பிபின் இராவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிபின் இராவத்
Bipin Rawat Chief of Defence Staff (CDS).jpg
1-வது பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர்
பதவியில்
1 சனவரி 2020 (2020-01-01) – 8 திசம்பர் 2021 (2021-12-08)
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்
பிரதமர் நரேந்திர மோதி
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
முன்னவர் புதிய அலுவலகம்
57-வது படைத்துறைத் தலைமைகளின் தலைவர்
பதவியில்
27 செப்டம்பர் 2019 (2019-09-27) – 31 திசம்பர் 2019 (2019-12-31)
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்
பிரதமர் நரேந்திர மோதி
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
முன்னவர் பிரேந்தர் சிங் தனோவா
பின்வந்தவர் அலுவலகம் ஒழிக்கப்பட்டது
26-வது இராணுவத் தளபதி
பதவியில்
31 திசம்பர் 2016 (2016-12-31) – 31 திசம்பர் 2019 (2019-12-31)
குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி
ராம் நாத் கோவிந்த்
பிரதமர் நரேந்திர மோதி
பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அருண் ஜெட்லி
மனோகர் பாரிக்கர்
முன்னவர் தல்பீர் சிங் சுகாக்
பின்வந்தவர் மனோஜ் முகுந்த் நரவானே[1]
37-வது இராணுவ துணைத் தளபதி
பதவியில்
1 செப்டம்பர் 2016 (2016-09-01) – 31 திசம்பர் 2016 (2016-12-31)
குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி
பிரதமர் நரேந்திர மோதி
பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர்
முன்னவர் மன்மோகன் சிங் ராய்
பின்வந்தவர் சரத் சந்த்
தனிநபர் தகவல்
பிறப்பு பிப்பின் இலக்சுமன்சிங் இராவத்
மார்ச்சு 16, 1958(1958-03-16)
பௌரி, உத்தராகண்டம், இந்தியா
இறப்பு 8 திசம்பர் 2021(2021-12-08) (அகவை 63)
குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு
இருப்பிடம் புது தில்லி
படித்த கல்வி நிறுவனங்கள் தேசிய பாதுகாப்பு அகாதமி (இந்தியா) (B.Sc.)
I.M.A.
இராணுவ அதிகாரிகளுக்கான கல்லூரி,
சென்னைப் பல்கலைக்கழகம் (ஆய்வியல் நிறைஞர்)
U.S. Army Command & General Staff College (ILE)
சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம் (முனைவர்)
படைத்துறைப் பணி
பற்றிணைவு  இந்தியா
கிளை  இந்தியத் தரைப்படை
பணி ஆண்டுகள் 16 திசம்பர் 1978 – இற்றை
தர வரிசை Rank insignia for India CDS.svg ஜெனரல்
படையணி 5/11 கூர்க்கா துப்பாக்கிப் படை
படைத்துறைப் பணி IA Southern Command.svg தெற்குக் கட்டளைப் பகுதி
III Corps
19-வது காலாட்படைப் பிரிவு
MONUSCO வட கிவு அணி
இராட்டிரியத் துப்பாக்கிப் படை
5/11 கூர்க்கா துப்பாக்கிப் படை
சேவை இல. IC-35471M[2]
விருதுகள்

ஜெனரல் பிபின் இராவத் (General Bipin Rawat, PVSM, UYSM, AVSM, YSM, VSM) (மார்ச் 16, 1958 - திசம்பர் 8, 2021)[3] இந்தியத் தரைப்படையின் 27-வது தலைமைப் படைத்தலைவராக பணியாற்றிய இவரை, இந்தியாவின் முதலாவது பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக, இந்தியக் குடியரசுத் தலைவர் 2019 திசம்பர் 30 அன்று நியமித்தார். இவர் இந்தியப் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக 2020 சனவரி 1 அன்று பதவி ஏற்றார்.[4][5][6][7][8] 2021 திசம்பர் 8 ஆம் நாள், தமிழ்நாட்டின், குன்னூர் அருகே பிபின் இராவத் பயணித்த இராணுவ உலங்கூர்தி மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்து உயிரிழந்தார்.[9]

இளமைக் காலம்[தொகு]

இராவத் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரியில், இந்து கர்வாலி குடும்பத்தில் பிறந்தார்.[10] இவரது குடும்பத்தினைச் சார்ந்தவர்கள் பல தலைமுறைகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இவரது தந்தை இலட்சுமண் சிங் இராவத், பவுரி கர்வால் மாவட்டத்தின் சைஞ்ச் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் துணைத் தலைமை பதவி வரை உயர்ந்தார்.[11][12][13] இவரது தாயார் உத்தர்காஷி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் உத்தர்காஷியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான, கிசன் சிங் பர்மரின் மகள் ஆவார்.[14]

இராவத் டேராடூனில் உள்ள கேம்ப்ரியன் ஹால் பள்ளியிலும், சிம்லாவில் உள்ள தூய எட்வர்ட் பள்ளியிலும் கல்வி பயின்றார்.[15] பின்னர் தேசிய பாதுகாப்பு கல்லூரி, கடக்வாஸ்லா மற்றும் இந்திய ராணுவ பயிற்சி கல்லூரி, டேராடூனில் சேர்ந்தார். இங்கு இவருக்கு 'போர் வாள்' விருது வழங்கப்பட்டது.

இராவத், தமிழ்நாடு, குன்னூர் வெலிங்டனில் உள்ள இராணுவப் பணியாளர் பயிற்சி கல்லூரியில் இளநிலைப் பட்டமும் மற்றும் ஐக்கிய நாட்டின் இராணுவ கல்லூரியில் பாதுகாப்பு தொடர்பாக பயிற்சியும்,[16][17][18] சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். இதனுடன் மேலாண்மை மற்றும் கணினிப் படிப்பில் பட்டயப்படிப்பில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டில், மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகம், இராணுவ ஊடக மூலோபாய ஆய்வுகள் குறித்த இவரது ஆராய்ச்சிக்காக இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.[19][20]

விருதுகள்[தொகு]

இராவத்தின் 40 ஆண்டுகால இராணுவச் சேவையினை அங்கீகரிக்கும் வகையில் பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கவை: பரம் விசிட்ட சேவா பதக்கம், உத்தம் சேவா பதக்கம், அதி விசிட்ட சேவா பதக்கம், யுத் சேவா பதக்கம், சேனா பதக்கம், விசிட்ட சேவா பதக்கம் (இருமுறை), இவரது சிறப்பான சேவைக்காக இவருக்கு வழங்கப்பட்டது.[16][21][22][23][24][25][26] இந்திய அரசு இவருக்கு 2022ஆம் ஆண்டிற்கான பத்ம விபூசண் விருதினை இவரது மறைவிற்கு பின்னர் வழங்கியது.[27]

விபத்து[தொகு]

திசம்பர் 8, 2021 அன்று, இராவத், தனது மனைவி மற்றும் பலருடன் இந்திய விமானப்படையின் மில் எம்.ஐ.-17 உலங்கு வானூர்தியில், தமிழ்நாட்டின் குன்னூரில் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வெலிங்டனில் உள்ள இராணுவப் பணியாளர் பயிற்சிக் கல்லூரிக்கு சொற்பொழிவாற்றச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானர்.[28] உலங்கு வானூர்தியில் பயணம் செய்த இராவத், இராவத்தின் மனைவி மற்றும் 11 பேரின் மரணம் குறித்து இந்திய விமானப்படையால் பின்னர் உறுதி செய்யப்பட்டது.[29]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Lt Gen Manoj Mukund Naravane to be next Army Chief". LiveMint. 16 December 2019. 16 December 2019 அன்று பார்க்கப்பட்டது.
 2. "411 Republic Day Gallantry and Other Defence Decorations Announced". 2019-01-25.
 3. https://gulfnews.com/world/asia/india/army-chief-gen-bipin-rawat-set-to-be-indias-first-cds-1.68733228
 4. "General Bipin Rawat Appointed as Chief of Defence Staff". 2019-12-30.
 5. "Gen. Rawat takes over as Chairman of Chiefs of Staff Committee" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/gen-rawat-takes-over-as-chairman-of-chiefs-of-staff-committee/article29528935.ece. 
 6. "Army chief General Bipin Rawat named India's first Chief of Defence Staff". India Today (in ஆங்கிலம்). 2019-12-30 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Govt amends Army rules to allow chief of defence staff to serve till 65". The Times Of India. https://timesofindia.indiatimes.com/india/govt-amends-army-rules-to-allow-chief-of-defence-staff-to-serve-till-65/articleshow/73019504.cms. 
 8. "Who is Bipin Rawat: A brief look at General Bipin Rawat, India's first CDS". m-economictimes-com.cdn.ampproject.org. 2019-12-30 அன்று பார்க்கப்பட்டது.
 9. https://www.tamil.news18.com/amp/news/national/air-force-confirms-bipin-rawats-presence-in-helicopter-crashed-at-coonoor-aru-633951.html
 10. "Top positions in country's security establishments helmed by men from Uttarakhand - Times of India". 21 December 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 1 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Gen Bipin Rawat known for operational skills and strategic expertise". 24 December 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 1 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Top positions in country's security establishments helmed by men from Uttarakhand - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/dehradun/top-positions-in-countrys-security-establishments-helmed-by-men-from-ukhand/articleshow/56056880.cms. 
 13. "Bipin Rawat to have full three years tenure". The New Indian Express. http://www.newindianexpress.com/nation/2016/dec/19/bipin-rawat-to-have-full-three-years-tenure-1550946.html. 
 14. "Army Chief visits mother's ancestral village". Business Standard India. Press Trust of India. 20 September 2019.
 15. "Rawat visits alma mater".
 16. 16.0 16.1 "Lt Gen Bipin Rawat takes over as new Army Commander". The Indian Express. 2016-01-02. http://indianexpress.com/article/cities/pune/lt-gen-bipin-rawat-takes-over-as-new-army-commander/. 
 17. Goma, By David Blair in. "UN commander says hands are tied in Congo". Telegraph.co.uk. https://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/congo/3472724/UN-commander-says-hands-are-tied-in-Congo.html. 
 18. "Lt General Bipin Rawat: Master of surgical strikes - The Economic Times". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/defence/lt-general-bipin-rawat-master-of-surgical-strikes/articleshow/56054559.cms. 
 19. "Chief-designate for peace on border: 'Some disputes not for Army to settle'". The Indian Express. 2016-12-19. http://indianexpress.com/article/india/chief-designate-for-peace-on-border-some-disputes-not-for-army-to-settle-4434284/. 
 20. "GENERAL BIPIN RAWAT takes over as the 27th COAS of the INDIAN ARMY". pib.nic.in. 2017-01-01 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2016-12-31 அன்று பார்க்கப்பட்டது.
 21. "Superseding two senior Lt Gens, Bipin Rawat is new Army Chief; Dhanoa to head Air Force". The Indian Express. 2016-12-18. http://indianexpress.com/article/india/bipin-rawat-indian-army-chief-birender-singh-dhanoa-air-force-4432972/. 
 22. "Lt Gen Bipin Rawat appointed new Army chief, Air Marshal BS Dhanoa as new Air Force chief". http://indiatoday.intoday.in/story/army-new-chief-lt-gen-bipin-rawat-air-force-bs-dhanoa/1/837110.html. 
 23. "Eight things you need to know about new army chief Bipin Rawat". Hindustantimes. 2016-12-17. http://www.hindustantimes.com/india-news/eight-things-you-need-to-know-about-new-army-chief-bipin-rawat/story-BDd2pWxRd44X44Z1lIog8N.html. 
 24. "New Army Chief Has What the Govt Wants: Nuts-and-Bolts Experience". The Quint. Archived from the original on 2016-12-20. https://web.archive.org/web/20161220130653/https://www.thequint.com/opinion/2016/12/18/bipin-rawat-new-army-chief-has-what-government-wants-operational-experience-syed-ata-hasnain-defence. 
 25. "Press Information Bureau". 2017-10-08 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2017-10-08 அன்று பார்க்கப்பட்டது.
 26. "Lt Gen Mathews takes over as GoC of India's only desert corps" (in en-US). The Indian Express. 2014-09-01. http://indianexpress.com/article/india/india-others/lt-gen-mathews-takes-over-as-goc-of-indias-only-desert-corps/. 
 27. "Padma Awards 2022: Full list of 128 recipients named for civilian honours". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-25. 2022-01-25 அன்று பார்க்கப்பட்டது.
 28. Desk, The Hindu Net (2021-12-08). "Indian Air Force helicopter crash live | Gen. Bipin Rawat, wife and 11 others dead" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/live-updates-air-force-helicopter-with-cds-bipin-rawat-others-on-board-crashes-in-coonoor-tamil-nadu/article37894521.ece. 
 29. "Gen Bipin Rawat chopper crash: IAF chopper with CDS Bipin Rawat, 13 others crashes in Tamil Nadu; Rajnath Singh to brief Parliament tomorrow". The Indian Express (in ஆங்கிலம்). 2021-12-08. 2021-12-08 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிபின்_இராவத்&oldid=3462178" இருந்து மீள்விக்கப்பட்டது