வேல்ஹே தாலுகா
வேல்ஹே தாலுகா | |
---|---|
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் வேல்ஹே தாலுகாவின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | புனே மாவட்டம் |
அரசு | |
• மக்களவைத் தொகுதி | பாரமதி |
• சட்டமன்றத் தொகுதி | போர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 54,516 |
வேல்ஹே தாலுகா (Velhe taluka) (மராத்தி: वेल्हे तालुका இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் 15 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் வேல்ஹே நகரம் ஆகும். வேல்ஹே தாலுகா 124 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.[2] இது புனே மாவட்டத்தில் மக்கள்தொகை குறைந்த சிறிய தாலுக்கா ஆகும்.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வேல்ஹே வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 54,516 ஆகும். அதில் ஆண்கள் 27,504 மற்றும் 27,012 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 982 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6213 (11%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.96%. ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,635 மற்றும் 2,032 ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 51,994 (95.37%), இசுலாமியர் 402 (0.74%), பௌத்தர்கள் 2,005 (3.68%) மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[3] இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Talukas in Pune district". Archived from the original on 2010-03-10. பார்க்கப்பட்ட நாள் 2010-09-24.
- ↑ Velhe Taluka
- ↑ Velhe Taluka Population, Caste, Religion Data - Pune district, Maharashtra
வார்ப்புரு:புனே மாவட்டம்