உள்ளடக்கத்துக்குச் செல்

அணுசக்தி கட்டளை ஆணையம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணுசக்தி கட்டளை ஆணையம்
துறை மேலோட்டம்
அமைப்பு2003 (2003)
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்புது தில்லி
அமைப்பு தலைமை

அணுசக்தி கட்டளை ஆணையம், இந்தியாவின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான கட்டளை, கட்டுப்பாடு மற்றும் செயல்பாட்டு முடிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரம் இந்தியாவின் அணுசக்திகட்டளை ஆணையத்திடம் (NCA) உள்ளது. இதன் தலைவர் இந்தியப் பிரதமர்.[1] இந்த ஆணையம், இந்தியப் பிரதமர் தலைமையில் ஒரு அரசியல் குழுவும்; தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் ஒரு நிர்வாகக் குழுவும் கொண்டுள்ளது.[2]

இந்தியாவின் முதல் அணு ஆயுத சோதனை 1974 மே 18 அன்று சிரிக்கும் புத்தர் சிரிக்கும் என்ற குறியீட்டு பெயரில் இராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரானில் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு சக்தி நடவடிக்கை எனும் பெயரில் பொக்ரான் எனுமிடத்தில் தொடர் அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. இந்தியாவிடம் 10 அணு உலைகள், யுரேனியம் சுரங்கம் மற்றும் கனரக நீர் உற்பத்தி வசதிகள், யுரேனியம் செறிவூட்டல் ஆலை, எரிபொருள் உற்பத்தி வசதிகள் மற்றும் விரிவான அணு ஆராய்ச்சி திறன்களை உள்ளடக்கிய விரிவான சிவில் மற்றும் இராணுவ அணுசக்தி திட்டத்தை இந்தியா கொண்டுள்ளது.

இந்தியா தனது அணு ஆயுதக் களஞ்சியத்தின் அளவு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றாலும், பல்வேறு நாடுகளின் மதிப்பீடுகள் இந்தியாவிடம் 150 முதல் 300 அணு ஆயுதங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றன.[3][4]

4 ஜனவரி 2003 அன்று, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) மற்றும் அரசியல் குழு கூடி மூலோபாய படைகளின் கட்டளை (SFC)யை நிர்வாகக் குழுவின் கீழ் அமைத்தது. நிர்வாகக் குழு தனது கருத்தை அரசியல் குழுவிற்கு தெரிவிக்கிறது, இது அவசியமானதாகக் கருதப்படும்போது அணுகுண்டு தாக்குதலை அங்கீகரிக்கிறது. செயற்குழுவின் தலைவராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) மற்றும் அரசியல் குழு தலைவராக இந்தியப் பிரதமர் உள்ளார்.. இந்திய அணுகுண்டுகள் சிவிலியன் கட்டுப்பாட்டில் உறுதியாக இருப்பதையும், அவற்றின் தற்செயலான அல்லது அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டைத் தடுக்க ஒரு அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாடு (C2) பொறிமுறை உள்ளது என்பதையும் உறுதிப்படுத்த இந்த வழிமுறை செயல்படுத்தப்பட்டது.[5]

அணுசக்தி கட்டளை ஆணையத்தின் கட்டளைகள் (NCA) , மூலோபாய படைகளின் கட்டளையின் (SFC) இராணுவத் தலைமை தளபதியின் கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்படுகிறது. தந்திரோபாய மற்றும் மூலோபாய அணுசக்தி படைகளின் மேலாண்மை மற்றும் நிர்வாகத்திற்கு SFC பொறுப்பாக உள்ளது.[1][5]

இந்தியாவின் நவீன ஏவுகணைகள் மற்றும் அணுசக்தி ஏவுகணைகளை கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் வான்படைகள் மூலம் ஏவுவதற்கு அணுசக்தி கட்டளை ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Indian Army wants sole right over post of Strategic Forces Commander". Zee News. 29 July 2013 இம் மூலத்தில் இருந்து 4 September 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110904170231/http://www.independent.co.uk/news/world/asia/india-and-pakistan-to-have-nuclear-hotline-732980.html. 
  2. "PIB Press Releases". archive.pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-02.
  3. Norris, Robert S. and Hans M. Kristensen. "India's nuclear forces, 2005 பரணிடப்பட்டது 2008-11-19 at the வந்தவழி இயந்திரம்," Bulletin of the Atomic Scientists 61:5 (September/October 2005): 73–75.
  4. India's Nuclear Weapons Program - Present Capabilities பரணிடப்பட்டது 10 சூன் 2012 at the வந்தவழி இயந்திரம்
  5. 5.0 5.1 "Nuke command set up, button in PM's hand". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 Jan 2003 இம் மூலத்தில் இருந்து 4 September 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110904170231/http://www.independent.co.uk/news/world/asia/india-and-pakistan-to-have-nuclear-hotline-732980.html.