புனே பெருநகரப் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புனே பெருநகரப் பகுதிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
புனே பெருநகரப் பகுதி
பெருநகரப் பகுதி
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே
தாலுகா[1][2]
பரப்பளவு[1][3]
 • Metro7,256.46 km2 (2,801.73 sq mi)
மக்கள்தொகை (2011)[3]
 • பெருநகர்5,057,709
 • பெருநகர் அடர்த்தி700/km2 (1,800/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5.30)
பெருநகர வளர்ச்சி ஆணையம்புனே பெருநகர வளர்ச்சி ஆணையம் (PMRDA)[4]
பெருந்தலைவர்உத்தவ் தாக்கரே, மகாராட்டிரா மாநில முதலமைச்சர்
நகர்புர வளர்ச்சி அமைச்சர்
பொறுப்பான அமைச்சர்அஜித் பவார், சட்டமன்ற உறுப்பினர்
புனே மாவட்டம்
பெருநகர ஆணையாளர்சுபாஷ் திவாஸ், இஆப

புனே பெருநகர பகுதி (Pune Metropolitan Region (PMR)) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள புனே மாநகராட்சி, பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி, புனே கண்டோன்மென்ட், கட்கி கண்டோன்மென்ட், தேகு ரோடு கண்டோன்மென்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஹவேலி தாலுகாவின் பகுதிகளையும் கொண்டதாகும். புனே பெருநகர வளர்ச்சிப் பகுதி 7,256 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டதாகும்.[1][5][6]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புனே பெருநகர வளர்ச்சிப் பகுதியின் மக்கள்தொகை 50,57,709 ஆகும்.[7]

மகாராட்டிரா மாநில முதலமைச்சரின் தலைமையில் இயங்கும் புனே பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் (Pune Metropolitan Region Development Authority) (PMRDA), நகர்பற வளர்ச்சி அமைச்சர் மற்றும் ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமை நிர்வாகியாக செயல்படுகிறார். இது புனே பெருநகர வளர்ச்சிப் பணிக்களுக்கு திட்டமிட்டு, விதிகளை வரையறைத்து கண்காணிக்கிறது. புனே மற்றும் பிம்பிரி-சிஞ்ச்வடு பகுதிகளைச் சுற்றி சுற்றுச் சாலைகள் அமைத்தல், புனே மெட்ரோ இரயில்வே அமைத்தல் புனே பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முக்கியப் பணிகளாக உள்ளது. [8][9]

புனே பெருநகரத்தின் எல்லைகள்[தொகு]

புனே பெருநகர வளர்ச்சிப் பகுதியில் புனே மாவட்டத்தின் புனே நகர்புற தாலுகா, பிம்பிரி-சிஞ்ச்வடு, புனே கண்டோன்மென்ட், கட்கி கண்டோன்மென்ட், தேகு ரோடு கண்டோன்மென்ட் மற்றும் புனேவைச் சுற்றியுள்ள ஹவேலி தாலுகாவின் பெரும் பகுதிகள் அடங்கியுள்ளது. புனே பெருநகரப் பகுதியில் இயங்கும் உள்ளாட்சி அமைப்புகள் பின்வருமாறு:

மாநகராட்சிகள்[தொகு]

கண்டோன்மென்டுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனே_பெருநகரப்_பகுதி&oldid=3026331" இருந்து மீள்விக்கப்பட்டது