலைவர் இந்திய பாதுகாப்புத்துறை ஆயுத கொள்முதல் குழு மற்றும் பாதுகாப்பு திட்டமிடல் குழுவின் உறுப்பினராக இருப்பார்.

இந்திய முப்படைகளின் தலைமை தளபதிகளின் தலைவராக செயல்படும்போதும், அவரால் நேரடியாக முப்படைகளின் நடவடிக்கைகளுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. அரசுக்கு ஆலோசனை கூறுவதும், முப்படை தளபதிகளிடம் அரசின் முடிவுகளை தெரிவித்து அவற்றை செயல்படுத்துவதற்கான நிர்வாக ஒருங்கிணைப்பில் மட்டுமே அவரால் ஈடுபட முடியும்

பதவிக் காலம்[தொகு]

பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது முடியும் வரை, எது முந்தியதோ அதுவரையாகும். இப்பதவி வகித்த உயரதிகாரி, பதவிக்காலம் முடிந்த நாளில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித அரசு தொடர்புடைய பணியிலோ, தனியார் பணியிலோ ஈடுபட அனுமதி கிடையாது.

பின்னணி[தொகு]

1999-ஆம் ஆண்டில் கார்கில் போருக்குப் பிறகு இந்திய அரசு நியமித்த உயர்நிலைக்குழு, முப்படைகளுக்கான ஒருங்கிணைப்பு தேவை கருதியும், தேச பாதுகாப்பு தொடர்புடைய முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில், அரசுக்கும் முப்படைகளுக்கும் இடையே ஒரு பாலம் போல செயல்பட்டு ஆலோசனை வழங்க உயர்நிலை அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.

முப்படைகளின் தலைமைப்படைத்தலைவர்களின் பட்டியல்[தொகு]

  1. பிபின் இராவத் - 1 சனவரி 2020 - 8 டிசம்பர் 2021

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]