புரந்தர் தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புரந்தர் தாலுகா
தாலுகா
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் புரந்தர் தாலுக்காவின் அமைவிடம்
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் புரந்தர் தாலுக்காவின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே மாவட்டம்
தலைமையிடம்புரந்தர்

புரந்தர் தாலுகா (Purandar taluka) (மராத்தி: पुरंदर तालुका), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் 15 தாலுகாக்களில் ஒன்றாகும். புனே மாவட்டத்தின் தென்கிழாக்கில் அமைந்த புரந்தர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடம் புரந்தர் நகரம் ஆகும்.[1] இங்கு புரந்தர் கோட்டை உள்ளது.

புரந்தர் நகரத்தில் கோயில் கொண்டுள்ள புரந்தேஸ்வரி அம்மனைப் போற்றும் வகையில் இவ்வருவாய் வட்டத்திற்கு புரந்தர் வட்டம் எனப்பெயராயிற்று. 1101.65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், கொண்ட புரந்தர் தாலுகாவில் சாஸ்வத் நகராட்சி, ஜெசூரி நகராட்சிகளும், சிவாத்கர் கணக்கெடுப்பு நகரமும் மற்றும் 107 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[2]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1101.65 சகிமீ பரப்பளவும், 51,259 வீடுகளும் கொண்ட புரந்தர் வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 2,35,659 ஆகும். அதில் ஆண்கள் 119906 (50.88%) மற்றும் 115753 (49.12%) பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 965 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 73.78% ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 7.24% மற்றும் 2.58% ஆகவுள்ளனர்.

மக்கள்தொகையில் இந்துக்கள் 2,25,417 (95.65%), பௌத்தர்கள் 2,620 (1.11%), இசுலாமியர் 6130 (2.6%), சமணர்கள் 880 (0.37%), பிறர் .027% ஆகவுள்ளனர். இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரந்தர்_தாலுகா&oldid=3494227" இருந்து மீள்விக்கப்பட்டது