கணினி குற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினி குற்றம் (Cyber Crime/Computer Crime) என்பது கணினியோ அல்லது வலையமைப்பு சார்ந்திருக்கும் எந்த ஒரு குற்றத்தை குறிக்கிறது.[1]. கணினிக் குற்றங்களில் கணினி ஒரு இலக்காகவோ அல்லது ஒரு குற்றச் செயலை செய்யவோ பயன்படுத்தப்பட்டிருக்கலம்.[2]. வலையமைப்பு குற்றம் என்பது இணையத்தை பயன்படுத்தி குற்ற செயல்களை செய்வதாகும்.[3]. நாளுக்குநாள் அதிகரித்து வரும் கணினிக் குற்றங்கள் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தில் உள்ளது[4]. இந்தியாவில் மட்டும் 42 மில்லியன் மக்கள் கணினிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். [5]

வரையறை[தொகு]

ஒரு தனி நபரையோ அல்லது ஒரு குழுவில் உள்ள நபர்களையோ நவீன கால தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலோ அல்லது உடல் அல்லது மனதிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துன்பம் தரும் குற்றங்களை இணையவெளி குற்றம்(Cyber Crime) எனலாம்.[6] இது போன்ற குற்றங்கள் ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிதி வளத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.[7]

வகைப்பாடு[தொகு]

கணினிக் குற்றங்கலள் பல்வேறு வகைகளிலும் வடிவங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. கணினிக் குற்றங்களை பல்வேறு வகையாக பிரிக்கலாம். எடுத்துக்காட்டாக குற்றம் புரிபவர்கள், குற்றம் புரிபவர்கள் பயன்படுத்தும் கருவிகள், பாதிக்கப்படுபவர்கள் போன்றவை. இங்கே கீழே கொடுக்கப்பட்டவை குற்றத்தினை எப்படித் தடுக்கலாம் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.[8]:

  1. பருநிலை பாதுகாப்பின் அத்துமீறல் (Physical Security breach)
  2. தனி நபர் பாதுகாப்பின் அத்துமீறல் (Personal Security breach)
  3. தகவல்தொடர்பு மற்றும் தரவு பாதுகாப்பின் அத்துமீறல்
  4. நடவடிக்கை பாதுகாப்பின் அத்துமீறல் (Operational security breach)

கணினியினால் ஏற்படும் குற்றங்களை பின்வருமாறு பிரிக்கலாம்:

  1. கணினியை குறிவைத்து ஏற்படுத்தப்படும் குற்றங்கள்
  2. கணினி மூலம் ஏற்படுத்தப்படும் குற்றங்கள்

கணினியை குறிவைத்து ஏற்படுத்தப்படும் குற்றங்கள்[தொகு]

கணிணி மூலம் ஏற்படுத்தப்படும் குற்றங்கள்[தொகு]

எரிதம்(Spam)[தொகு]

முதன்மை கட்டுரை: எரித மின்னஞ்சல்

கோரப்படாத தகவல்கள் மொத்த எண்ணிக்கையில் மின்னணு அஞ்சல்களாக (Bulk Email) வர்த்தக நோக்கங்களுக்காக அனுப்புவது சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.[9]. எரிதம் (குப்பை அஞ்சல்களுக்கு) எதிரான சட்டங்கள் ஒப்பீட்டளவில் புதியன என்றாலும், கோரப்படாத மின்னஞ்சல் தொடர்புக்கான வரம்புகள் இருந்துள்ளன.

கணினி சார் மோசடி(Computer Fraud)[தொகு]

நேர்மையற்ற முறையில் தவறாகவோ அல்லது உண்மைக்குப் புறம்பாகவோ தகவல்களை தந்து அதன் மூலம் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ இழப்பை ஏற்படுத்துவது கணினி சார் மோசடி எனப்படும். அமெரிக்காவில் இதற்கென தனியாக சட்டங்கள் உள்ளன.[10][11] பின்வரும் சூழ்களில் இந்த மோசடிகள் ஏற்படும்:

  • ஒரு அங்கீகரிக்கப்படாத முறையில் தகவல்களை மாற்றுவதன் மூலம்.
  • சேமிக்கப்பட்ட தரவினை மாற்றியமைத்தல் அல்லது நீக்குதல்
  • அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளை மறைக்க பொதுவாக வெளியீட்டை திருடி,அழித்து, மாற்றுதல் மற்றும் மறைத்தல்
  • ஏற்கனவே உள்ள கணினி கருவிகள் அல்லது மென்பொருள் தொகுப்புகளை தவறான மோசடி நோகத்திற்காக குறியீடு அல்லது மென்பொருள் தொகுப்புகளின் செயல்பாட்டை மாற்றியமைத்தல்

ஆபாசமான அல்லது தாக்குதலுக்கு உட்பட்ட உள்ளடக்கம் (Obscene and Offensive content)[தொகு]

வலைத்தளங்கள் மற்றும் பிற மின்னணுத் தகவல் தொடர்புகளில் உள்ளடக்கம் பல்வேறு காரணங்களுக்காக, அருவருப்பான ஆபாசமான அல்லது தாக்குதலுக்கு உட்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கலாம். சில சமயங்களில் இந்த தகவல் தொடர்புகள் சட்டவிரோதமாக இருக்கலாம். பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் இதற்கான சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் இது சட்டவிரோதம் என்ற அளவில் நாட்டிற்குள்ளும் நாடுகளுக்கிடையேயும்ம் கருத்து வேறுபடுகிறது. இங்கிலாந்தில் இது போன்ற உள்ளடக்கங்களை புகார் செய்வதற்கு சட்ட பூர்வ அமைப்புக்கள் உள்ளன. [12]

தொல்லை கொடுத்தல்/அலைக்கழித்தல்(Haressment)[தொகு]

இணையத்தில் எந்த ஒரு கருத்து தாழ்வான அல்லது தாக்குதல் தொடுக்கும் நிலையில் பயன்படுத்தப்படும் பொழுது தொல்லை கொடுத்தல் / அலைக்கழித்தல் என்று கருதப்படுகிறது. அலைக்கழித்தல் என்பது சமூக வலைத்தளங்களிலோ, இணைய அரட்டை அறைகளிலோ அல்லது மின்னஞ்சலிலோ கூட நடக்கலாம். இதில் பின்வரும் வகைகள் உள்ளன:

  1. இணைய கொடுமைப்படுத்தல்கள் (Cyber Bullying)
  2. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking)

கணினிக் குற்றங்கள் - தமிழகத்தில் நடந்தவை[தொகு]

  • 1 ஜனவரி 2010 - திருச்சி தொழில் அதிபரின் வங்கிக் கணக்கிலிருந்து இன்டர்நெட் மூலம் ரூ.27 இலட்சம் நூதனமான முறையில் திருடப்பட்டது.
  • 26 அக்டோபர் 2012 - சென்னைக் காவல்துறையினர், ட்விட்டரில் பாடகர் சின்மயியை மிரட்டியது குறித்து இருவரை கைது செய்துள்ளனர்.[13]
  • 28 செப்டெம்பர் 2013 ஒரு பெண்ணும் அவரது தந்தையும் முகநூலில் பழிவாங்கும் விதத்தில் படங்களை வெளியிட்டதற்காகக் கைது. [14]

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Moore, R. (2005) "Cyber crime: Investigating High-Technology Computer CrCleveland, Mississippi: Anderson Publishing.
  2. Warren G. Kruse, Jay G. Heiser (2002). Computer forensics: incident response essentials. Addison-Wesley. பக். 392. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-201-70719-5. https://archive.org/details/computerforensic0000krus. பார்த்த நாள்: 3 February 2011. 
  3. David Mann And Mike Sutton (2011-11-06). ">>Netcrime". Bjc.oxfordjournals.org. பார்க்கப்பட்ட நாள் 2011-11-10.
  4. https://www.europol.europa.eu/sites/default/files/publications/socta2013.pdf
  5. http://newindianexpress.com/business/news/India-has-42-million-cyber-crime-victims-Norton/2013/08/17/article1738335.ece
  6. * Halder, D., & Jaishankar, K. (2011) Cyber crime and the Victimization of Women: Laws, Rights, and Regulations. Hershey, PA, USA: IGI Global. ISBN 978-1-60960-830-9
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-12-08. பார்க்கப்பட்ட நாள் 2013-11-19.
  8. http://oreilly.com/catalog/crime/chapter/cri_02.html
  9. http://en.wikipedia.org/wiki/Email_spam_legislation_by_country
  10. http://en.wikipedia.org/wiki/Computer_Fraud_and_Abuse_Act
  11. http://www.justice.gov/criminal/cybercrime/docs/ccmanual.pdf
  12. https://www.iwf.org.uk/
  13. http://newint.org/blog/2012/10/26/cyber-harrassment-chennai/#sthash.iUm7LHbO.dpuf
  14. http://www.thehindu.com/news/cities/chennai/in-chennai-woman-and-father-held-for-obscene-content-on-fb/article5176693.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணினி_குற்றம்&oldid=3582522" இலிருந்து மீள்விக்கப்பட்டது