ஹவேலி தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹவேலி தாலுகா
தாலுகா
மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தில் ஹவேலி தாலுகாவின் அமைவிடம்
மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தில் ஹவேலி தாலுகாவின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே மாவட்டம்
தலைமையிடம்பிம்பிரி-சிஞ்ச்வடு
மக்கள்தொகை (2011)
 • தாலுகா2,435,581
 • நகர்ப்புறம்74.9%
புனே மாவட்டத்தின் 14 வருவாய் வட்டங்கள்

ஹவேலி தாலுகா (Haveli taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் 14 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[1] புனே நகர்புற தாலுகாவைச் சுற்றிலும் ஹவேலி தாலுகாவின் பகுதிகள் உள்ளது.[2] இந்த தாலுகாவின் 24,35,581 மக்கள்தொகையில் 74.9% விழுக்காட்டினர் பிம்பிரி-சிஞ்ச்வடு போன்ற நகர்புறங்களில் வாழ்கின்றனர்.

ஹவேலி தாலுகாவில் பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி, தேகு சாலை கண்டோன்மென்ட், வக்கோலி, யாவலேவாடி, தேகு எனும் 4 கணக்கெடுப்பு சிற்றூர்களும் மற்றும் 118 வருவாய் கிராமங்களும் உள்ளது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தர்பூர் வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 24,35,581 ஆகும். அதில் ஆண்கள் 1,316,346 மற்றும் 1,119,235 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 850 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 316215 (13%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.18% ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,75,246 மற்றும் 50,677 ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 20,91,983 (85.89%), இசுலாமியர் 1,52,495 (6.26%), பௌத்தர்கள் 1,09,576 (4.5%), சமணர்கள் 22,842 (0.94%), கிறித்தவர்கள் 42,996 (1.77%) மற்றும் பிறர் 0.64% ஆகவுள்ளனர்.[4] இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


வார்ப்புரு:புனே மாவட்டம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹவேலி_தாலுகா&oldid=3718358" இலிருந்து மீள்விக்கப்பட்டது