வருமான வரி விசாரணை தலைமை இயக்குநரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வருமான வரி (புலனாய்வு மற்றும் குற்ற விசாரணை) தலைமை இயக்குநரகம்
आयकर जांच के महानिदेशालय
அதிகார வரம்பு அமைப்பு
Federal agencyஇந்தியா
செயல்பாட்டு அதிகார வரம்புஇந்தியா
ஆட்சிக் குழுஇந்திய அரசு
பொது இயல்பு
செயல்பாட்டு அமைப்பு
Overviewed byவருமான வரித் துறை
தலைமையகம்புது தில்லி, இந்தியா
அமைச்சுநிதி அமைச்சகம், மத்திய நேரடி வரிகள் வாரியம்

வருமான வரி (புலனாய்வு மற்றும் குற்ற விசாரணை) தலைமை இயக்குநரகம் (Directorate General of Income Tax Investigation) இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமான வரித் துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவாகும். இது இந்தியாவில் வருமான வரிச் சட்ட மீறல்களை விசாரணை செய்வதும், வரி கட்டாமல் சேர்த்த சொத்துக்கள் குறித்து நீதிமன்றங்களில் வழக்கை தாக்க செய்யும் அதிகாரம் படைத்த அமைப்பாகும். இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது. வருமான வரித்துறையின் (குற்றப் புலனாய்வு) தலைமை ஜெனரல் தலைமையில் செயல்படும் இதன் பிராந்திய அலுவலகங்கள் தில்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், அகமதாபாத், மும்பை, நாக்பூர், சென்னை, கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் ஒன்பது இயக்குநர்களின் தலைமையில் இடங்களில் வருமான வரித்துறையின் புலனாய்வு மற்றும் குற்றவியல் விசாரணை பிரிவு செயல்படுகிறது.மேலும் பெங்களூர், புவனேஸ்வர், போபால், குவாகாத்தி, ஐதராபாத், கொச்சி, கான்பூர், புனே மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் இந்த அமைப்பின் கிளைகள் உள்ளது. [1][2]

வரலாறு[தொகு]

1975ஆம் ஆண்டில் வருமான வரித் துறையானது வரி தரவுத் தளத்தை வலுப்படுத்துவதற்காக மத்திய தகவல் அமைப்பை (CIB) உருவாக்கியது. துவக்கத்தில் இது வருமான வரி தலைமை இயக்குநரின் மேற்பார்வையின் கீழ் இயங்கியது. இது பின்னர் சூன் 2007இல் வருமான வரி இயக்குநரகத்தின் (உளவுத்துறை) கீழ் கொண்டுவரப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 2011இல், வருமான வரி இயக்குநரகம் (புலனாய்வு மற்றும் குற்றவியல் விசாரணை) எனப்பெயரிடப்பட்ட தலைமை இயக்குநரகத்தின் இப்பிரிவு செயல்பட்டது.

செயல்பாடுகள்[தொகு]

வருமான வரித்துறையின் முக்கியமான பிரிவுகளில் ஒன்று புலனாய்வுப் பிரிவு. இது வருவான வரி சட்ட அமலாக்க இயந்திரம் அல்லது துறையின் குற்றத் தடுப்பு இயந்திரம் என்றும் அழைக்கப்படலாம். வருமான வரி ஏய்ப்பை எதிர்த்துச் செயல்படுகிறது. வருமான வரி புலனாய்வுப் பிரிவு உளவுத் தகவல்களைச் சேகரித்து, அதன்பின் வரி ஏய்ப்பைக் கண்டறிதல் மற்றும் வருமானம் மற்றும் செல்வத்தை மறைப்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகள், ஆய்வுகள் மற்றும் தேடல்களை மேற்கொள்வதாகும். அடிப்படையில் புலனாய்வுப் பிரிவு வருமான வரி ஏய்ப்புக்கு எதிரான தடுப்பை உருவாக்குவதற்காக, வரி ஏய்ப்பவர்களை பிடிப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

வருமான வரி வழக்குகளில் மதிப்பீடுகளை முடித்து தேவையான அபராத உத்தரவுகளை வழங்குவதன் மூலம் தேடல் வழக்குகளை தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்கின்றன. பொருத்தமானதாகக் கருதப்படும் இடங்களில், வருமான வரி புலனாய்வு மத்திய வட்டங்களின் அதிகாரிகளால் குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

பயங்கரவாத நிதி, பணமோசடி, போதைப்பொருள் தொடர்பான நிதிப் புழக்கம் போன்ற குற்றச் செயல்களால் ஏற்படும் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும். இது குற்றங்கள் அல்லது குற்றவாளிகளைக் கண்டறிய உதவுகிறது. ஒரு குற்றம் செய்யப்படும் போது அல்லது பிறகு, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது மற்றும் அத்தகைய நிதி ஆதாரத்தை விசாரிப்பது ஆகியவை அதன் பணியின் நோக்கத்தில் அடங்கும்.

பணியின் முக்கிய பகுதிகள்[தொகு]

இதன் முக்கியச் செயல்பாடுகளில் வருமான வரி தாக்கல் செய்யாதவர்களின் அடையாளம் காண்பதன் மூலம் வரி தளத்தை விரிவுபடுத்துதல். எந்தவொரு நேரடி வரிச் சட்டத்தின் கீழும் தண்டனைக்குரிய குற்றமாகத் தண்டிக்கப்படக் கூடிய எந்தவொரு நிதித் தாக்கத்தையும் கொண்ட குற்றச் செயல்களிலிருந்து இருந்து எழும் வரி ஏய்ப்பு வழக்குகளை அடையாளம் காணவும், விசாரணை செய்யவும் ஆணை வழங்குகிறது.

வருமான வரி (குற்றப் புலனாய்வு) இயக்குனரகம்[தொகு]

சூன் 2007ல் வருமான வரி விசாரணை தலைமை இயக்குநரகம், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் வருமான வரி (குற்றப் புலனாய்வு) இயக்குனரகம் எனும் புதிய சிறப்பு நிறுவனத்தின் கீழ் இயங்கும். இந்த அமைப்பு பயங்கரவாத நிதி, பணமோசடி, போதைப்பொருள் தொடர்பான நிதிப் புழக்கம் போன்ற குற்றச் செயல்களால் ஏற்படும் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும். இந்த அமைப்பு குற்றங்கள் அல்லது குற்றவாளிகளைக் கண்டறிய உதவும். குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது மற்றும் அத்தகைய நிதி ஆதாரத்தை விசாரிப்பது ஆகியவை அதன் பணியின் நோக்கத்தில் அடங்கும்.[3]

இந்த இயக்குனரகமானது வருமான வரித்துறையின் (குற்றப் புலனாய்வு) இயக்குநர் ஜெனரல் தலைமையில் செயல்படும் மற்றும் தில்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், அகமதாபாத், மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் வருமான வரித்துறையின் (குற்ற விசாரணை) எட்டு இயக்குநர்களைக் கொண்டிருக்கும்.

இந்த வருமான வரி குற்றப் புலனாய்வு இயக்குனரகம் வரி ஏய்ப்பைத் தடுப்பதிலும், கறுப்புப் பணத்தின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியைத் தடுப்பதிலும் முனைப்பு காட்டும்.

இதனையும் காண்க[தொகு]

  1. வருமான வரித் துறை
  2. மத்திய நேரடி வரிகள் வாரியம்
  3. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்
  4. மத்திய பொருளாதார புலனாய்வு பணியகம்
  5. வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
  6. சரக்கு சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குனரகம்
  7. அமலாக்க இயக்குனரகம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]