உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய பாதுகாப்பு மன்றம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேசிய பாதுகாப்பு மன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேசியப் பாதுகாப்பு மன்றம்
राष्ट्रीय सुरक्षा परिषद्
Rāṣṭrīya Surakṣā Pariṣad
வார்ப்புரு:IPA-hi
துறை மேலோட்டம்
அமைப்பு19 நவம்பர் 1998; 25 ஆண்டுகள் முன்னர் (1998-11-19)
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்தேசியப் பாதுகாப்புக் குழு செயலகம், சர்தார் படேல் பவன், சன்சத் வீதி, புது தில்லி - 110 001[1]
அமைப்பு தலைமைகள்
கீழ் அமைப்பு
  • தேசியப் பாதுகாப்பு சட்டப் பிரிவு

தேசியப் பாதுகாப்பு மன்றம் (National Security Council) இந்திய நாட்டின் அரசியல், பொருளாதாரம், எரிசக்தி மற்றும் உத்திப்பூர்வமான பாதுகாப்பு குறித்த விடயங்களை நிர்வகிக்கும் உச்ச நிறுவனம் ஆகும். முதன் முதலில் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் 19 நவம்பர் 1998 அன்று நிறுவப்பட்டது. இது இந்தியப் பிரதமரின் அலுவலகத்தின்கீழ் செயல்படுகிறது. இது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் செயல்படுகிறது. இதன் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பிரிஜேஷ் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். இதன் தற்போதைய தலைவர் அஜித் தோவல் ஆவார்.

கட்டமைப்பு

[தொகு]

தேசியப் பாதுகாப்பு மன்றம் மூன்று அடுக்குகள் கொண்டது. அவைகள் மூலோபாயக் கொள்கை வகுக்கும் வகுக்கும் குழு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குழு மற்றும் செயலகம் ஆகும்.[4][5]

மூலோபாயக் கொள்கைக் குழு

[தொகு]

தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் தலைமையில் இக்குழுவில் கீழ்கண்டவர்கள் அங்கம் வகிப்பர்:

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் குழு

[தொகு]

இக்குழுவின் உறுப்பினர்களாக அரசு சார்பற்ற, மிகத்திறமையான 14 உறுப்பினர்களைக் கொண்டது.[6][7][8][9]பணியில் உள்ளவர்களையும் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகளையும், குறிப்பாக இந்தியக் காவல் பணி, இந்திய ஆட்சிப் பணி, இந்திய இராணுவ தளபதிகள், மூத்த கல்வியாளர்கள், அறிவியல் & தொழில்நுட்பம், பொருளாதார வல்லுநர்கள், வெளியுறவுத் துறை மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பில் நிபுனத்துவம் கொண்டவர்களை இக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். டிசம்பர், 1998-ஆம் ஆண்டில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் குழு நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவர் கிருஷ்ணசாமி சுப்பிரமணியன் (இவர் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் தகப்பனார்)

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் குழு மாதம் குறைந்த பட்சம் ஒரு முறை கூடும். இக்குழு நீண்ட கால முன்கணிப்பு மற்றும் பகுப்பாய்வு மற்றும் தீர்வுகளை பரிந்துரைக்கிறது. மேலும் குறிப்பிடப்பட்ட கொள்கை சிக்கல்களை தீர்க்கிறது. இக்குழு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தி அமைக்கப்படுகிறது.[10]

உறுப்பினர்கள் அனுபவம்
அஜித் தோவல் தேசிய பாதுகாப்புச் செயலாளர்
விமல் என். படேல் முன்னாள் துணை-வேந்தர், தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம்
கே. இராதாகிருஷ்ணன் முன்னாள் தலைவ்ர், இந்திய விண்வெளி ஆய்வு மையம்
அன்சுமான் திரிபாதி இணை-பேராசிரியர், இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு
அருண் கே. சிங் முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி
திலக் தேவசெர் பாகிஸ்தான் விவகாரங்களின் நிபுணர் & முன்னாள் புலனாய்வு அதிகாரி
வி. காமகோடி இயக்குநர், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் சென்னை
குல்பீர் கிருஷ்ணன் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர், மேகாலயா
அலோக் ஜோஷி முன்னாள் தலைவர், தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம்
லெப். ஜெனரல் எஸ்.எல். நரசிம்மன் (ஓய்வு) தலைமை இயக்குநர், சீனா படிப்புகள், இந்திய வெளியுறவு அமைச்சகம்
சிறீதர் வேம்பு நிறுவனர் & தலைமை நிர்வாக அலுவலர், சோகோ கார்ப்பரேசன்

கூட்டுப் புலனாய்வுக் குழு

[தொகு]

இந்திய அரசின் கூட்டுப் புலனாய்வுக் குழுவானது இந்திய உளவுத்துறை, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு, இராணுவப் புலனாய்வு இயக்குநரகம், இந்தியக் கடற்படை புலனாய்வு இயக்குநரகம் மற்றும் இந்திய வான்படை புலனாய்வு இயக்குநரகம் ஆகியவைகளிடமிருந்து வரும் முக்கியமான உளவு மற்றும் புலனாய்வுத் தரவுகளை பரிசீலித்து தேசியப் பாதுகாப்பு மன்றத்தில் சேர்க்கிறது. கூட்டுப் புலனாய்வுக் குழுவின் செயலகம் நடுவண் தலைமைச் செயலகத்தில் செயல்படுகிறது.

உசாத்துனைகள்

[தொகு]
  1. "Contact Us". National Security Advisory Board. Archived from the original on 27 February 2017.
  2. "India's revamped security set-up gets IPS, intelligence influx". 2018-01-05.
  3. "Former Maharashtra DGP Dattatray D Padsalgikar appointed as deputy NSA".
  4. "About NSAB". National Security Advisory Board. Archived from the original on 16 April 2017. பார்க்கப்பட்ட நாள் 15 January 2017.
  5. "National Security Council". ALLGOV INDIA.
  6. "Zoho's Sridhar Vembu appointed to Doval-led National Security Advisory Board". The Economic Times. https://economictimes.indiatimes.com/tech/tech-bytes/zohos-sridhar-vembu-appointed-to-doval-led-national-security-advisory-board/articleshow/80668164.cms. 
  7. "Nsab Meets At Rru | Ahmedabad News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). TNN. Jun 11, 2022. பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.
  8. Gokhale, Nitin A. (2021-02-02). "NSAB Draws Expertise from Private Sector". Bharat Shakti (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.
  9. Gupta, Arvind. "Brajesh Mishra's Legacy to National Security and Diplomacy". Institute of Defence Studies and Analyses. பார்க்கப்பட்ட நாள் 21 April 2018.
  10. "National Security Advisory Board". 2017-04-16. Archived from the original on 16 April 2017. பார்க்கப்பட்ட நாள் 2018-09-08.