கூட்டு கணினி குற்றச் செயலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டு கணினி குற்றச் செயலகம், இந்தியப் பாதுகாப்புப் படைகள் கூட்டாக இணைந்து, இந்திய இராணுவத்திற்கு எதிரான கணினி குற்றங்களை எதிர்கொள்ளும் அமைப்பாகும். கூட்டு கணினி குற்றச் செயலகத்துடன் இந்திய உளவுத்துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்புகள் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது.

மேலும் பிற இராணுவ சேவை அமைப்புகளுக்கு ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறது. இதன் தந்திரோபாய நுண்ணறிவை வழங்கும் பெரும்பாலான கருவிகள் உருசியாவைச் சேர்ந்தவை ஆகும். இதில் சிறப்பு திசை கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் அடங்கும்.

இவ்வமைப்பின் முதன்மையான பணி இரகசிய வார்த்தைகளை உருவாக்குவதும்[1],சமிக்கை நுண்ணறிவு, சங்கேத வார்த்தைகளை படித்தறிவதும் ஆகும்.[2] இதன் நடவடிக்கைகளை இராணுவப் பாதுகாப்பு புலனாய்வு முகமை மற்றும் இராணுவப் புலனாய்வு இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இந்த அமைப்பின் அதிகாரிகள் பெரும்பாலும் இந்திய இராணுவத்தின் பொறியாளர் சேவைப் பிரிவைப் சேர்ந்தவர்கள் ஆவார்.[3]

அதிகார அமைப்பு[தொகு]

இதன் அதிகாரிகளை இரண்டு குழுக்களாகப் பிரிப்பர்.

குழு [தொகு]

 1. இயக்குநர்
 2. இணை இயக்குநர்
 3. துணை இயக்குநர்
 4. முதுநிலை சிஸ்டம் பாதுகாப்பு அதிகாரி-I
 5. முதுநிலை சிஸ்டம் பாதுகாப்பு அதிகாரி-II

குழு பி[தொகு]

 1. சிஸ்டம் பாதுகாப்பு அதிகாரி
 2. முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர்
 3. தொழில்நுட்ப உதவியாளர்
 4. கணினி நிரலாக்கர்
 5. இளநிலை கணினி நிரலாக்கர்
 6. தரவு பகுப்பாய்வு உதவியாளர்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Indian Joint Cipher Bureau | 2 Authors | 6 Publications | Related Institutions". SciSpace - Institute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-22.
 2. "Joint Cipher Bureau - India Intelligence Agencies".
 3. Military Engineer Services (India)