பாராமதி தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் பாராமதி வட்டத்தின் அமைவிடம்
பாராமதி வட்டத்தின் புவிசார்வியல் வரைபடம்

பாராமதி தாலுகா (Baramati taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் 15 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1]இத்தாலுக்காவின் வட்டாட்சியர் அலுவலகம் பாராமதி நகரத்தில் உள்ளது. புனே வருவாய் கோட்டத்தில் அமைந்த பாராமதி வட்டம், புனே நகரத்திற்கு கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பை நகரத்திற்கு கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

இவ்வருவாய் வட்டம் வடக்கே 18º04΄ to 18°32 பாகையிலும், கிழக்கே 26΄to 74° 69 பாகையில் அமைந்துள்ளது. பாராமதி வட்டம் கடல் மட்டத்திலிருந்து 550 மீட்டர் உயரத்தில், தக்காண பீடபூமிக்கு கிழக்கே உள்ளது. [2] பாராமதி வருவாய் வட்டம் 1382 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.இவ்வருவாய் வட்டம் 116 கிராமங்களைக் கொண்டது. இவ்வட்டத்தில் நீரா ஆறு பாய்கிறது. இவ்வருவாய் வட்டத்தில் கரும்பு அதிகம் பயிடப்படுகிறது. இதனால் பாராமதி நகரத்தில் கரும்பு ஆலைகள் அதிகம் உள்ளது.

அமைவிடம்[தொகு]

பாரமதி தாலுகாவின் வடக்கே தௌந்து தாலுக்கா, மேற்கே புரந்தர் தாலுகா மற்றும் கிழக்கே இந்தப்பூர் தாலுகா அமைந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

புனே நகரத்திலிருந்து தௌந்து வழியாக பாரமதி நகரத்திற்கு பயணியர் தொடருந்து வண்டிகள் இயக்கப்படுகிறது. [3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பாராமதி வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 4,29,600 ஆகும். அதில் ஆண்கள் 2,21,094 மற்றும் 2,08,506 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 47668 (11%) உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.27% ஆக உள்ளது. மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 64,334 மற்றும் 3,957 ஆக உள்ளனர்.

மக்கள்தொகையில் இந்துக்கள் 3,95,711 (92.11%), பௌத்தர்கள் 6,229 (1.45%), இசுலாமியர் 20,751 (4.83%), சமணர்கள் 4,574 (1.06%), கிறித்தவர்கள் 1,014 (0.24%) மற்றும் பிறர் 0.31% ஆகவுள்ளனர்.[4] இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராமதி_தாலுகா&oldid=3025136" இருந்து மீள்விக்கப்பட்டது