தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா
இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் | |
---|---|
பரிந்துரையாளர் | இந்தியப் பிரதமர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | 6 ஆண்டுகள் அல்லது 65 அகவை வரை (இரண்டில் முன்னதாக வருமவயம்) |
முதலாவதாக பதவியேற்றவர் | வி. நரகரி ராவ் |
ஊதியம் | ₹90,000 (US$1,200)[1][2] |
இணையதளம் | The Comptroller and Auditor General of India |
இந்தியக் குடியரசு |
---|
![]() |
இந்திய அரசு வலைவாசல் |
தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா (Comptroller and Auditor General (CAG) of India) இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசியலமைப்பின் (Chapter V) கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும். இதன் தலைவர் குடியரசு தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர். இவர் அரசுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்பட்டவர் கிடையாது.[3]
அரசுடமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் வெளித் தணிக்கையாளராகவும் இவர் செயல்படுகிறார். தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் நாடாளுமன்ற/மாநிலச் சட்டப்பேரவைகளின் சிறப்புக் குழுக்களான பொது கணக்குக் குழுக்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. நாடெங்கும் 58,000 ஊழியர்களைக் கொண்ட இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையின் தலைவராகவும் செயல்படுகிறார்.
இந்திய அதிகார முன்னுரிமைப் பட்டியலில் ஒன்பதாவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது G.C.முர்மு பதவியில் உள்ளார். இந்தியாவின் 13வது தலைமைக் கணக்குத் தணிக்கையாளரான ராஜீவ் மகரிஷி செப்டம்பர், 2017ல் பதவியேற்றார். வினோத் ராய் தலைமையின் கீழ் இயங்கிய பொழுது இந்த அமைப்பு அரசின் முறைகேடுகளை வெளிப்படுத்தியமையால் குறிப்பாக இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு,பொதுநலவாய விளையாட்டுகள் நடத்துதலில் ஊழல் மற்றும் இந்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு பரவலாக ஊடகங்களில் அறியப்படுகிறது.[4][5]
அரசுடன் வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார்-பொது பங்களிப்புத் திட்டத்தை (PPP) ஆய்வு செய்யும் அதிகாரம் தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்கு உண்டு.[6]
இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்களின் பட்டியல்[தொகு]
எண். | இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் | பதவிக்காலத் தொடக்கம் | பதவிக்கால முடிவு |
---|---|---|---|
1 | வி. நரஹரி ராவ் | 1948 | 1954 |
2 | ஏ. கே. சந்தா | 1954 | 1960 |
3 | ஏ. கே. ராய் | 1960 | 1966 |
4 | எஸ். ரங்கநாதன் | 1966 | 1972 |
5 | ஏ. பாக்சி | 1972 | 1978 |
6 | ஜியான் பிரகாஷ் | 1978 | 1984 |
7 | டி. என். சதுர்வேதி | 1984 | 1990 |
8 | சி. ஜி. சோமையா | 1990 | 1996 |
9 | வி. கே. சங்லு | 1996 | 2002 |
10 | வி. என். கௌல் | 2002 | 2008 |
11 | வினோத் ராய் | 2008 | 2013 |
12 | ஷசி காந்த் ஷர்மா | 2013 | 2017 |
13 | இராசீவ் மகரிசி | 2017 | 2020 |
14 | கிரீஷ் சந்திர முர்மு | 2020 | தற்போது பதவியில் |
ஆதாரம்:[7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "THE COMPTROLLER AND AUDITOR-GENERAL'S (DUTIES, POWERS AND CONDITIONS OF SERVICE) ACT, 1971". CAG India இம் மூலத்தில் இருந்து 27 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AE3014Om?url=http://www.cag.gov.in/html/about_legal_dpc.htm. பார்த்த நாள்: 27 August 2012.
- ↑ "CAG - Article 148 of Constitution of India". http://saiindia.gov.in/english/home/about_us/mandate/Constitutional/Constitutional.html. பார்த்த நாள்: 06 April 2012.
- ↑ "சி.ஏ.ஜி பணி - என்றால் என்ன?". தி இந்து. 4 October 2013. http://tamil.thehindu.com/business/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8F%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article5201116.ece. பார்த்த நாள்: 12 October 2013.
- ↑ "A watchdog that bites". The Hindu. 20 August 2012 இம் மூலத்தில் இருந்து 27 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AF1G2lN4?url=http://www.thehindu.com/opinion/editorial/article3796000.ece. பார்த்த நாள்: 27 August 2012.
- ↑ B S Arun. "CAG ‘activism’ gets the thumbs up". Deccan Herald இம் மூலத்தில் இருந்து 27 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AF1G2hzW?url=http://www.deccanherald.com/content/183601/cag-activism-gets-thumbs-up.html. பார்த்த நாள்: 27 August 2012. ""Corporate India needs to go through a phase of reflection and soul searching""
- ↑ "அரசுத் திட்டங்களில் பங்கேற்கும் தனியார் கணக்குகளை ஆய்வு செய்வோம்: சிஏஜி". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 14 மே 2014. http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=64060. பார்த்த நாள்: 14 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Former CAG". http://saiindia.gov.in/english/home/about_us/former.html. பார்த்த நாள்: 09 May 2012.
வெளி இணைப்புகள்[தொகு]
- "Official website of the Comptroller and Auditor General of India". http://cag.gov.in/. பார்த்த நாள்: 19 January 2009.
- Reports by Comptroller and Auditor General of India