பரம வீர சக்கரம்
பரம் வீர் சக்கரம் (Param Vir Chakra அல்லது PVC) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும், தன்னலமற்ற தியாகத்தையும், காட்டிய படைவீரர்களுக்கான இந்தியாவின் மிக உயரிய விருதாகும். இந்த விருது மரணத்திற்கு பின்பும், பெரும்பாலும் அவ்வாறே நிகழ்கின்றது, கொடுக்கக்கூடியது. இந்தி மொழியில் உள்ள இந்த விருதின் பெயரின் தமிழாக்கம் உயரிய வீரர் பதக்கம் என்பதாகும்.
சனவரி 26, 1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசான பிறகு குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்ட இந்த விருது இந்தியா விடுதலை பெற்ற ஆகத்து 15, 1947 முதலே அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியப் படைத்துறையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் பட்டியலிடப்பட்ட ஊழியர்களும் இந்த விருதுக்குத் தகுதி உடையவர்களாவர். பாரத ரத்னா விருதுக்கு அடுத்தநிலையில், இந்திய அரசு வழங்கும் விருதுகளில், இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த விக்டோரியா கிராஸ் விருதிற்கு மாற்றமாக அமைந்தது
பரம் வீர் சக்கரத்திற்கு இணையான அமைதிக்கால, மிக உயரிய படைத்துறை விருது, அசோகச் சக்கர விருது ஆகும். இந்த விருது போர்களத்தில் அல்லாத, பிற இடங்களில் காண்பிக்கப்படும் "மிக உயரிய வீரதீரச் செயலுக்காகவும் தன்னலமற்ற தியாகத்திற்காகவும்" வழங்கப்படுகிறது. இது படைத்துறை அல்லாது, குடிமக்களுக்கும் வழங்கபடக்கூடியது. பரம் வீர் சக்கரத்தைப் போலவே இதுவும் மரணத்திற்கு பின்பும் வழங்கக்கூடியது.
இந்த விருது பெற்ற லெப்டினன்ட் நிலைக்கு கீழான (இணையான பிற சேவையினருக்கு) நிதிப் படி வழங்கப்படுகிறது. சில நேரங்களில் நிதிக்கொடையும் வழங்கப்படுகிறது. மரணத்திற்குப் பின்னால் வாழ்க்கைத்துணைக்கு ஓய்வூதியம், அவர் இறக்கும்வரை அல்லது மறுமணம் புரியும்வரை வழங்கப்படுகிறது. மிகவும் குறைந்த இந்த நிதி உதவி பெரும் சர்ச்சையில் இருந்தவாறுள்ளது. மார்ச்சு 1999 நிலவரப்படி இது ரூ.1500/- என்ற அளவிலேயே இருந்தது.
பரம் வீர் சச்கர விருது பெற்றவர்கள் பட்டியல்
[தொகு]2022ஆம் ஆண்டு முடிய 22 இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பரம் வீர் சக்கர விருது பெற்றுள்ளனர்.[1]அதன் பட்டியல் பின்வருமாறு:
விருது பெற்றவரின் சிற்பம் | படை எண் | பெயர் | படையணி | நாள் | இடம் | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|---|---|
IC-521 | மேஜர் சோம்நாத் சர்மா | 4வது படைப்பிரிவு, குமோன் படையணி | நவம்பர் 3, 1947 | பட்காம், காசுமீர் | மறைவிற்குப் பின் | ||
IC-22356 | லான்ஸ் நாயக் கரம் சிங் | 1வது படைப்பிரிவு, சீக்கியப் படையணி | அக்டோபர் 13, 1948 | தித்வால், குப்வாரா மாவட்டம், காசுமீர் | |||
SS-14246 | செகண்ட் லெப். இராமா ரகோபா ராணே | பொறியாளர் படை | ஏப்ரல் 8, 1948 | நௌஷேரா, காசுமீர் | |||
27373 | நாயக் ஜாதுநாத் சிங் | 1வது படைப்பிரிவு, ராஜ்புத் படைப்பிரிவு | பெப்ரவரி 1948 | நௌசெரா, ரஜௌரி மாவட்டம், காசுமீர் | மறைவுக்குப்பின் | ||
2831592 | ஹவில்தார் மேஜர் பிரு சிங் செகாவாத் | 6-வது படைப்பிரிவு, ராசபுதனா துப்பாக்கிகள் | 17 சூலை 1948–18 சூலை 1948 | தித்வால், குப்வாரா மாவட்டம், காசுமீர் | மறைவுக்குப்பின் | ||
IC-8497 | கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா | 3வது படைப்பிரிவு, முதலாம் கூர்க்கா துப்பாக்கிகள் (மாலௌன் படையணி) | திசம்பர் 5, 1961 | லும்பாஷி (எலிசபெத்வில்), கடங்கா மாநிலம், காங்கோ | மறைவுக்குப்பின் | ||
IC-7990 | மேஜர் தன்சிங் தாப்பா | 1வது படைப்பிரிவு, 8வது கூர்க்கா துப்பாக்கிகள் | அக்டோபர் 20, 1962 | லடாக், இந்தியா | |||
JC-4547 | சுபேதார் ஜோகீந்தர் சிங் | 1வது படைப்பிரிவு, சீக்கியப் படையணி | அக்டோபர் 23, 1962 | டோங்பென் லா, வடகிழக்கு எல்லைப்புற முகமை, இந்தியா | மறைவுக்குப்பின் | ||
IC-7990 | மேஜர் சைத்தான் சிங் | 13வது படைப்பிரிவு, குமோன் படையணி | நவம்பர் 18, 1962 | ரெசாங் லா | மறைவுக்குப்பின் | ||
2639885 | ஹவில்தார் அப்துல் ஹமித் | 4வது படைப்பிரிவு, கிரெனேடியர்சு | செப்டம்பர் 10, 1965 | சீமா, கேம் கரண் பகுதி | மறைவுக்குப்பின் | ||
IC-5565 | லெப்.கர்ணல் அர்தசிர் தாராபூர் | 17வது பூனா குதிரைப்படை | அக்டோபர் 15, 1965 | பில்லோரா , சியால்கோட் பகுதி, பாகிஸ்தான் | மறைவுக்குப்பின் | ||
4239746 | ஆல்பர்ட் எக்கா | 14வது படைப்பிரிவு, பாதுகாவல் படைகள் | திசம்பர் 3, 1971 | பிரம்மன்பரியா மாவட்டம், வங்காளதேசம் | மறைவுக்குப்பின் | ||
10877 F(P) | நிர்மல் சிங் செக்கோன் | 18-ஆம் வான்படைப் பிரிவு, இந்திய வான்படை | திசம்பர் 14, 1971 | ஸ்ரீநகர், காசுமீர் | மறைவுக்குப்பின் | ||
IC—25067 | அருண் கேதார்பால் | 17வது பூனா குதிரை | திசம்பர் 16, 1971 | ஜார்பால், ஷகார்கர் பகுதி | மறைவுக்குப்பின் | ||
IC-14608 | கோசியார் சிங் தாகியா | 3வது படைப்பிரிவு, கிரெனேடியர்சு | திசம்பர் 17, 1971 | பசன்தர் ஆறு, ஷகார்கர் பகுதி | |||
JC-155825 | நயீப் சுபேதார் பானா சிங் | 8வது படைப்பிரிவு, சம்மு காசுமீர் இலகு காலாட்படை | சூன் 23, 1987 | சியாச்சின் பனியாறு, லடாக் | |||
IC-32907 | மேஜர் பரமேஸ்வரன் | 8வது படைப்பிரிவு, மஹர் படையணி | நவம்பர் 25, 1987 | இலங்கை | மறைவுக்குப்பின் | ||
IC-56959 | மனோஜ் குமார் பாண்டே | 1வது படைப்பிரிவு, 11வது கூர்க்கா துப்பாக்கிகள் | சூலை 3, 1999 | காலுபெர்/ஜபெர் டாப், பட்டாலிக், கார்கில், சம்மு காசுமீர் | மறைவுக்குப்பின் | ||
2690572 | யோகேந்திர சிங் யாதவ் | 18வது படைப்பிரிவு, கிரெனேடியர்சு | சூலை 4, 1999 | டைகர் ஹில், கார்கில் | |||
13760533 | சஞ்சய் குமார் | 13வது படைப்பிரிவு, சம்மு காசுமீர் துப்பாக்கிகள் | சூலை 5, 1999 | ஏரியா பிளாட் டாப், கார்கில் | |||
IC-57556 | விக்கிரம் பத்ரா | 13வது படைப்பிரிவு, சம்மு காசுமீர் துப்பாக்கிகள் | சூலை 6, 1999 | முனை 5140, முனை 4875, கார்கில் | மறைவுக்குப்பின் |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]