மத்திய பொருளாதார புலனாய்வு பணியகம்
Appearance
மத்திய பொருளாதாரப் புலனாய்வு பணியகம் केंद्रीय आर्थिक खुफिया ब्यूरो | |
---|---|
துறையின் கண்ணோட்டம் | |
உருவாக்கம் | சூலை 1985 |
அதிகார வரம்பு அமைப்பு | |
Federal agency | இந்தியா |
செயல்பாட்டு அதிகார வரம்பு | இந்தியா |
ஆட்சிக் குழு | இந்திய அரசு |
பொது இயல்பு | |
செயல்பாட்டு அமைப்பு | |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
துறை நிருவாகி |
|
அமைச்சு | வருவாய்த் துறை |
Child agency | |
இணையத்தளம் | |
ceib |
மத்திய பொருளாதாரப் புலனாய்வு பணியகம் (Central Economic Intelligence Bureau (CEIB)), இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு புலனாய்வு அமைப்பாகும். இந்த அமைப்பு சூலை 1985ஆம் ஆண்டு முதல் இந்திய வருவாய்ப் பணி அதிகாரி தலைமையில் இயங்குகிறது. இந்த அமைப்பு இந்தியாவிற்கு எதிராக, இந்தியாவில் நடைபெறும் பொருளாதாரக் குற்றங்கள் குறித்தான தகவல்களைச் சேகரிப்பதற்கும், கண்காணிப்பதற்குமான உளவு நிறுவனம் ஆகும்.[1][2]இதன் முதன்மைப் பணி பொருளாதார நுண்ணறிவு, கடத்தல், பணமோசடி, வரி ஏய்ப்பு மற்றும் மோசடி போன்ற பொருளாதார குற்றங்களை கண்காணித்தல் மற்றும் எதிர்த்துப் போராடுதல் ஆகும்.
செயல்பாடுகள்
[தொகு]- பல்வேறு சட்டவிரோத பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல், இந்தியப் பொருளாதாரம் மற்றும் நிதித் துறையின் முக்கியமான மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய துறைகளைக் கண்காணித்தல்.
- அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1974 (COFEPOSA) முழுவதுமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்தல். இது போன்ற குற்றங்கள் மற்றும் குற்றவியல் அமைப்புகளை எதிர்ப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கும் இது பொறுப்பாகும்.
- பொருளாதாரக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு நிதி அமைச்சகத்தில் உள்ள வருமான வரி விசாரணை தலைமை இயக்குநரகம் மற்றும் அமலாக்க இயக்குனரகம் ஆகியவைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்.
- இது நடுவண் புலனாய்வுச் செயலகம், மத்திய நேரடி வரிகள் வாரியம், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஆகியவற்றுடன் ஒத்துழைக்கிறது மற்றும் தொடர்பு கொள்கிறது.
- சுங்கம், மருந்துகள் மற்றும் பொருளாதார சட்ட அமலாக்கத்திற்குப் பொறுப்பான பிற நாடுகளின் முகமைகளுடன் பன்னாட்டு அளவில் ஒத்துழைக்கிறது.
இதனையும் காண்க
[தொகு]- நிதி அமைச்சகம்
- இந்திய அரசின் வருவாய்த் துறை
- மத்திய நேரடி வரிகள் வாரியம்
- மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்
- வருமான வரி விசாரணை தலைமை இயக்குநரகம்
- அமலாக்க இயக்குனரகம்
- வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Central Economic Intelligence Bureau". National Informatics Centre. Archived from the original on 5 April 2016. பார்க்கப்பட்ட நாள் 2009-07-18.
- ↑ Central Economic Intelligence Bureau – Ministry of Finance. Ministry of Finance. http://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/budget/annual_report/9596rev5.PDF. பார்த்த நாள்: 2009-07-18.